சுவையான ஸ்வீட் கார்ன் மசாலா!

சுவையான ஸ்வீட் கார்ன் மசாலா!
Published on

ஸ்வீட் கார்ன் அதன் சுவைக்கு மட்டுமல்ல, அற்புதமான பல நன்மைகளையும் கொண்டுள்ளது . ஸ்வீட் கார்ன் ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் ஒரு சிறந்த சிற்றுண்டி. இனிப்பு சோளத்தில் கொழுப்புகள், சோடியம், கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளது. அதே நேரத்தில், வைட்டமின் சி போன்ற ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ளது. இனிப்பு சோளத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது இரத்தத்தை ஜெல் ஆக மாற்றுவதன் மூலம் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஸ்வீட் கார்னில் கரோட்டினாய்டுகள் மற்றும் பயோஃப்ளவனாய்டுகள் உள்ளன. அவை இரத்தத்தில் உள்ள கொழுப்பைப் பராமரிக்கின்றன.

தேவையான பொருட்கள்:

* ஸ்வீட் கார்ன் – 1 1/2 கப்

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1/2 டீஸ்பூன்

அரைப்பதற்கு…

* தக்காளி – 2 பெரியது

* பூண்டு – 4 பற்கள்

* வரமிளகாய் – 3-4

செய்முறை:

* முதலில் மிக்ஸர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும்போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும்வரை கொதிக்க வைக்கவும்.

* பிறகு அதில் உப்பு, சர்க்கரை, கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின் ஸ்வீட் கார்ன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் தேவையான அளவு நீர்ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கினால், சுவையான ஸ்வீட் கார்ன் மசாலா தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com