ரிஷப் பண்ட் பணத்துக்காக டெல்லி அணியைவிட்டு லக்னோ அணியில் இணைந்துள்ளார் என்று ஹேமங் பதானி தெரிவித்திருக்கிறார்.
அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான வேலைகள் சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பமானது. அந்தவகையில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் சில முக்கிய வீரர்களை தக்கவைத்துக்கொண்டனர். மற்றவர்களை விடுவித்தனர். இதனையடுத்து ஏலம் நடத்தப்பட்டது.
இந்த ஏலத்தில் அதிக விலைக்கு போனது ரிஷப் பண்ட்தான். இதுவரை ரோஹித் ஷர்மா, தோனி, விராட் கோலி போன்ற வீரர்கள்கூட இவ்வளவு விலைக்குப் போகவில்லை. இது ரசிகர்களுக்கே பேரதிர்ச்சியாக அமைந்தது. அந்தவகையில் ஹேமங் பதானி பேசுகையில், “ரிஷப் பண்ட் டெல்லி அணியில் சேர விரும்பவில்லை. அதற்கு பதிலாக ஏலத்திற்கு சென்று தனது மதிப்பை அறிந்துக்கொள்ள விரும்பினார். அவர் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது அதிகபட்சம் 18 கோடிக்கு ஏலத்திற்கு போவார் என்று நினைத்தோம். ஆனால் 27 கோடி மதிப்பிற்கு விலை போனதால் இந்த முறை வெற்றி அவருக்கே என்று நினைத்தோம்.” என்று பேசினார்.
டெல்லி அணியிலிருந்தால், அவர் கேட்கும் அதிக சம்பளம் கிடைக்காது என்பதற்காக துணிந்து ஏலத்திற்கு போகிறேன் என்று அணியிடம் கேட்டிருக்கிறார். அவர்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து அவர் சொன்னது போலவே அதிக விலைக்கு எடுக்கப்பட்டார். இப்போது அவருக்கு சம்பளம் மிகவும் அதிகமே. ஆகையால் பணத்துக்காகதான் இவ்வாறு செய்தார் என்பதுபோல் ஹேமங் பதானி பேசியிருக்கிறார்.
தற்போது இவர் லக்னோ அணியில் இணைந்திருக்கிறார். இந்த அணியில் இதற்கு முன்னர் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். ஆனால், போன ஐபிஎல் சீசனில் கே.எல்.ராகுலை அந்த அணியின் உரிமையாளர் அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியதால், இந்தமுறை ராகுல் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்துதான் ரிஷப் பண்ட் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதுகுறித்து லக்னோ அணி உரிமையாளர் சமீபத்தில் பேசினார். அதாவது இந்திய அணி ஒருமுறை தோல்வியை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கும்போது ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டதுபோல் நடித்து எதிரணியின் வேகத்தை குறைத்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். அவர் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால்தான் இவ்வளவு தொகை கொடுத்து வாங்கினேன் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.