IPL 2026: சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அதிரடி! மும்பையை வீழ்த்தி சென்னை மாஸ் வெற்றி..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற 44-வது லீக் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி பெற்றது.
Chennai Super Kings
Chennai Super Kingsimage credit- indiatoday.in
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

19-வது ஐபில் கிரிக்கெட் திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் 44-வது லீக் போட்டியில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்டை நடத்துகின்றன.

சென்னை அணி 8 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 5 தோல்வியுடன் பரிதாப நிலையில் தள்ளாகிறது.

மும்பை அணி 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் 9-வது இடத்தில் தவிக்கிறது.

சமபலம் வாய்ந்த அணிகள் இன்று கோதாவில் குதித்துள்ளதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இவ்விரு அணிகளும் இதுவரை 40 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 21-ல் மும்பையும், 19-ல் சென்னையும் வெற்றி பெற்றுள்ளன. சேப்பாக்கத்தில் 9 முறை மோதியதில் அதிலும் மும்பையின் கையே சற்று ஓங்கி (5-4) நிற்கிறது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய சென்னை அணி அதிரடியாக விளையாடி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் சென்னை அணி தனது 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com