#IPL 2026: வெறும் 75 ரன்கள் தான்! டெல்லியை சிதறடித்த பெங்களூரு பந்து வீச்சாளர்கள்..!

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டெல்லியை எளிதில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
RCB captain Rajat Patidar
Royal Challengers Bengaluruimage credit-sportstar.thehindu.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 39வது லீக் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடியதில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பின்தங்கியிருக்கிறது.

இதுவரை 7 ஆட்டங்களில் ஆடியுள்ள பெங்களூரு அணி 5-ல் வெற்றி, 2-ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

இந்த சீசனில் ஏற்கனவே டெல்லியுடன் மோதிய ஆட்டத்தில் தோல்வியடைந்த பெங்களூரு அணி இப்போது அவர்களது இடத்தில் பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய டெல்லி அணி, பெங்களூருவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல், 4 ஓவரிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து ரன் எடுக்க முடியாமல் தத்தளித்தது. முடிவில் 16.3 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 75 ரன்கள் மட்டுமே குவித்தது. இதுதான் நடப்பு சீசனின் மிகக்குறைந்த ஸ்கோராகும்.

அதனை தொடர்ந்து மிகக்குறைந்த இலக்கான 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய பெங்களூரு அணி அதிரடியாக விளையாடி 6.3 ஓவரிலேயே (9 விக்கெட் வித்தியாசம்) இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியது.

இதன் மூலம் பெங்களூரு அணி தனது 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தர்பூசணி சாப்பிட்டதால் விபரீதம்: மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!
RCB captain Rajat Patidar
logo
Kalki Online
kalkionline.com