பிரிஸ்பேனில் கனமழை காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுவும் ஐந்து நாட்களுக்கு குறைவான நாட்களிலேயே ஆட்டத்தை முடித்தது. சமீபக்காலமாக இந்திய அணி விளையாடும் டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்களுக்கு குறைவான நாட்களிலேயே முடிந்துவிடுகிறது. சில போட்டிகள் மழை காரணமாக நின்றது.
மேலும் கடைசியாக நடைபெற்ற போட்டிப்போல் விரைவில் ஒரு அணி தோற்றுவிடுகிறது. இதனால் ஐந்து நாட்கள் வரை போட்டி நடைபெறுவது கிடையாது. சிலர் டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களுக்கு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அதேபோல்தான் தற்போது பிரிஸ்பேனில் மழை பெய்து வருவதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பானில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் ஆஸ்திரேலியா அணியிலிருந்து உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வினி தொடங்கினர். ஆனால், போட்டி நடக்கும் பிரிஸ்பானில் ஐந்து நாட்களுக்கு மழைப் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இன்றைய நாளில் அங்கு 50 சதவிகிதம் மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி ஆரம்பமான சில நேரங்களில் மழை ஆரம்பமானது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தற்போது மழை நிற்கும் வரையில் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் 19 ரன்களிலும் நாதன் 4 ரன்களிலும் உள்ளனர்.
இன்னும் சில மணி நேரம் மழை நீடித்தால், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும். பின்னர் நான்கு நாட்கள் ஆட்டம் மட்டுமே மீதமிருக்கும். அடுத்தடுத்த நாட்களிலும் மழை நீடித்தால் போட்டி முழுவதும் பாதிக்கப்படும். ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா 1-1 என்ற கணக்கில் இருப்பதால், இந்த போட்டி மிகவும் முக்கியமானது. ஆனால், இடையில் இந்த கௌசிக் வந்தால் என்பதுபோல், இரு அணிகளையும் தள்ளிவிட்டு மழை ஒன் மேன் ஷோவாக விளையாடி வருகிறது.