
மாற்றங்களோடு பயணித்து வரும் கிரிக்கெட் ஆட்டம் பல புதிய மாறுதல்களை கொண்டுள்ளது.
போகிற போக்கைப் பார்த்தால் வருங்காலங்களில் அதிக மாற்றங்களுக்கு உட்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் நடைப்பெற்று வந்த காலத்தில் அத்தி பூத்தார் போல் ஏதோ ஒரு டெஸ்டில் ஒரு சிக்ஸர் அடிக்கப் பட்டது.
இன்றைய கால கட்டத்தில் சிக்ஸர்கள் இல்லாமல் டெஸ்ட் மேட்ச்சே கிடையாது என்ற சூழ்நிலை.
அந்த காலத்தில் ஒவ்வொரு ஷாட்டும் எப்படி விளையாட வேண்டும் என்று வரை முறை இருந்தது (copy book rules) அவற்றைப் பின் பற்றியே விளையாடப்பட்டன.
அப்பொழுது எல்லாம் புதிய உத்திகள் (அதுவும் எப்பொழுதாவது ஒரு முறை விளையாடுபவர் தெரிந்தோ, தெரியாமலோ முயற்சி செய்தாலோ அல்லது விளையாடி விட்டாலோ) ஒப்புதல் கிடைக்காது; அதிருப்தி தெரிவித்தனர் அன்றைய பார்வையாளர் ரசிகர்கள்.
இப்பொழுது நிலைமையே வேறு. குறிப்பாக டி 20, ஐ பி எல் ஆட்டங்களின் தாக்கங்களால் ரிவேர்ஸ் ஸ்வீப் (reverse sweep) முறை ஆட்டம் பிரபலம் அடைந்து வருகின்றது. டெஸ்ட் ஆட்டங்களில் இடம் பிடித்தும் விட்டது. இன்றைய ரசிகர்கள், பார்வையாளர்கள் வரவேற்கின்றனர், எதிர் பார்க்கின்றனர் அத்தகைய வகை ஷாட்டுக்களை.
மேலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஷாட்டு வகைகளினால், வீசப்படும் பந்துக்கள் அடித்து ஆகாயத்தில் பறக்க வைக்கும் வீரர்கள் அதிகரித்து வருகின்றனர் இன்றைய சூழ்நிலையில்.
அப்படி என்றால் எதிர் கால ஆட்டம் எப்படி எல்லாம் மாறி வேகம் எடுக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
எதிர் கால ஆட்ட முறையில் இந்த வகை மாறுதல்களுக்கும் இடம் இருக்கும்.
ஒரு நாள் பந்தயத்தில் இரண்டு இன்னிங்ஸ் ஆட்டங்கள். முதல் இன்னிங்சில் 25 ஓவர்களும், இரண்டாவது இன்னிங்சில் 20 அல்லது 15 ஓவர்கள்.
மற்றும் ஒரு சாத்தியமான மாற்றம் (possible change) இரண்டு வகை ரன்களுக்கு மட்டுமே இடம் உண்டு - பவுண்டரி, சிக்ஸர்.
இத்தகை வகை ஆட்டம், 10 ஓவர்கள் மேட்சாக இருந்தால் ஆர்வம் கூடும். இந்த தலைமுறை, அடுத்த தலை முறை ரசிகர்களை கவர்ந்து இழுக்கும்.
வெகு வேகமாக பரவி வரும் கிரிக்கெட் ஆட்டங்கள் நகரபுறங்களுடன், கிராமங்களிலும் திறமை சாலிகள் அதிகரித்து வருகிறனர். கிராமபுறங்களில் வீரர்களை ஊக்குவிக்க அவர்களுக்கு மட்டும் தனிப்பட்ட பிரத்தியேமாக போட்டிகள் (exclusively for villages) வரும் காலங்களில் அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகும்.
விளம்பரங்கள், டிவி ஒளிபரப்புகள், வர்ணனை கொண்டாட்டங்கள் பல மடங்கு விரிவடைய வாய்ப்புக்கள் கூடும்.
ஆக மொத்தம் இன்றியமையாதவாகிவிட்ட கிரிக்கெட் ஆட்டம் பல வித மாறுதல்களை வரவேற்க தயார் படுத்திக்கொன்டு வருகின்றது காலத்தின் காட்டாயம் காரணமாக.