உலக விளையாட்டு அரங்கில்... 6 இளம் சாதனையாளர்கள்!

Young sports achievers
Young sports achievers

உலக விளையாட்டு அரங்கில் இளம் வயதிலேயே சாதன புரிந்த 6 விளையாட்டு வீரர்கள் பற்றிய பதிவு தான் இது:

1. செஸ் சாம்பியன் குகேஷ்:

செஸ் சாம்பியன் குகேஷ்
செஸ் சாம்பியன் குகேஷ்BBC

தன் 7 வயதிலேயே செஸ் விளையாட ஆரம்பித்து, அன்மையில் சிங்கப்பூரில் (2024 ம் ஆண்டு டிசம்பர் 12 ம் தேதி) நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் தொடரின் வெற்றியாளர் பட்டத்தை இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் (Gukesh) தன்வசப் படுத்தியுள்ளார். தன் 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று இளம் வயதிலேயே செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனைப் படைத்துள்ளார் தமிழ் நாட்டின் இளைஞர் குகேஷ். நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென்குடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியிலே அவர் வெற்றியை பெற்றுள்ளார். இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

2. நீச்சல் வீராங்கனை ஃபூ மிங்சியா:

நீச்சல் வீராங்கனை ஃபூ மிங்சியா
நீச்சல் வீராங்கனை ஃபூ மிங்சியா

சீனாவின் நீச்சல் வீராங்கனை ஃபூ மிங்சியா தன் 9 தாவது வயதில் நீச்சல் போட்டிகளில் அறிமுகமானார். நீச்சல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தன் 12 வயதில் 1991 ல் வென்றார் (1991). அடுத்து 1992 ல் பார்சிலோனா ஒலிம்பிக்கில், 10 மீ பிளாட்பாரத்தில் தன் 13 வயதில் தங்கப் பதக்கம் வென்றார். இதுவரை இவர் தான் இளைய ஒலிம்பிக் சாம்பியன் (வயது 13)! உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில், 10 மீட்டர் பிளாட்பார்ம் தங்கம் (1993, 1994) மற்றும் 3 மீட்டர் ஸ்பிரிங்போர்டு தங்கம் (1995) வென்றார்.1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில், 10-மீட்டர் பிளாட்பார்ம் மற்றும் 3-மீட்டர் ஸ்பிரிங்போர்டுக்கான தங்கப் பதக்கங்களை வென்றார் .

3. ஜிம்னாஸ்ட் நாடியா கொமனட்சி:

ஜிம்னாஸ்ட் நாடியா கொமனட்சி:
ஜிம்னாஸ்ட் நாடியா கொமனட்சி

நாடியா கொமனட்சி ருமேனிய நாட்டின் ஜிம்னாஸ்டிக். மாண்ட்ரியால், கியூபெக், கனடாவில் நடந்த 1976 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றவர். மேலும் இவரே ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் கச்சிதமான 10 (perfect score of 10) என்னும் இலக்கை அடைந்த முதல் நபர். இந்த இலக்கை அடையும் போது இவருக்கு வயது 14. பின்னாட்களில் ஒலிம்பிக் போட்டிக்கான வயது வரம்பு 18-ஆக உயர்த்தப்பட்டதினால், இவ்விலக்கை அடைந்தவருள் மிக இளையவர் என்னும் பட்டத்தை இவர் நிரந்தரமாகப் பெற்றார்.

இதையும் படியுங்கள்:
நம்மை கோபப்படுத்தி பார்ப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் தெரியுமா?
Young sports achievers

4. கால் பந்தாட்ட ஜாம்பவான் பீலே:

கால் பந்தாட்ட ஜாம்பவான் பீலே
கால் பந்தாட்ட ஜாம்பவான் பீலே

பீலே பிரேசில் நாட்டில் பிறந்த கால் பந்தாட்ட ஜாம்பவான். தன் 16 வயதில் உலக கால்பந்தாட்ட அரங்கில் அறிமுகமானார்.1958ல் 6-வது உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பிரேசில் அணிக்காக மஞ்சள் ஜெரிசியை அணிந்துகொண்டு களத்தில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார். ஸ்வீடனை எதிர்கொண்ட அந்த 17 வயது சிறுவன் 55 மற்றும் 89-வது நிமிடங்கள் என இரண்டு கோல்கள் அடிக்க, பிரேசில் முதல் உலகக்கோப்பையை வென்று சாதித்தது.

5. குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்:

குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்
குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்Daily Thanthi

மைக் டைசன் அமெரிக்காவில் பிறந்த குத்துச்சண்டை வீரர். அவரது வியக்கத்தக்க வேகமும், ஆக்ரோஷமும் அவரது எதிராளிகளில் பெரும்பாலானவர்களை வீழ்த்தியது. நவம்பர் 22, 1986 இல், அவர் வரலாற்றில் இளைய ஹெவிவெயிட் சாம்பியனானார். இந்தப் போட்டியில் இரண்டாவது சுற்றில் எதிராளி ட்ரெவர் பெர்பிக்யை 5 நிமிடங்கள் 35 நொடிகளில், நாக் அவுட் செய்து சாம்பியன் பட்டம் வென்றார் அப்போது அவருக்கு வயது 20 வருடம் 4 மாதங்கள். இதன்முலம் இளம் வயதில் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

இதையும் படியுங்கள்:
Drabble - என்னது 100 மற்றும் 55 வார்த்தைகளில் சிறுகதையா?!
Young sports achievers

6. கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் வூட்ஸ்:

கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் வூட்ஸ்
கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் வூட்ஸ்CNBC

டைகர் வூட்ஸ் அமெரிக்கா நாட்டு கோல்ஃப் விளையாட்டு வீரர். 6 வயதில் கோல்ஃப் விளையாட ஆரம்பித்தார்.1991 ஆம் ஆண்டில்,15 வயதில், அவர் யுஎஸ் ஜூனியர் அமெச்சூர் சாம்பியன்ஷிப்பின் இளைய வெற்றியாளர் ஆனார். உலக புகழ் பெற்ற அகஸ்டியா மாஸ்டர்ஸ் கோல்ஃப் போட்டியில் வென்று விளையாட்டு வரலாற்றில் மிகச்சிறந்த அமெச்சூர் கோல்ஃப் வாழ்க்கைக்கு சென்றார். 2000 ஆம் ஆண்டு செயின்ட் ஆண்ட்ரூஸில் நடந்த பிரிட்டிஷ் ஓபனை வென்றதன் மூலம், மேஜர் சாம்பியன்ஷிப்பின் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற இளையவர் மற்றும் ஐந்தாவது வீரராக ஆனார். அப்போது டைகர்வூட்ஸ் வயது 21, மூன்று மாதங்கள் மற்றும் 14 நாட்கள். இதன் மூலம் எப்பொழுதும் இளைய மாஸ்டர்ஸ் சாம்பியனாக இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com