மீண்டும் மகுடம் சூடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி: இங்கிலாந்தை வீழ்த்தி 7வது முறையாக உலக சாம்பியன் பட்டம்!

இங்கிலாந்தை வீழ்த்தி 7-வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது ஆஸ்திரேலியா.
Australian womens team won t20 world cup
Australia female Champion icc
Updated on

இங்கிலாந்தில் ஐசிசியின் மகளிர் டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வந்தன. டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா உள்ளிட்ட ஆசிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் அனைத்தும் லீக் சுற்றிலேயே வெளியேறின. நேற்று(ஜூலை 5) லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் , ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணியால் அதிரடியாக விளையாட முடியாமல் போனது. இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் பெரிய அளவில் சரியாத பொழுதிலும், அவர்களால் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆமி ஜோன்ஸ் 6 ரன்களிலும் அடுத்து டானி ஒயிட் ஹாட்ஜ் 8 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேற இங்கிலாந்து அணி தடுமாறியது.

அடுத்து வந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் சீவர் புருண்ட் நிதானமாக விளையாடி 58 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஆலிஸ் கேப்சி 23 ரன்கள் எடுத்தார்.

அடுத்து களம் இறங்கிய ஃப்ரீயா கேம்ப் 44 ரன்கள் சேர்க்க , 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 150 ரன்களை குவித்திருந்தது.

ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்துவதை விட, ரன்களை கட்டுப்படுத்துவதில் அதிக ஈடுபாட்டை காட்டினர். அதனால், உலகக் கோப்பை இறுதி போட்டி பரபரப்பாக இல்லாமல் ஒரு நாள் மேட்ச் போல சுவாரசியம் குறைந்து காணப்பட்டது.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி , தொடக்கத்திலேயே தனது வலுவான ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டது. தொடக்க ஆட்டக்காரரான ஜார்ஜியா வால் 9 ரன்களில் வெளியேறி இருந்தாலும் , பெத் முனி மற்றும் போய்ப் லிட்ச்பில்ட் ஆகியோரின் கூட்டணி ஆட்டத்தை தங்கள் வசப்படுத்தினர். முனி 49 பந்துகளில் 64 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு பெரிய பங்களிப்பு அளித்தார். லிட்ச்பில்ட் 2 சிக்சர்கள் அடித்து 48 ரன்களை குவித்தார்.

T20 women's of series
Beth Moonieicc

அடுத்து களம் இறங்கிய அனுபவம் வாய்ந்த எல்லிஸ் பெர்ரியும் ஆஷ்லே கார்டனரும் இணைந்து ஆட்டத்தை வெற்றி பெறச் செய்தனர். 17.1 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 153/3 ரன்களை பெற்றது. இது வரை டி 20 உலகக் கோப்பை தொடர்களில் ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. மொத்தமாக 7 முறை டி 20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா அணி மோதி உள்ளது. இந்த மோதலில் 7 முறையும் ஆஸ்திரேலியா அணி உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த பெத் முனி ஆட்டநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் , அதேபோல் தொடர் நாயகி விருதையும் அவரே பெற்றார். டி 20 உலகக் கோப்பை தொடரில் அவர் வெல்லும் இரண்டாவது தொடர் நாயகி விருது இதுவாகும்.

ஆஸ்திரேலியா மகளிர் அணி 7 டி 20 உலக கோப்பைகளை வென்று உலகின் அசைக்க முடியாத சாம்பியன் அணியாக உள்ளது. இந்த சாதனையை வேறொரு அணி முறியடிப்பதற்கு குறைந்தது 3 தசாப்த காலத்திற்கு மேல் தேவைப்படும்.

கிரிக்கெட்டை பொருத்தவரையில் ஆடவர் அணியாக இருந்தாலும், மகளிர் அணியாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது மிக கடினமான செயலாக இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் 500 ரன்கள், 8 மெய்டன் ஓவர்கள்: கிரிக்கெட் வரலாற்றின் டாப் 3 மர்மங்களும் சாதனைகளும்!
Australian womens team won t20 world cup
logo
Kalki Online
kalkionline.com