சாம்பியன்ஸ் டிராபி 2025: சதம் அடித்து சாதனை படைத்த வீரர்கள்

Ibrahim Zadran, shubman gill, virat kohli
Ibrahim Zadran, shubman gill, virat kohliimage credit - Aaps.space, NDTV Sports
Published on

ஐசிசி மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடரானது பிப்ரவரி 19-ம்தேதி தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது. இந்த போட்டி மார்ச் 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் இதுவரை நடந்த போட்டிகளில் சதம் அடித்து சாதனை படைத்த 11 வீரர்களை பற்றி பார்க்கலாம்.

இப்ராகிம் ஜட்ரன் : 26-ம்தேதி நடந்த இங்கிலாந்து -ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அபாரமாக ஆடிய ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராகிம் ஜட்ரன் 177 ரன்கள் (146 பந்து, 12 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்

பென் டக்கெட் : ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அபாரமாக ஆடி 165 ரன்கள் (17 பவுண்டரிகள் 3 சிக்சர்)எடுத்து வரலாறு படைத்தார்.

இதையும் படியுங்கள்:
இன்று தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: போட்டிகளின் அட்டவணை முழுவிவரம்
Ibrahim Zadran, shubman gill, virat kohli

ஜோஷ் இங்கிலிஸ் : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்கிலிஸ் 86 பந்துகளில் 120 ரன்கள் (8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள்) எடுத்து வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்தார்.

ஜோ ரூட் : கடந்த 26-ம்தேதியன்று நடந்த ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தனி ஆளாகப் போராடி சதமடித்து (120 ரன்கள்) அசத்தினார்.

டாம் லாதம் : 19-ம்தேதி நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடங்க ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து வீரம் டாம் லாதம் 104 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 118 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினார்.

ரச்சின் ரவீந்திரா : கடந்த 24-ம்தேதியன்று நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதிய ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் குவித்தார்.

வில் யங் : நியூசிலாந்து - பாகிஸ்தான் மோதிய போட்டியில் நியூசிலாந்து வீரர் வில் யங் 113 பந்துகளில் 107 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நியூசிலாந்துக்காக வில் யங் மற்றும் டாம் லாதம் ஆகியோர் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

ரியான் ரிக்கல்டன் : 21-ம்தேதியன்று ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியில் தென்னாப்பிரிக்கா வீரர் ரியான் ரிக்கல்டன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 பவுண்டரிகள் 1 சிக்சர் உதவியுடன் 103 ரன்கள் அடித்து முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார்.

சுப்மன் கில் : கடந்த 20-ம்தேதி இந்தியா - வங்காளதேச அணிகள் மோதிய போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் 101 ரன்கள் அடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 51 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சுப்மன் கில் அதில் 8 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இந்தியா தரப்பில் குறைந்த இன்னிங்ஸ்களில் 8 சதங்கள் அடித்த வீரர் என்ற தவானின் வாழ்நாள் சாதனையை தகர்த்து சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான்: பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
Ibrahim Zadran, shubman gill, virat kohli

விராட் கோலி : துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக பிப்ரவரி 23-ம்தேதி நடைபெற்ற போட்டியில், இந்தியாவுக்காக விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார்.

தவ்ஹித் ஹ்ரிடோய் : கடந்த 20-ம்தேதியன்று இந்தியா - வங்காளதேச அணிகள் மோதிய ஆட்டத்தில் தவ்ஹித் ஹ்ரிடோய் 100 ரன்கள் (118 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com