சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான்: பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

Pakistan team
Pakistan teamimage credited - Sports Tak
Published on

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 19-ம் தேதி கோலகலமாக தொடங்கியது. இந்த போட்டி வரும் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது. 1996 உலகக் கோப்பை கிரிக்கெட்க்குப் பிறகு பாகிஸ்தான் முதல் முறையாக ஐ.சி.சி நிகழ்வை நடத்துவதால் இந்தப் போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில், மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1998-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. 2017-ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு காரணங்களுக்கான நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த போட்டி தற்போது நடத்தப்பட்டு வருகிறது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.60 கோடியாகும்.

சாம்பியன்ஸ் கோப்பையில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும் என்பதால் ஒவ்வொரு அணியினரும் நீயா-நானா? என்று வரிந்து கட்டி கொண்டு விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்கள்:
இன்று தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: போட்டிகளின் அட்டவணை முழுவிவரம்
Pakistan team

19-ந்தேதி கராச்சியில் நடந்த தொடக்க ஆட்டத்திலேயே நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி நியூசிலாந்திடம் படு மோசமாக தோற்றது.

நேற்று நடக்க இருந்த 9-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோத இருந்த நிலையில் மழையின் காரணமான போட்டி நிறுத்தப்பட்டது. தனது முதல் இரு ஆட்டங்களில் நியூசிலாந்து, இந்தியாவிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய பாகிஸ்தானும், இந்தியா, நியூசிலாந்து அணிகளிடம் தோற்ற வங்காளதேச அணியும் அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட நிலையில் ஆறுதல் வெற்றிக்காக இரு அணிகளும் சந்திக்க இருந்த நிலையில் ஆட்டம் தொடங்கும் முன்பே மழை புகுந்து விளையாடி விட்டது.

இதையும் படியுங்கள்:
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து
Pakistan team

மழை தொடர்ந்து இடைவிடாமல் பெய்ததால் ‘டாஸ்’ போட முடியாமல் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த நடுவர்கள் மழைநீர் அதிகம் தேங்கியதால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.

இதனால் 29 ஆண்டுக்கு பிறகு ஐ.சி.சி. போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்ற பாகிஸ்தான் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் பரிதாபமாக போட்டியை விட்டு வெளியேறியது. ஐ.சி.சி. 50 ஓவர் போட்டி தொடரில் போட்டியை நடத்தும் நாடு ஒரு வெற்றியை கூட பெறாமல் வெளியேறுவது 23 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.

புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணிக்கு 1 புள்ளியும் (-0.443), வங்காளதேசத்திற்கு 1 புள்ளியும் (-1.087) கிடைத்துள்ளது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து மோசமான சாதனை படைத்தது வெளியேறியது நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி.

இதையும் படியுங்கள்:
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை பந்தாடி வெற்றியை பதிவு செய்த இந்தியா
Pakistan team

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றி ஏதும் பெறாவிட்டாலும் படுதோல்வியை சந்தித்து வெளியேறினாலும் கூட ரூ.2 கோடியே 31 லட்சத்தை பரிசாக பெறுகிறது. அதாவது போட்டி கட்டணம் மற்றும் புள்ளிபட்டியலில் கடைசி இரு இடத்துக்கான பரிசு ஆகிய அடிப்படையில் இந்த தொகை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை முந்திய வங்காளதேசத்துக்கு ரூ.3 கோடி கிடைக்க உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com