விராட் கோலி பிசிசிஐ-யை ஏமாற்றும் விதமாக ஒரு செயலை செய்தார் என்றும், ஆகையால் அவரை உடனே சாம்பியன்ஸ் ட்ராபியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்தான முழு செய்தியையும் பார்ப்போம்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. தற்போது இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இடையே டி20 போட்டிகள் போட்டிகள் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிக்கு பின்னர் இந்திய அணி வீரர்கள் ஓய்வில் இருந்தனர். இப்போது இங்கிலாந்துடன் விளையாடுகின்றனர். கிட்டத்தட்ட இங்கிலாந்து உடன் விளையாடும் இந்திய வீரர்களே சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடுகின்றனர்.
இதற்கிடையே ரஞ்சி கோப்பை தொடரின் (Ranji Trophy 2025) இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி இந்திய வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் கலந்துக்கொள்ளும் கட்டாயத்தில் உள்ளனர். அதுவும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்கள் கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது. அது யாராக இருந்தாலும் சரி என்று பிசிசிஐ திட்டவட்டமாக பேசியிருக்கிறது. இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வில்லை என்றாலும், வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் கூறியதாக தெரியவந்துள்ளது.
இப்படியான நிலையில், விராட் கோலி கடந்த 23ம் தேதி நடைபெற்ற சௌராஷ்டிரா மற்றும் டெல்லி அணிகள் மோதிய விளையாட்டில் கலந்துக்கொள்ளவில்லை. முன்னதாக பங்கேற்கிறேன் என்று கூறியதாகவும், ஆனால் கடைசி நேரத்தில் கழுத்தில் சுளுக்கு என்று கூறி விலகியதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னரெல்லாம் இதுபோன்ற காரணங்களை முன்னணி வீரர்கள் கூறினால் பிசிசிஐ ஒன்றும் செய்யாது. ஆனால், இப்போது மருத்துவ பரிசோதனைக்கு கோலி உட்படுத்தப்பட்டார். அதன் அறிக்கை தற்போது, பிசிசிஐயிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ‘‘கோலிக்கு அவ்வளவு பெரிய காயம் ஒன்றும் கிடையாது. அவரால், டெல்லி அணிக்கு எதிராக விளையாடியிருக்க முடியும். போட்டி துவங்கும் முன்பே, அந்த பிரச்சினை அவருக்கு சரியாகிவிட்டது.’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து பிசிசிஐ மீட்டிங்கில் பேசப்பட்டது. அதாவது, “பிசிசிஐயை கோலி அவமதித்துவிட்டார். உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதை, அவர் கௌரவ குறைச்சலாக நினைத்திருக்கலாம். அடுத்த ரஞ்சி கோப்பை போட்டியில் அவர் ஆடியாக வேண்டும். அதில், சிறப்பாக செயல்படவில்லை என்றால், சாம்பியன்ஸ் டிராபி அணியில் இருந்து கோலியை நீக்க பரிசீலிக்க வேண்டும்.” என்று விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.