
ஐ.பி.எல். 18-வது சீசன் மார்ச் 22-ம்தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை நடக்கவுள்ளது. ஐபிஎல் 18வது சீசனில் மொத்தம் 13 மைதானங்களில் 74 போட்டிகள் 65 நாட்கள் நடைபெற உள்ளது.
சினிமாவிற்கு எந்த அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அதே அளவிற்கு கிரிக்கெட்டை பார்ப்பதற்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஐபிஎல் போட்டி தொடங்கி விட்டாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். சென்னையில் சிஎஸ்கே அணி விளையாடுகிறது என்றால் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதும்.
அதுமட்டுமின்றி சமூக ஊடகங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 40.5 மில்லியன் பயனாளர்கள் பின்தொடருகின்றனர். வேறு எந்த அணிக்கும் இந்த அளவு பயனர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் 2024-ம் ஆண்டில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்தது. ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பத்திரனா மற்றும் பழம்பெரும் கேப்டன் எம்எஸ் தோனி ஆகிய வீரர்களை மஞ்சள் நிற அணி தக்கவைத்துக் கொண்டது.
ஐபிஎல் 2025-ல் பட்டத்தை வெல்லும் நோக்கில், மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நூர் அகமது போன்றவர்களை வாங்கியதுடன், டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரரையும் திரும்ப ஏலத்தில் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளின் தேதிகள், இடங்கள் உள்பட முழு அட்டவணை இங்கே:
மார்ச் 23-ந்தேதி : சிஎஸ்கே Vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானம்
மார்ச் 28-ந்தேதி : சிஎஸ்கே Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானம்
மார்ச் 30-ந்தேதி : சிஎஸ்கே Vs ராஜஸ்தான் ராயல்ஸ் - குவஹாத்தி பர்சபரா ஸ்டேடியம்
ஏப்ரல் 5-ந்தேதி : சிஎஸ்கே Vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானம்
ஏப்ரல் 8-ந்தேதி : சிஎஸ்கே Vs பஞ்சாப் கிங்ஸ் - முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் கிரிக்கெட் மைதானம்
ஏப்ரல் 11-ந்தேதி : சிஎஸ்கே Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானம்
ஏப்ரல் 14-ந்தேதி : சிஎஸ்கே Vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம்
ஏப்ரல் 20-ந்தேதி : சிஎஸ்கே Vs மும்பை இந்தியன்ஸ் - மும்பை வான்கடே மைதானம்
ஏப்ரல் 25-ந்தேதி : சிஎஸ்கே Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானம்
ஏப்ரல் 30-ந்தேதி : சிஎஸ்கே Vs பஞ்சாப் கிங்ஸ் - சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானம்
மே 3-ந்தேதி : சிஎஸ்கே Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பெங்களூரு எம் சின்னசாமி ஸ்டேடியம்
மே 7-ந்தேதி : சிஎஸ்கே Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கொல்கத்தா ஈடன் கார்டன்
மே 12-ந்தேதி : சிஎஸ்கே Vs ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானம்
மே 18-ந்தேதி : சிஎஸ்கே Vs குஜராத் டைட்டன்ஸ் - அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம்