2027 ஒருநாள் உலகக்கோப்பை: மைதானங்கள் பட்டியல் மற்றும் அதிரடி புதிய விதிகள் வெளியீடு!

12 மைதானங்கள், சூப்பர் 7 சுற்று என ஐசிசி வெளியிட்ட அதிரடி மாற்றங்கள்.
உலகக்கோப்பை மைதானங்கள் - ICC World Cup 2027
உலகக்கோப்பை மைதானங்கள் - ICC World Cup 2027
Updated on

2027 உலகக் கோப்பையில் சூப்பர் சீரிஸ், சூப்பர் 7 போன்ற புதிய கட்டமைப்புகள் அறிமுகமாகின்றன. தரவரிசையில் 12 முதல் 14 இடங்களில் உள்ள அணிகள் சூப்பர் சீரிஸில் மோத, வெற்றி பெறும் அணி லீக் சுற்றுக்கு தகுதி பெறும். இரண்டு பிரிவுகளாக 12 அணிகள் லீக் சுற்றில் விளையாடி, பின்னர் 7 அணிகள் சூப்பர் 7 சுற்றில் ரவுண்ட் ராபின் முறையில் மோதுகின்றன.

57 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டி நடக்கும் 12 உலகக்கோப்பை மைதானங்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மைதானங்களின் பட்டியலையும் உலகக்கோப்பை தொடரின் புதிய விதிகள் குறித்தும் இப்பதிவில் காண்போம்.

தென்னாப்பிரிக்காவில் போட்டி நடைபெறும் 8 மைதானங்கள்:

1. வாண்டரர்ஸ் மைதானம், ஜோகன்னஸ்பர்க் 2. செஞ்சூரியன், டிஷ்வானே, 3. நியூலாண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப். கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானம், டர்பன் 5. செயின்ட் ஜார்ஜ் பார்க், கெபெர்ஹா 6. மங்காங் ஓவல், புளூம்பொன்டைன், 7. போலண்ட் பார்க், பார்ல் 8. பஃபலோ பார்க், குகோம்போ சிட்டி.

ஜிம்பாப்வே போட்டி நடைபெறும் 3 மைதானங்கள்:

9. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே

10. குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ

11. ஃபேல் மோசி-ஓவா-துன்யா சர்வதேச கிரிக்கெட் மைதானம், விக்டோரியா ஃபால்ஸ்

நமீபியா போட்டி நடைபெறும் ஒரு மைதானம்

12. நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்

கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக ஐசிசி ஆண்கள் உலகக்கோப்பை போட்டிகளை நமீபியா நாடு நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவும் ஜிம்பாப்வேயும் 2003 ஆம் ஆண்டு ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இணைந்து வெற்றிகரமாக நடத்தி இருந்தன.

இதையும் படியுங்கள்:
ஐசிசியின் அதிரடி மாற்றம்: உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 'சூப்பர் 7', 'சூப்பர் 10' புதிய விதிகள்!
உலகக்கோப்பை மைதானங்கள் - ICC World Cup 2027

2027 உலகக் கோப்பை புதிய விதிமுறைகள்:

சூப்பர் சீரிஸ், சூப்பர் 7 சுற்றுகள் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவதற்கு தரவரிசையில் 12 முதல் 14 வரையிலான இடங்களில் உள்ள அணிகள் தகுதிச்சுற்றான `சூப்பர் சீரிஸில் விளையாடும்.வெற்றி பெறும் ஒரு அணி மட்டும் உலகக் கோப்பை லீக் சுற்றுக்கு தகுதி பெறும்.

லீக் சுற்று:

முதல் நிலை தொடருக்கு தகுதிபெற்ற 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக தலா ஆறு அணிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் லீக் சுற்றில் தலா ஒரு முறை மோத வேண்டும். அந்த வகையில் தொடக்கச் சுற்றில் 30 போட்டிகள் நடத்தப்படும்.

சூப்பர் 7 சுற்று:

லீக் சுற்று முடிந்தவுடன் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 2 பிரிவிலும் அடுத்த சிறந்த இடத்தை பிடித்த ஒரு அணி என மொத்தம் 7 அணிகள் சேர்ந்து சூப்பர் 7 சுற்றுக்கு தகுதி பெற்று. அச்சுற்றில் ரவுண்ட் ராபின் முறையில் மொத்தம் 21 போட்டிகள் நடத்தப்படும்.

உலகக்கோப்பை மைதானங்கள் - ICC World Cup 2027
உலகக்கோப்பை மைதானங்கள் - ICC World Cup 2027AI Image

அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி:

புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை சூப்பர் 7 சுற்றின் முடிவில் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அதிலும் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணியும், நான்காவது இடம் பிடிக்கும் அணியும் முதலாவது அரை இறுதியில் விளையாடும். இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டாவது அரையிறுதி போட்டியில் விளையாடும்.

இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்திற்காக இதில் வெற்றி பெறும் அணிகள் விளையாடி பலப்பரீட்சை செய்து கோப்பையை கைப்பற்றும்.

இதையும் படியுங்கள்:
ஐசிசியின் அதிரடி மாற்றம்: உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 'சூப்பர் 7', 'சூப்பர் 10' புதிய விதிகள்!
உலகக்கோப்பை மைதானங்கள் - ICC World Cup 2027

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி 2027 ஆண்கள் உலக கோப்பை ஒரு நாள் தொடரின் புதிய விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி சாம்பியன் பட்டம் பெறுவது சற்று கடினமாக இருக்கும். ஆனால் போட்டிகளை காணும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

logo
Kalki Online
kalkionline.com