ஃபிஃபா (FIFA) விருது - உலகின் சிறந்த கால்பந்து வீரராக வினிசியஸ் தேர்வு!

Vinicius
Vinicius
Published on

சர்வதேச கால்பந்து சங்கம் (ஃபிஃபா - FIFA) ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஃபிபா வெளியிடும் இறுதிப்பட்டியலில் இருந்து சிறந்த வீரர், வீராங்கனை தேசிய அணியின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், கால்பந்து பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கத்தார் தலைநகர் தோகாவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற 11 வீரர்களில் பிரேசில் வீரரும், ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடுபவருமான வினிசியஸ் ஜூனியர் சிறந்த கால்பந்து வீரராக அறிவிக்கப்பட்டார்.

2016-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதை பெற்ற முதல் பிரேசில் வீரர் என்ற பெருமையை 24 வயது வினிசியஸ் ஜூனியர் பெற்றார். வாக்குகள் அடிப்படையில் அவருக்கு 48 புள்ளி கிடைத்தது. ஸ்பெயின் வீரர் ரோட்ரி 43 புள்ளிகளுடன் 2-வது இடமும், இங்கிலாந்து வீரர் ஜூட் பெலிங்ஹாம் 37 புள்ளிகளுடன் 3-வது இடமும் பெற்றனர். அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

சிறந்த வீராங்கனைக்கான விருதை ஸ்பெயின் வீராங்கனை போன்மதி தொடர்ந்து 2-வது முறையாக தட்டிச் சென்றார்.

ஒவ்வொரு பயிற்சியாளர் மற்றும் கேப்டன் யாருக்கு வாக்களித்தனர் என்ற விவரங்களை ஃபிஃபா வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பேருந்தை இயக்கும்போது ஓட்டுநர் செல்போன் பயன்படுத்தினால் இத்தனை நாட்களுக்கு சஸ்பெண்ட் – வெளியான உத்தரவு!
Vinicius

நிகழ்ச்சியில் வினிசியஸ் ஜூனியர் பேசுகையில் ‘சிறுவயதில் வறுமையான சூழலில் பிரேசிலில் உள்ள சாவ் கோன்காலோ தெருக்களில் வெறுங் காலில் கால்பந்து விளையாடிய நான் இப்போது இந்த மேடையில் நிற்பது பெருமை அளிக்கிறது. எல்லாமே சாத்தியமில்லை, இந்த தூரத்தை அடைய முடியாது என்று நினைக்கும் நிறைய குழந்தைகளுக்கு இப்போது நான் முன்மாதிரியாக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

மான்செஸ்டர் சிட்டியின் ரோட்ரியை தவறவிட்டதால், 24 வயதான இவரும் அவரது கிளப்பும் சமீபத்திய பலோன் டி'ஓர் (Ballon d'Or ) விழாவை புறக்கணித்தனர் - ஆனால் அவர் இந்த பரிசை தோஹாவில் பெற்றார். Ballon d'Or மற்றும் Fifa இந்த இரண்டு சிறந்த விருதுகளும் கால்பந்து போட்டிக்கு மிகவும் மதிப்புமிக்கவை.

வினிசியஸின் FIFA சிறந்த வெற்றியானது, கால்பந்தின் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒருவராக அவரது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. Ballon d'Or விழாவிற்குப் பிறகு அவருக்கும் ரியல் மாட்ரிட்டுக்கும் ஒரு வியத்தகு, நம்பமுடியாத ஆண்டாக அமைந்ததுள்ளது.

இதையும் படியுங்கள்:
நைஜிரீயாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலி! அன்னதானத்தில் ஏற்பட்ட விபரீதம்!
Vinicius

2023-24ல் ரியல் சாம்பியன்ஸ் லீக் மற்றும் La Liga-winning campaignல் வினிசியஸ் முக்கிய பங்கு வகித்தார். இவர் இந்த போட்டிகளில் 24 கோல்களை மற்றும் 11 உதவிகளை வழங்கினார்.  

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர். இவர் லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மே மாதம் வெலன்சியாவில்  நடைபெற்ற லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் - வெலன்சியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் போது ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர் வினிசியஸ் ஜூனியரை இனவெறி வார்த்தைகளால் வசை பாடினர். இதனால் 10 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. கேலி செய்த ரசிகர்களை சுட்டிக்காட்டி வாக்குவாதம் செய்ததால் வினிசியஸ் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த சீசனில் மட்டும் இது போன்ற 10 நிகழ்வுகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com