
கிரிக்கெட் ஆட்டத்தில் சில வினோத வழக்கங்கள் இணைந்துள்ளன. அவற்றில் ஒன்று நெல்சன். அதை பற்றி பார்ப்போம்.
கிரிக்கெட் ஆட்டத்தில் அணியோ அல்லது அணி வீரரோ சேர்ந்தார் போல் மூன்று ஒரே எண்ணை எடுத்தால் 'நெல்சன்' என்ற அடை மொழியில் கூறுவது வழக்கம். உதாரணமாக 111, 222, 333 ரன்கள் இவற்றை குறிப்பிடுவது.
நெல்சன் என்ற சொல் கிரிக்கெட்டில் அட்மிரல் நெல்சன் குறித்து வந்ததாக ஒரு வதந்தி உலா வருகின்றது.
111 எண்ணை குறிப்பிடுவதற்கு நெல்சன் என்று அழைக்க நாளடைவில் அதுவே நிலைத்து விட்டது.
111 எண் அதிர்ஷ்டம் இல்லாதது என்று கருதும் ரசிகர்கள் அந்த ஸ்கோர், ஸ்கோர் போர்ட்டில் தோன்றும் தருணத்தில் ஒரு காலை தூக்கி வைத்துக் கொண்டு சிறிது நேரத்திற்கு பிறகு தரையியில் வைத்து தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதை பின் பற்றி வருகின்றனர்.
அதே 111 எண் ஏஞ்சல் எண்ணாகவும் அதை உயர்வாக கொண்டாடுபவர்களும் இருக்கின்றனர்.
இங்கிலாந்தை சார்ந்த புகழ் பெற்ற டெஸ்ட் அம்பயர் டேவிட் ஷெப்பர்ட், அணி ஸ்கோர் அல்லது தனிப்பட்ட வீரரின் ஸ்கோர் நெல்சன் எண்ணை தொடும் தருணத்தில் தனது ஒரு காலை தூக்குவதை மறக்காமல் செய்து வந்தார் அவர் நடுவராக பங்கு பெற்ற ஆட்டங்களில்.
அவர் பெயர் ஷேபர்ட்.
இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் கிராஹாம் கூச் மற்றும் மேற்கு இந்திய தீவுகளின் கிறிஸ் கெல் இருவர் மட்டும் தான் தனிப்பட்ட முறையில் 333 ரன்கள் குவித்த வீரர்கள் ஆவார்கள்.
இது வரையில் பல இரட்டை சதங்கள் எடுக்கப் பட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் 5 வீரர்கள் மட்டும் 222 ரன்கள் அடித்துள்ளனர்.
அவர்கள் ஜி ஆர் விஸ்வநாத், ராகுல் ட்ராவிட், நாதன் அஸ்டில், கே சங்கக்காரா, ஜாக் ருடோல்ப்.
சுனில் கவாஸ்கர் ஒரு முறை 111 ரன்கள் எடுத்துள்ளார்.
11.11.2011 அன்று ஒரு வினோத நிகழ்வு நடந்தேறியது. தென் ஆப்ரிக்கா மேட்ச்சில் மணி 11.11 க்கு தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற தேவையான ரன்கள் 111. ஸ்கோர் போர்ட் அந்த நிமிடத்தில் காட்சி அளித்தது 11:11 11/11/11
இந்த மேட்ச்சில் ஒரு அம்பயர் இயன் கௌல்ட் அந்த தருணத்தில் நெல்சன் புகழ் அம்பயர் டேவிட் ஷெப்பர்ட் ஸ்டைலில் ஒரு காலை தூக்கி, அவரை நினைவு படுத்தினார். மைதானத்தில் ஆட்டத்தை பார்க்க குழுமியிருந்த ரசிகர்கள் இந்த அரிய தருணத்தை மகிழ்ந்து ரசித்தனர்.
இன்றும் கிரிக்கெட் ஆட்டங்களில் ஒரே மாதிரியான எண்கள் கொண்ட ரன்கள் வந்தால் கூடியிருக்கும் ரசிகர்கள் 'நெல்சன்' 'நெல்சன்' என்று உரக்க கூறுவதை பார்க்கலாம், கேட்கலாம்.