

முன்பெல்லாம் விளையாட்டுகள் மற்றும் தடகளப் போட்டிகளை திறந்த வெளிப்பகுதி மைதானங்களில் நடத்தி வந்தார்கள். அப்பொழுது மழையும் வெயிலும் அவற்றை விளையாடாதவாறு செய்தது. அது விளையாட்டு வீரர்களின் சாதனை திறனை குறைப்பதுடன் பல வேளைகளில் அவர்களுக்கு காயங்களையும் உண்டாக்கியது. அதை மாற்றி இப்பொழுதெல்லாம் செயற்கை பாலிமர் பரப்புகள் (artificial turf) இத்தகைய விளையாட்டுத் திடலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் விளையாட்டு பாதிப்படைவதில்லை. மேலும், இந்த செயற்கைப் புல் (artificial turf) என்று சொல்லக்கூடியவற்றில் எப்படி குதித்து விளையாடினாலும் பின்பு அவற்றை சரி செய்து விடலாம். அந்தப் புல் பரப்பும் பழைய நிலைக்கே வந்துவிடும் என்பதுதான் அதன் சிறப்பு.
இந்த பாலிமர் பரப்புகளை திறந்த மைதானங்கள் மட்டுமின்றி கூரையிட்ட அரங்குகளிலும் பொருத்தப்பட்டு மழை, வெயில், புயல் பற்றி எந்த வித அச்சமும் இன்றி எல்லா நாட்களிலும் போட்டிகளையும் பந்தயங்களையும் நடத்தி வருகின்றனர். இதனால், விளையாட்டு வீரர்களின் திறமை மேலாங்குகிறது.
செயற்கை புல் தரையின் மூன்று வகைகள்:
விளையாடுவதற்கு ஏற்ற பரப்பு, உறுதி, வளைந்து கொடுக்கும் தன்மை, இயக்கத்திறனுடன் கூடிய எந்திரவியல் தன்மைகள் ஆகியவை சமநிலையில் அமையப்பெற்றவையாக இருந்தால்தான் பந்துக்கள் சரியான முறையில் சிறப்பாக மேலே எம்பும். இந்த பண்புகள் செயற்கை பாலிமர் பரப்புகளில் நன்றாக அமைந்திருக்கின்றன. அவை, முன்கூட்டி உருவாக்கப்பட்டு, களத்தில் பரப்பப்படுகின்றன.
ரெசின் பசையால் ஒட்டப்பட்ட ரப்பர் துணுக்குகள், களத்திலேயே வார்க்கப்படுகிற எலாஸ்டோமர்கள் என்ற வகைகளில் செயற்கை விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படுகின்றன.
1968-ல் மெக்சிகோ ஒலிம்பிக் போட்டியில் தொடங்கி அடுத்து வந்த அனைத்து நாட்டுத் தடகளப் போட்டிகளும் செயற்கை பாலிமர் பரப்புகளிலேயே நடத்தப்பட்டு வருகின்றன.
உள்ளரங்க விளையாட்டுகளுக்கு முன்கூட்டியே உருவாக்கப்பட்ட களங்கள் ஏற்றவை. திறந்த வெளித்திடல்கள் ரெசினால் ஒட்டப்பட்ட ரப்பர் துணுக்குகளைப் பாவியோ (Pavio) எலாஸ்டோமர்களை வார்த்து உருவாக்கப்படுவதே சிறப்பு. எலாஸ்டோமர்களை வார்க்கும் போது தேவையான அளவில் சரிவுகளை வைத்து நீர் வழிந்தோடி விட செய்கிறார்கள்.
அதை மீளுருவாக்கம் செய்வது மிகவும் எளிது. ரெசின் ஒட்டு ரப்பர் பரப்பில் நுண்துளைகள் இருப்பதால் அதில் நீர் வெளியேற வசதி உண்டு. ஆனால், அழுத்தமான காலணிகளை அணிந்து விளையாடுவதை அது தாங்காது என்பதால், விளையாட்டு கான்வாஸ் காலணியோடு விளையாடக் கூடிய விளையாட்டுகள் போன்றவற்றிற்கே அது பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு இயற்கைக்கு ஈடு கட்டி நிற்கும், ஏன் அதற்கும் மேலாகவே வேலை செய்யும் செயற்கைப் புல்பரப்பை உபயோகித்து விளையாட்டை வெற்றி கரமாக நடத்தி வருகிறார்கள்.