டெய்லி நைட் சாப்பிட்ட பிறகு வாக்கிங் போறீங்களா? எவ்வளவு நன்மை என தெரிந்து கொள்ளுங்க!

டெய்லி நைட் சாப்பிட்ட பிறகு வாக்கிங் போறீங்களா? எவ்வளவு நன்மை என தெரிந்து கொள்ளுங்க!

சாப்பிட்ட பிறகு யாருக்கெல்லாம் வாக்கிங் செல்லும் பழக்கம் உள்ளது. உங்களுக்கு இருந்தால் அதில் உள்ள நன்மைகள் குறித்து தெரிந்து கொண்டு தினமும் அதை தொடர்ந்து செய்யுங்கள்.

இரவு உணவிற்கு பிறகு நீங்கள் தூங்க சென்றால் அது எடை அதிகரிப்பு உட்பட பல உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

இரவு உணவுக்கு பிறகு நடப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் போதுமான உடற்பயிற்சியை பெறவும், சில கலோரிக்களை கரைக்கவும் உதவுகிறது.

10 நிமிட நடைபயிற்சி உங்கள் உடல் செரோடோனின் வெளியிட அனுமதிக்கும். இதனால் நீங்கள் இலகுவாக உணர்வீர்கள், நல்ல தூக்கம் வரும்.

நடைபயிற்சி அதிகரிக்க ரத்த ஓட்டத்தை உறுதி செய்யும், இது தசைகளின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவசியம்

உணவுக்கு பிறகு நீங்கள் நடக்கும் போது அது வயிறு குடலின் தூண்டுதலை ஊக்குவித்து உணவை வேகமாக உடைத்து செரிமானத்திற்கு உதவுகிறது.

உடல் செயல்பாடு நமது செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்கிறது. இதனால் நமது வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது.

நடைப்பயிற்சி உங்களை நன்றாக விரைவில் தூங்குவதற்கு உதவும். எனவே இரவு நேரம் உணவிற்கு பிறகு நீண்ட நேரம் விழித்திருக்கும் போது ஏற்படும் பசியை தடுக்கும்.

இரவு உணவிற்கு பிறகு 10 நிமிட நடைபயணமானது பகலில் உள்ள மற்ற நேரங்களுடன் ஒப்பிடும் போது ரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்தும்.

உணவிற்கு பிறகு தொடர்ந்து நடப்பது இன்சுலின் உணர்திறன் ஆபத்தை குறைக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உணவிற்கு பிறகு காற்றோட்டமான பூங்காவில் சிறிது நேரம் நடப்பது எண்டோர்பின்ள் பாய்ந்து நமது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உங்கள் இதய துடிப்பை அதிகரிக்கவும், உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

சிறந்த இதய ஆரோக்கியத்தை குறிக்கிறது. உணவுக்கு பின் தொடர்ந்து நடப்பது கரோனரி நோய்களின் அபாயத்தை கணிசமாக குறைக்கும் என்று ஆய்வுகள்: கூறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com