Today’s Trending News கான்ஸர் அபாயம் : Red Dye 3க்கு தடை!
கடைசி கடைசியாக அமெரிக்காவின் FDA எனப்படும் Food and Drug Administration கடந்த ஜனவரி 15ம் தேதி - Red Dye 3 – ரெட் டை 3க்கு தடை விதித்து விட்டது.
ஆண் எலிகளுக்கு இந்த Red Dye கொடுத்து ஆய்வு நடத்தியதில் அவற்றுக்கு கான்ஸர் அபாயம் ஏற்பட்டதை ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.
பெட்ரோலியத்திலிருந்து உருவாக்கப்படும் எரித்ரோசின் என்ற இந்த இரசாயனமானது செர்ரி - சிவப்பு வண்ணத்தை உணவுப் பொருள்களிலும் பானங்களிலும் தருகிறது.
எரித்ரோசின் குழந்தைகளின் கற்றல் ஆற்றலில் குறைபாடுகளைத் தோற்றுவிக்கின்றன. அத்துடன் குழந்தைகளிடம் அதிவேகத்தன்மை எனப்படும் ஹைபர் ஆக்டிவிடி குறையும் ஏற்படுகிறது.
கேண்டி (Candy) என குழந்தைகளால் விருப்பத்துடன் அழைக்கப்படும் சிவப்பு வண்ண மிட்டாய்களும் இதர சிவப்பு வண்ணம் பூசப்பட்ட கேக், லாலிபாப் போன்ற ரெட் டை உணவுப் பொருள்களும் இனிமேல் இந்த செயற்கை வண்ணத்தை தரும் அபாய கெமிக்கலை உபயோக்கிக்கக் கூடாது என்ற இந்தத் தடையை ஆரோக்கியம் விரும்பும் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
பெண்கள் உதட்டுக்குப் பூசும் லிப்ஸ்டிக்கில் முன்னரேயே தடை செய்யப்பட்ட இதை, இவ்வளவு காலம் - 35 ஆண்டுகள் - தடை செய்யாமல் விட்டு வைத்திருப்பதே அநியாயம் என்பது அவர்களின் கூற்று. இருமலைப் போக்கும் சில சிரப்புகளில் கண்ணைக் கவரும் விதமாக சிவப்பு வண்ணத்தைத் தருவது இனி முடியாது.
உணவில் Red Dye சேர்ப்பதை ஏற்கனவே ஐரோப்பா, ஆஸ்திரேலிய மற்றும் நியூஜிலாந்து நாடுகள் தடை செய்துள்ளன.
ஜப்பான் உள்ளிட்ட சில ஆசிய நாடுகள் தங்களது தயாரிப்புகளை எரித்ரோசின் என்ற பெயருடன் விற்க அனுமதிக்கின்றன. கனடாவில் இது தடை செய்யப்படவில்லை.
எந்த விதமான ஊட்டச்சத்தையும் தராத இந்த Red Dye எதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது என்பது ஒரு நல்ல கேள்வி!
வாடிக்கையாளர்கள் சிவப்பு வண்ணம் அல்லாத பொருள்களை விரும்புவதில்லை. குழந்தைகளுக்கு இந்த சிவப்பு வண்ணப் பொருள்களின் மீது ஒரு அலாதி ப்ரியம்.
அதனால் தான்!
2027 ஜனவரி 15ம் தேதிக்குள் இதற்கான மாற்றுப்பொருளைக் கண்டு பிடித்துப் பயன்படுத்த எஃப்டிஏ அனுமதித்துள்ளனது. பல நிறுவனங்கள் ரெட் 40 என்பதைப் பயன்படுத்தி சிவப்பு வண்ணத்தைத் தங்கள் தயாரிப்புகளுக்குத் தருகின்றன. பல நிறுவனங்கள் பீட் ஜுஸைப் பயன்படுத்த விழைகின்றன.
ஜனவரி 2025 புத்தாண்டில் வந்துள்ள Red Dye 3 பற்றிய இந்தத் தடை உலகெங்கும் விழிப்புணர்ச்சியை ஊட்டியிருப்பது வரவேற்கத்தக்கது