இங்கிலாந்தின் ஹெடிங்லியில் உள்ள, மிகவும் பழமையான லீட்ஸ் மைதானத்தில் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டெஸ்ட் டிராபி தொடர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
மொத்தமாக 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி ஜூன் 20 ஆம் தேதி துவங்கியது. இந்தியாவின் சுப்மன் கில் கேப்டனாக பதவியேற்று நடைபெறும் முதல் போட்டி என்பதால் , போட்டிக்கான அதிக பரபரப்பு இருந்தது. இங்கிலாந்தின் அணி பென் டக்கெட் தலைமையில் பங்கேற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்சின் பேட்டிங்கை இந்தியா தொடங்கியது , தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும் கே.எல்.ராகுலும் களமிறங்கி நிதானமாக ஆடத் தொடங்கினர். கே.எல்.ராகுல் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 101 குவித்து வெளியேறினார்.கேப்டன் சுப்மன் கில்லும் ரிஷப் பந்தும் அதிரடியாக விளையாடி ரன்களையும் குவித்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் சுப்மன் கில் 127 ரன்களும் ரிஷப் 65 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 359/3 என்ற வலுவான நிலையில் இருந்தது.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் ரிஷப் 147 ரன்கள் குவித்து அவுட்டாகினார். இது அவரது 7 வது சதமாகும். அதன் பிறகு இந்திய அணியினர் பொறுப்புடன் விளையாட முதல் இன்னிங்ஸ் முடிவில் 471 ரன்கள் குவித்து இந்திய அணி ஆட்டமிழந்தது. இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டாங் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
தனது முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தை விளையாட இங்கிலாந்து அணியின் ஜாக் குருவ்லி மாற்றும் பென் டக்டட் ஆகியோர் களமிறங்கினர். பென் டக்டட் 62 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். ஒரு புறம் விக்கெட்டுகள் போனாலும் வலுவான நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது. கோலி போப் சதமடிக்க இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 209/3 ரன்கள் எடுத்தது.
மூன்றாவது நாளில் தனது ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி , நிதானமாக ரன்களை ஏற்றிக் கொண்டிருந்தது. போப் 106 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் வந்த ஹெச் புருக் 99 ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். பின்னர் வந்த பேட்ஸ் மேன்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து ஆட அனைத்து விக்கெட்டுகள்களும் இழந்த பின்னர் , இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி சார்பில் பும்ரா சிறப்பான முறையில் பந்து வீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
6 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்தியாவிற்கு கே.எல்.ராகுல் (137) நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தார். இந்திய அணி பேட்ஸ் மேன்கள் பலரும் சொதப்ப ரிஷப் மட்டும் 118 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்க்ஸ்லிலும் சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இந்தியா 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியின் சி. வோக்ஸ் 4 விக்கட்டுகளை சிறப்பான முறையில் வீழ்த்தினார்.
371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை துவங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது. 4 ஆம் நாள் ஆட்டத்தில் அடிக்கடி மழை குறுக்கிட மேட்ச் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ஆயினும் இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இறுதி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 373 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் டக்கட் 149 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு நல்ல துவக்கம் கொடுத்திருந்தார். இதனால் ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
148 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்த முதல் அணி என்ற சாதனையை இந்திய அணி நிகழ்த்தியுள்ளது. இப்போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்க்ஸில் 3,000 (76 இன்னிங்ஸ்) ரன்களை கடந்த 2 வது விக்கட் கீப்பர் சாதனையை ரிஷப் படைத்தார். முதல் இடத்தில் 63 இன்னிங்க்ஸில் 3000 ரன்களை கடந்த ஆஸ்திரேலியாவில் கில்கிறிஸ்ட் உள்ளார்.பல சாதனைகள் செய்தும் இந்திய அணியால் போட்டியில் வெற்றி பெற இயலவில்லை. நடப்பு டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.