ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் இடையே ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், இத்தனை வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத ஒரு சாதனை இந்த ஆண்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு டெஸ்ட் தொடரை பொறுத்தவரை இங்கிலாந்து அணியே சிறப்பாக விளையாடியிருக்கிறது. மொத்தமாக இந்த ஆண்டு 17 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி, அதில் 9 போட்டிகளில் வெற்றியும், 8 போட்டிகளில் தோல்வியும் தழுவி அதிக வெற்றிகளை பெற்ற அணியாக முதல் இடத்தில் இருக்கிறது. அதேபோல், இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி 15 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது.
இதில் இந்திய அணி கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. மூன்று போட்டிகள் ஆஸ்திரேலியாவுடனும் 2 போட்டிகள் நியூசிலாந்துடனும் தோல்வியடைந்திருக்கிறது.
இப்படியான நிலையில், டெஸ்ட் வரலாற்று சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
சென்ற ஆண்டுதான் அதாவது 2024ம் ஆண்டுதான் உலக வரலாற்றில் 50 டெஸ்ட் வெற்றிகள் பதிவாகியிருக்கின்றன. இதுவரை இவ்வளவு வெற்றிகள் வந்ததே இல்லை. இங்கிலாந்து 9, இந்தியா 8, நியூசிலாந்து 6, தென் ஆப்பிரிக்கா 6, இலங்கை 6, ஆஸ்திரேலியா 6, பங்களாதேஷ் 3, அயர்லாந்து 2, பாகிஸ்தான் 2, வெஸ்ட் இண்டீஸ் 2 என 50 டெஸ்ட் வெற்றிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஆண்டுமே நிகழ்த்தப்படாத ஒரு சாதனை இந்த ஆண்டு முதல்முறையாக நிகழ்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடரால் ஒவ்வொரு அணிகளும் வெற்றிபெறுவதை அவசியமாக கருதி விளையாடி வருகிறது. அதேபோல், சமீபக்காலமாக ரசிகர்களும் டெஸ்ட் போட்டிகளை அதிகம் விரும்பிப் பார்க்கிறார்கள். இதனால் வரவேற்பு அதிகம் இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் இதுபோன்ற சாதனைகள் பல நிகழழாம் என்று கருதப்படுகிறது.
ஒருநாள் மற்றும் டி20 தொடர்களையே ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பார்கள். ஆனால், இப்போது டெஸ்ட் போட்டிகளையும் விரும்பிப் பார்ப்பதால்தான் வீரர்களுக்கும் இது புத்துணர்வு அளிக்கிறது என்று கூறப்படுகிறது.