

கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் கோல்கள் அடித்து சாதனை செய்தவர் அர்ஜென்டினாவின் கேப்ரியல் பாடிஸ்டா. இவர் 1994 ம் ஆண்டு கிரீஸ் நாட்டிற்கு எதிராகவும், 1998 ம் ஆண்டு ஜமைக்கா அணிக்கு எதிராகவும் ஹாட்ரிக் கோல்கள் அடித்து சாதனை படைத்தார்.
நவீன காலத்தில் சுயகோல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன; 1998-ல் 6 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 2018-ல் 12 ஆக முதல் முறையாக உயர்ந்தது, ஒரே தொடரில் அதிகபட்சம் ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 12 சுயகோல்கள் பதிவு செய்யப்பட்டன. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சுயகோல் (ஓன் கோல்) அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரஷ்யாவின் பாண்ட் ஜூகிச் பெற்றார். பிரான்ஸ் நாட்டிற்கு எதிராக சுயகோல் அடித்தார்.
FIFA உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிவேகமாக கோல் அடித்த சாதனை துருக்கி (Turkey) அணியின் ஹக்கன் சுக்ரூர் (Hakan Şükür) வசம் உள்ளது. அவர் 2002 ஆம் ஆண்டு தென் கொரியாவுக்கு எதிராக நடைபெற்ற 3-வது இடத்திற்கான போட்டியில், ஆட்டம் தொடங்கிய 11 வினாடிகளுக்குள் (துல்லியமாக 10.8 நொடிகளில்) இந்த கோலை அடித்தார். அதுவே துருக்கியின் 3-2 என்ற வெற்றிக்கு அடித்தளமிட்டது.
FIFA உலகக் கோப்பை வரலாற்றில், ஒரே ஆட்டத்தில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச கோல்கள் 5 ஆகும். ரஷியாவைச் சேர்ந்த ஒலெக் சலென்கோ (Oleg Salenko) 1994 அமெரிக்க உலகக் கோப்பையில் கேமரூன் அணிக்கு எதிராக இந்த சாதனையைப் படைத்தார்.
உலகின் தலைசிறந்த கோல்கீப்பர்களில் ஒருவர் இத்தாலியின் டினோ ஸோஃப் (Dino Zoff) 40 வயதில், 1982 FIFA உலகக் கோப்பையை இத்தாலிய அணியின் கேப்டனாக வென்று, உலகக் கோப்பையை வென்ற அதிக வயதுடைய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். தொடர்ந்து 1142 நிமிடங்கள் வரை கோல் வாங்காத ஒரே கோல்கீப்பர் இவர் தான்.
2018 ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நைஜீரியாவை எதிர்த்து லீக் போட்டியில் மோதிய அர்ஜென்டினா அணியின் அனைத்து 11 வீரர்களின் வயதும் சராசரியாக 30 வயது 189 நாட்களுக்கு மேல் இப்படி ஒட்டுமொத்த அணியிலும் முதிய வயதினர் களமிறங்கியது அதுவே முதல் முறை.
லியோனல் மெஸ்ஸி 2006 ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தனது 19 வயதில் அர்ஜென்டினா அணி சார்பில் செர்பியா அணிக்கு எதிராக முதல் கோலை அடித்தார். பின் 2018 ல் நைஜீரியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்திலும் கோல் அடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் டீன் ஏஜ் மற்றும் 30 வயதுகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
ஆஸ்கார் தபரேஸ் (Óscar Tabárez) உருகுவே நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து பயிற்சியாளர் ஆவார். உருகுவே தேசிய கால்பந்து அணியின், நீண்ட காலம் (சுமார் 15 ஆண்டுகள்) தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றி உலக சாதனை படைத்தவர். உலகக் கோப்பை போட்டிகளில் ஈடுபட்ட அதிக வயதுள்ள கோச் இவர் தான். 2018 ல் உருகுவே அணிக்கு கோச்சாக இருந்த போது அவரின் வயது 71. இவர் கால்பந்தாட்ட மைதானத்திற்கு ஊன்றுகோலுடன் தான் வருவார். சில வேளைகளில் ஆட்டோமெடிக் வீல் சேரில் வருவார்.
ஜோஸ் பாடிஸ்டா (José Batista ) 1986 உலகக் கோப்பையில் உருகுவே (Uruguay) அணிக்காக விளையாடிய இவர், ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 56 வினாடிகளில் (ஆட்டத்தின் முதல் நிமிடத்தில்) செய்த அபாயகரமான ஃபவுலுக்காக வெளியேற்றப்பட்டார். இதுவே உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக ரெட் கார்டு ஆகும்.
எடின்சன் கவானி (Edinson Cavani) தனது தலைசிறந்த கோல் அடிக்கும் திறனுக்காக அறியப்பட்ட ஒரு உலகப் புகழ்பெற்ற உருகுவே கால்பந்து வீரர் ஆவார். குறிப்பாக 2018 உலகக் கோப்பை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போர்ச்சுகலுக்கு எதிராக இவர் அடித்த இரண்டு அபார கோல்கள் உலகப் புகழ்பெற்றவை. அந்த இரட்டை கோல்களை அடித்த போது அவரின் வயது 30 ஆண்டு மற்றும் 108 நாட்கள் இதன் மூலம் உலகக் கோப்பையில் அதிக வயதில் இரட்டை கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்த சாதனைகளுக்காக அவருக்கு மதிப்புமிக்க கோல்டன் ஃபுட் (Golden Foot) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
உலகக் கோப்பையை சிறுவயதிலேயே முதல் முறையாக வென்றவர் பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற பீலே. 1958ம் ஆண்டு உலகக்கோப்பை பெற்ற போது அவருக்கு வயது 17. 1958, 1962, 1970 ஆகிய மூன்று FIFA உலகத் கோப்பையை வென்ற ஒரே வீரர்.
உலகக் கோப்பையின் 96 ஆண்டுகால வரலாற்றிலேயே மிக உயரமான வீரரைக் கொண்ட அணியாக ஆஸ்திரியா 2026 போட்டியில் களமிறங்க உள்ளது. செக் குடியரசின் முன்னணி கிளப்பான விக்டோரியா பிள்சென் அணிக்காக விளையாடும் ஆஸ்திரிய கோல்கீப்பர் புளோரியன் வீகல் இந்த சாதனை படைக்க உள்ளார். அவர் 2.05 மீட்டர் (6 அடி 9.5 அங்குலம்) உயரம் கொண்டவர்.