
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில், இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில் தற்போது சென்னையில் நடந்த போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி மீண்டும் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி, போட்டிகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மோசமான தோல்விகளை சந்தித்து வருவது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பல்வேறு விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுக்குமா என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எத்தனை சோதனைகள் வந்தாலும் எங்களை வீழ்த்த முடியாது என்பதை இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் நிருபித்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேந்று நடந்த இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களுக்கு மறக்க முடியாததாக இருந்தது. இந்த போட்டியில் காயம் அடைந்த நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங் விளையாட வில்லை. அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரெல் களம் இறக்கப்பட்டனர்.
முதலில் ஆட ஆரம்பித்த இங்கிலாந்து அணி இந்திய அணியில் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 3.1 ஓவரில் 26 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற ஆரம்பித்தது. தனது வேட்டையை தொடங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விளையாடிய ஜாமி சுமித் 22 ரன்னிலும், ஜாமி ஓவர்டான் 5 ரன்னிலும், பிரைடன் கார்சி 31 ரன்னிலும், அடில் ரஷித் 10 ரன்னிலும் ஆட்டம் இழக்க வைத்தது. இந்திய அணியின் அசத்தலான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்களில் சுருண்டது.
பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, நிதானமாக விளையாடியது. இந்நிலையில் 3-வது வரிசையில் களம் இறங்கிய திலக் வர்மா கடைசி வரை நிலைத்து நின்று நேர்த்தியாக ஆடிய இந்திய அணியை கரைசேர்த்தார். நிதானமாக விளையாடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி இந்திய அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த திலக் வர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் வருகிற 28-ந்தேதி நடக்கிறது. 2 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி 3-வது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.