ஐபிஎல் 2026: ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பு... ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி..!

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற 62-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.
DC vs RR
DC vs RRimage credit - rajasthanroyals.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கின்றன. இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 62-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர்க்கொள்கிறது.

டெல்லி அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ளது.

ராஜஸ்தான் அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வி கண்டு 12 புள்ளிகளை பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 16-ல் டெல்லியும், 15-ல் ராஜஸ்தானும் வென்றுள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இறுதியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் டெல்லி அணி 6-வது வெற்றியை பதிவு செய்தது.

logo
Kalki Online
kalkionline.com