சிட்னியில் நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியதோடு பத்து ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது. இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்ததோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறது.
பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் வீழ்த்திய விக்கெட்டுகள் ஒரு கண்ணோட்டம்...
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரின் டாப் விக்கெட் டேகராக உருவெடுத்தார். அவர் இந்திய அணிக்கு சிறந்த வீரர் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக சிறந்த ஆட்டக்காரராகவும் இருந்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட் - 28.37.
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் சில ஆட்டங்களில் அவர் விக்கெட்டுகளைப் பெற சிரமப்பட்டார். தொடரில் 5 போட்டிகளில் 20 விக்கெட்டுகளுடன் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருந்தார். இவரது - ஸ்ட்ரைக் ரேட் 47.15,
இந்த டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பின் விளையாட்டு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. இரண்டு போட்டிகளில் பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இவரது ஸ்ட்ரைக் ரேட் - 93.40
இந்த டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் வேகப்பந்து வீச்சாளர் மட்டுமல்லாமல், சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். இவரது ஸ்ட்ரைக் ரேட்- 52.80
ஐ.பி.எல்லில் கவனம் ஈர்த்த வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா முதன்முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். டெஸ்ட் அறிமுக வீரர் பந்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டார், இரண்டு ஆட்டங்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட் - 67.50
பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் பிரசித் கிருஷ்ணா ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். ஐந்தாவது டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி தாக்கத்தை ஏற்படுத்தினார். இவரது ஸ்ட்ரைக் ரேட் - 27.00
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா 3 போட்டிகளில் விளையாடி 135 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலும் ஜடேஜாவால் பெரிதாக எந்த பங்களிப்பையும் இந்திய அணிக்கு அளிக்க முடியவில்லை.
இந்த டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 114 ரன்களையும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் 2 இன்னிங்ஸிலும் சேர்த்து வெறும் 2 ஓவர்கள் மட்டுமே பவுலிங் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஃப் ஸ்பின்னரான அவரை தொடர்ச்சியாக இந்திய அணி மோசமாக பயன்படுத்தி வருவது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றுள்ளது.