2 வது போட்டி - இந்தியாவை பழி தீர்த்தது மே.இந்திய தீவுகள் அணி!

West Indies
West IndiesImg Credit: espncricinfo
Published on

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மே.இந்திய தீவுகள் அணி 3 போட்டிகளை கொண்ட டி 20 தொடரில் இந்தியாவை எதிர்கொள்கிறது. தொடரின் இரண்டாவது போட்டி டிச.17 (நேற்று) செவ்வாய்க் கிழமை அன்று நவி மும்பையில் உள்ள DY.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகடமியில் தொடங்கியது.இந்நிலையில் டாஸ் வென்ற மே.இந்திய தீவுகள் அணி வழக்கம் போல பவுலிங்கை தேர்வு செய்தது.இந்த போட்டியில் காயம் காரணமாக கேப்டன் ஹர்மன் பிரித்கவுர் பாதியில் வெளியேற ஸ்மிருதிக்கு தற்காலிக கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட ரக்வி பிஸ்ட் அறிமுகமானார்.அதே போல மே.இந்திய தீவுகள் அணியின் சார்பில் விளையாட நெரிசா கிராப்டன் அறிமுகமானார்.

இந்திய அணியின் சார்பாக ஸ்மிருதியும் உமா செத்ரியும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தனக்கு கொடுக்கப்பட்ட கேப்டன் பதவிக்கு தகுந்தாற் போல ஸ்மிருதி நன்றாக விளையாடினார். ஆனால் , அவருக்கு மறுபுறம் யாரும் சிறிது நேரம் கூட ஒத்துழைக்க வில்லை . காற்றில் சரியும் சீட்டுக்கட்டை போல விக்கெட்டுகள் சரிந்து விழுந்தது. வழக்கமாக நன்றாக விளையாடும் ஜெமிமா(13) இம்முறை சொதப்பி விட்டார்.

ஸ்மிருதி மட்டும் பொறுப்புடன் 62 ரன்களை சேர்த்தார் , அணியின் ஸ்கோர் 104/4 ஆக இருக்கும் போது அவரும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆட்டக்காரர்களில் ரிச்சா கோஷ் மட்டும் அதிரடியாக 32 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 159/9 ரன்களை 20 ஓவர் முடிவில் எடுத்தது.மே.இந்திய தீவுகள் அணியின் சார்பில் டீன்டிரா டாட்டின் , பிளட்சர், ஹென்றி , மேத்யூஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையும் படியுங்கள்:
உலக விளையாட்டு அரங்கில்... 6 இளம் சாதனையாளர்கள்!
West Indies

போன போட்டியில் இருந்த அதிர்ஷ்டம் இந்த முறை எதிர் திசையில் மாறியது. ஹெய்லி மேத்யூஸ் , கியானா ஜோடி ஆட்டத்தை துவங்கியது.ஹெய்லியின் ஆட்டம் அதிரடி சரவெடியாக இருந்தது. கியானாவின் ஆட்டம் அதிரடியாக இருந்தாலும் 38 ரன்களில் சைமா தாக்கூர் பந்து வீச்சில் ரிச்சாவிற்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார்.ஆனால் , ஹெய்லியை  அசைக்கக் கூட முடியவில்லை . அவரும் இரக்கமற்ற முறையில் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தார்.மறுபுறம் கேம்பல் நிதானமாக 29* ரன்கள் எடுத்தார்.15.4 ஓவரில் ஹெய்லி(85*) ஒரு பவுண்டரி அடித்து தங்கள் வெற்றியை பதிவு செய்தார். இந்த போட்டியில் மட்டும் ஹெய்லி 17 பவுண்டரிகளை விளாசியுள்ளார்.மே.இந்திய தீவுகள் அணி ஒரு விக்கட்டை மட்டுமே இழந்து மிகச் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.இம்முறை இந்திய அணி பவுலிங்கில் கோட்டை விட்டது. 

இதையும் படியுங்கள்:
உங்க பலமே இதுதானே? இத ஏன் மறந்தீங்க?? – ரோஹித் ஷர்மாவுக்கு ஹைடன் ஆதரவு!
West Indies

3 போட்டிகள் கொண்ட இந்த டி 20 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் மே.இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. மிகச்சிறப்பாக விளையாடி 85* ரன்களையும் 2 விக்கட்டுக்களையும் எடுத்த ஹெய்லி ஆட்ட நாயகியாக தேர்வானார்.

தொடரின் இறுதிப் போட்டி வரும் வியாழக்கிழமை டிச.19 அன்று அதே மைதானத்தில் நடைபெறும். இரு அணிகளும் சம நிலையில் உள்ளதால் இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com