சரித்திரம் படைத்த கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் – ஜிம் லேக்கரின் (இன்றுவரை முறியடிக்கப்படாத) சாதனை!

jim laker
jim laker

பல வகையான கிரிகெட் மேட்சுக்கள் நடைப்பெற்று வந்தாலும், வெகு குறைவான மேட்சுக்கள் அழியா இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று.

ஒரு வேளை இங்கிலாந்து ஸ்பின் பவுலர் டோனி லாக் அந்த ஒரு விக்கெட்டை எடுக்காமல் இருந்திருந்தால், அந்த டெஸ்ட் மேட்சின் ஹீரோ ஜிம் லேக்கர், 20 ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அந்தக் காலகட்டத்திலேயே T20க்கு (Test 20) பிள்ளையார் சுழி போட்டு இருப்பாரோ என்னவோ. இருந்தும், 19 விக்கெட்டுக்கள் எடுத்து சாதனை புரிந்து, சரித்திரத்தில் இடம் பெற்றார் ஜிம் லேக்கர். இந்த நிகழ்வு அத்தி பூத்தார் போல் ஏற்படும் ஒன்று.

ஜிம் லேக்கர் ஒரு சிறந்த ஆப் ஸ்பின் பவுலர் என்று முன்பே நிரூபித்து இருந்தார். இந்த தொடரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு மே மாதம், 1956 சர்ரே அணிக்கு (Surrey team) எதிரான மேட்சில் விளையாடும்போது, ஜிம் லேக்கர் எப்படி பந்து வீசுவார் என்று அறிந்துக்கொள்ள வாய்ப்பு கிட்டியது.

அந்த மேட்சில் லேக்கருடன், டோனி லாக்கும் பந்து வீசினார். ஜிம் லேக்கர் இந்த மேட்சிலும் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுக்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

ஜிம் லேக்கர் பவுலிங்

46 O / 18 M / 88 R / 10 W

25 O / 10 M / 42 R / 2 W

டோனி லாக் பவுலிங்

33 O / 12 M / 100 R / 0 W

31.1 O / 9 M / 49 R / 7 W

இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மேட்சில் சர்ரே அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது.

jim laker
jim lakerImg Credit: Cricket

ஜிம் லேக்கர் 19 விக்கெட்டுக்கள் எடுத்த அந்த குறிப்பிட்ட டெஸ்டில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், அதற்கு முன்பாகவே மேற்படி சர்ரே அணியுடன் மோதியபோது ஜிம் லேக்கரின் பெளலிங்கை எதிர்கொண்டிருந்ததால், அது அவர்களுக்கு புதிதான அனுபவமாக இல்லை.

1956ல் இந்த நிகழ்வு நடைபெற்றது நான்காவது மான்செஸ்டர் டெஸ்ட்டில். இந்த மான் செஸ்டர் டெஸ்டுக்கு கேப்டன் பீட்டர் மே. இதற்கு முந்தைய மூன்று டெஸ்டுகளில் ஜிம் லேக்கர் எடுத்த மொத்த விக்கெட்டுக்களின் எண்ணிக்கை 20. இந்த ஒரு டெஸ்டில் மட்டும் எடுத்த விக்கெட்டுக்கள் 19. அந்தத் தொடரின் 5 டெஸ்டுக்களிலும் எடுத்த மொத்த விக்கெட்டுக்கள் 46. இவருடன் அடுத்த முனையில் இருந்து பந்து வீசிய ஸ்பின் பவுலர் டோனி லாக் எடுத்த மொத்த விக்கெட்டுக்கள் 15. நான்காவது மான்செஸ்டர் டெஸ்ட்.

26 - 31/ ஜூலை/1956.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பீட்டர் மே, முதலில் பேட்டிங் விளையாட முடிவு செய்தார். கிட்டதட்ட முதல் இரண்டு நாட்கள் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் குவித்த ரன்கள் 459. பீட்டர் ரிச்சர்ட்சன் 104, டேவிட் ஷேப்பர்ட் 113 ரன்களை எடுத்துக் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி கேப்டன் இயன் ஜான்சன் பவுலிங்கில் எடுத்தது 4 / 151

ரேலிண்ட்வால் 2 / 63

ரிச்சி பெனோ 2 / 123

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து, முதல் இன்னிங்ஸின் 84 ரன்களும், தொடர்ந்து ஃபாலோ ஆன் செய்து இரண்டாவதாக இன்னிங்சில் திணறி 205 ரன்களும் எடுத்து இன்னிங்ஸ் டிஃபிட் ஆனது.

ஜிம் லேக்கர் பவுலிங்

16.4 O / 4 M / 37 R / 9 W

51.2 O / 23 M / 53 R / 10 W

டோனி லாக் பவுலிங்

14 O / 3 M / 37 R / 1 W

55 O / 30 M / 69 R / 0 W

முதல் இன்னிங்சில் டோனி லாக், ஜிம் பர்கே விக்கெட்டை மட்டும் எடுத்தார். மற்ற 19 ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அசத்தியவர்

இதையும் படியுங்கள்:
IPL-ல் சாதனை படைத்தார் தோனி!
jim laker

ஜிம் லேக்கர்:

ஆஸ்திரேலிய வீரர்களால், ஜிம் லேக்கரின் சூழல் பந்து வீச்சை கையாள முடியவில்லை. இங்கிலாந்து அணி , ஒரு இன்னிங்ஸ் 170 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி அடைந்தது. ஜிம் லேக்கர், தான் இந்த டெஸ்டில் வீசிய பந்துக்களில் மிகவும் சிறந்த பந்தாக கருதியது, மிக சிறந்த இடது கை ஆட்டக்காரரான, நீல் ஹார்வேயை க்ளீன் போல்ட் ஆக்கிய அந்த சூழல் பந்து என்று கூறினார். மேட்ச் முடிந்ததும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஜிம் லேக்கர் முதலில் பெவிலியனுக்குச் செல்ல மற்றவர்கள் அவரைக் கொண்டாடிபடியே பின்னால் சென்றனர்.

பிற ஆட்டக்காரர்கள் அவருக்கு கைகள் குலுக்கியும், சிலர் முதுகில் தட்டியும் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தனர். கைகளைத் தட்டி மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். அவ்வளவுதான். வேறு கொண்டாட்டங்கள் எதுவும் கிடையாது. ஜிம் லேக்கர் போன நூற்றாண்டில் (1956) ஒரே டெஸ்டில் எடுத்த அந்த 19 விக்கெட்டுக்கள் சரித்திரம் படைத்த சாதனை, இன்று வரை முறியடிக்காமல் உள்ளது. அது அப்படியே வரும் காலங்களிலும் இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com