சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி வீரர்கள் வெள்ளை நிற கோட் அணிந்தது ஏன்?

Champions Trophy 2025
Champions Trophy 2025
Published on

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கி நேற்று முன்தினம் (மார்ச் 9-ம்தேதி) நிறைவடைந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடந்தது.

இறுதிப்போட்டியில் இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது.

இந்த தொடரில், இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்றது மட்டுமின்றி இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை தட்டித்தூக்குவது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2002-ல் இலங்கையுடன் ஒரு வெற்றியைப் பகிர்ந்து கொண்டது மற்றும் 2013-ல் 'கேப்டன் கூல்' எம்எஸ் தோனியின் கீழ் இரண்டாவது வெற்றியைப் பெற்றது. சாம்பியன்ஸ் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றிய முதல் அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்த இந்திய அணிக்கு ரூ.19½ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் அனைவரும் கோப்பை வாங்கும் முன்னர் வெள்ளை நிற கோட் அணிந்திருந்தனர். இது ஏன் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அதுகுறித்த ருசிகர தகவலை பார்க்கலாம்.

முதன் முதலில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் 1998ல் தொடங்கினாலும் வெள்ளை நிற கோட் அணியும் வழக்கம் 2009-ல் இருந்து தான் ஆரம்பித்தது. அதாவது 2009-ல் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் அமைப்பு வெள்ளை நிற கோட்டை வழங்கியது.

அந்த கோட்டை அணிந்து கொண்டு தான் ஆஸ்திரேலியா வீரர்கள் 2009 சாம்பியன்ஸ் கோப்பையை பெற்று, வெற்றியை கொண்டாடினர். பின்னர் இந்த நடைமுறையே வழக்கமாக மாறி, சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் அணிகள் வெள்ளை நிற கோட் அணிந்து வெற்றிக்கோப்பையை பெறும் வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இது பற்றி சர்வதேச கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அந்த வெள்ளை நிற கோட் என்பது வெற்றியாளர்களுக்கான ஒரு மரியாதை" என்று கூறியுள்ளது.

வெற்றி பின் இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு அவர்களுக்கு வெள்ளை நிற கோட் வழங்கப்பட்டது. அனைவரும் இந்த கோட்டை அணிந்து கொள்ள சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஜெய் ஷாவிடம் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் கோப்பையை பெற்றுக்கொண்டார். பின்னர் அதை சக அணியினருடன் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படியுங்கள்:
சாம்பியன்ஸ் டிராபி 2025: சதம் அடித்து சாதனை படைத்த வீரர்கள்
Champions Trophy 2025

இந்த தொடரின் முடிவில் அதிக ரன்கள், அதிக விக்கெட், அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் யார் என்று பார்க்கலாம்.

அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா 4 போட்டிகளில் விளையாடி 263 ரன்களை எடுத்து முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் ஸ்ரேயாஸ் 5 போட்டிகளில் விளையாடி 243 ரன்களை எடுத்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 227 ரன்கள் எடுத்த பென்டக்கட் மூன்றாவது இடத்திலும், 225 ரன்கள் எடுத்த ஜோ ரூட் நான்காவது இடத்திலும், விராட் கோலி 218 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.

அதிக விக்கெட் எடுத்த பவுலர்கள் பட்டியலில், 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி, முதல் இடத்தை பிடித்திருக்கிறார். ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய அணியின் வருண் சக்கரவர்த்தி, முகமது ஷமி, நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர் ஆகிய மூன்று பேரும் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். 8 விகெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து வீரர் பிரஸ்வெல் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஏழு கேட்ச்களை பிடித்து சாம்பியன்ஷிப் தொடரில் அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி, நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் ஆகிய இருவரும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர். நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா, பிலிப்ஸ் ஆகியோர் 5 கேட்கள் பிடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
3-வது முறையாக ‘சாம்பியன்ஸ் கோப்பை’யை வென்ற இந்தியா! பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து...
Champions Trophy 2025

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com