FIFA உலகக் கோப்பை 2026: 96 ஆண்டுகால சாபம் முறியடிப்பு முதல் பீலேவின் சாதனை தகர்ப்பு வரை!

48 அணிகள், 104 போட்டிகளுடன் உலகக் கோப்பை வரலாற்றில் உருவான வரலாற்றுச் சாதனைகளின் பிரம்மாண்டத் தொகுப்பு.
வரலாற்றுச் சாதனைகள்-World Cup 2026 Record
வரலாற்றுச் சாதனைகள்-World Cup 2026 Record
Updated on

2026-ம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையில் அணிகளின் எண்ணிக்கை 48 ஆக உயர்த்தப்பட்டு, மொத்தம் 104 போட்டிகள் விளையாடப்பட்டன. அதில் வரலாற்றுச் சாதனைகள் படைத்த நாடுகளின் தொகுப்பு...

மெக்சிகோ அணி 1930 முதல் விளையாடி வருகிறது. இதுவரை 16 உலகக் கோப்பையில் விளையாடி யிருக்கிறது. 1974, 1982 ஆம் ஆண்டுகளில் தேர்வாகாத மெக்சிகோ அணி 1990ல் பங்கேற்க தடை செய்யப் பட்டது.1930ல் பிரான்ஸ் அணி மெக்சிகோவை 4-1 என வீழ்த்தியது. அதுமுதல் தனது முதல் உலகக் கோப்பையில் போட்டியில் மெக்சிகோ அணி வென்றதே கிடையாது. இந்த அணி இரண்டு முறை (1970, 1986) காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில், தனது சொந்த மண்ணில் 2026 உலகக் கோப்பை முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இதுநாள் வரைக்கும் இருந்த முதல் போட்டியில் தோல்வி என்ற 96 ஆண்டு சாபத்தை முறியடித்தது.

FIFA 26 - உலகக் கோப்பை முதல் போட்டியில் அமெரிக்கா பராகுவே நாட்டைச் சந்தித்தது அதில் அமெரிக்கா கால்பந்து உலகக் கோப்பையின் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு போட்டியில் நான்கு கோல்கள் அடித்து சாதனை படைத்தது . அதில் ஃபோலரின் பலோகன் 2 கோல்கள் அடித்த முதல் அமெரிக்க வீரராக மற்றுமொரு சாதனை படைத்தார். சொந்த மண்ணில் 32 ஆண்டுகளில் தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் வென்று அமெரிக்கா சாதனையை படைத்தது.

2026 பிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் வான்கூவரில் நடைபெற்ற 22-6-26 அன்று நடந்த ஆட்டத்தில் எகிப்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் எகிப்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் கடந்த 1934 ஆம் ஆண்டு அறிமுகமான எகிப்து அணி, முதல் முறையாக 93 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

600,000 மக்கள் தொகை கொண்ட நாடு, கேப் வெர்டே (Cape Verde) அது நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்தது. உலகக் கோப்பை நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிய மிகச் சிறிய நாடாக' கேப் வெர்டே 'பெயர் பெற்று.

உலகக் கோப்பை வரலாற்றில் சிறிய நாடுகளின் திறமையை உலகம் முழுவதும் அறிய வைத்துள்ளது. FIFA-வின் தகவலின்படி, இதற்கு முன்பு மிகச் சிறிய நாடாக டிரினிடாட் மற்றும் டொபாகோ(Trinidad and Tobago 2006) மற்றும் ஐஸ்லாந்து (Iceland 2018) உலகக் கோப்பையில் பங்கேற்றிருந்தாலும், முதல் முறையிலேயே நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது கேப் வெர்டே-வின் சாதனையாகும்.

வரலாற்றுச் சாதனைகள்-World Cup 2026 Record
வரலாற்றுச் சாதனைகள்-World Cup 2026 RecordAI Image

கால்பந்து உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணியை கடந்த 20 ஆண்டுகளாக 90 நிமிஷங்கள் அடங்கிய ரெகுலர் டைமிங்கில் எந்த அணியும் தோற்கடித்ததில்லை என்ற வரலாறு இந்த உலகக் கோப்பை வரை தொடர்கிறது. கடைசியாக 2006ல் போர்ச்சுகல் அணி நெதர்லாந்தை 90 நிமிஷ ரெகுலர் டைமிங்கில் தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை அந்த சாதனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நடப்பு ஃபிஃபா ரவுண்டு 32 நாக்அவுட் போட்டியில் சுவிட்சர்லாந்து மற்றும் அல்ஜீரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப்போட்டியில் யார் வெற்றிபெற்றாலும் முதல்முறையாக நாக்அவுட் போட்டியில் வெற்றிபெற்று வரலாறு படைப்பார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டியில் ஆதிக்கம் செலுத்திய சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கோல்கணக்கில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.

மிகக் கடுமையான நாக்அவுட் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற சுவிட்சர்லாந்து அடுத்ததாக, கொலம்பியா அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த 72 ஆண்டுகளாக உலகக்கோப்பை காலிறுதிக்கு கூட முன்னேறாத அணி என்ற அவப்பெயரை துடைத்து இருக்கிறது சுவிட்சர்லாந்து அணி.

இதையும் படியுங்கள்:
2026 உலகக் கோப்பை கால்பந்து: நெகிழ வைக்கும் தருணங்கள் & உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்கள்!
வரலாற்றுச் சாதனைகள்-World Cup 2026 Record

அமெரிக்காவின் நியூ ஜெர்சி திடலில் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ஜெர்மனி - ஈக்வடார் இடையிலான குரூப் இ பிரிவு போட்டி ஜூன் 25, 2026 நடைபெற்றது. இந்தப் போட்டியில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை 2 - 1 கோல் கணக்கில் ஈக்வடார் அணி தோற்கடித்து சாதன படைத்தது.

ஜெர்மனி - ஈக்வடார் இடையிலான போட்டியில் 36,05,357 பேர் கலந்துகொண்டு புதிய சாதனை படைத்தனர். ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றிலேயே அதிக பார்வையாளர்களைக் கொண்டதாக ஜெர்மனி - ஈக்வடார் போட்டி சாதனை படைத்துள்ளது.1994-ல் அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 35,87,538 பேர் பங்கேற்றிருந்தது இது வரை சாதனையாக இருந்தது. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடாரின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக ஒருநாள் பொது விடுமுறை அறிவித்து அதிபர் டேனியல் நோபோவா உத்தரவிட்டார்.

கால்பந்து உலகக் கோப்பை 2026-ல் இதுவரை ஒரு கோல்கூட விட்டுக்கொடுக்காத அணிகளாக ஸ்பெயின், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த தேசிய அணிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்நிலையில் 3 லீக் சுற்றுப் போட்டிகள், ஒரு நாக் அவுட் சுற்றுப்போட்டி , அரை இறுதி மற்றும் இறுதி போட்டி வரை எல்லா போட்டிகளிலும் க்ளீன் ஷீட் (கோல் விட்டுக்கொடுக்காமல் இருப்பது) பெற்று அசத்தியுள்ளது ஸ்பெயின் அணி.

உலகக் கோப்பையின் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் பிரான்ஸை 6-4 என வீழ்த்தி இங்கிலாந்து அணி வெண்கல பதக்கம் வென்றது.இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி தோற்றாலும் அதன் வீரர்கள் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்கள். எம்பாபே அதிக கோல் அடித்தவராக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
கிறிஸ்டியானோ ரொனால்டோவால் முடியாதது, எம்பாப்பேயிற்கு சாத்தியம்: கால்பந்து உலகில் புதிய ராஜா!
வரலாற்றுச் சாதனைகள்-World Cup 2026 Record

அதுமட்டுமில்லாமல், இந்தப் போட்டியில் மைக்கேல் ஒலிஸே 48, 66ஆவது நிமிஷத்தில் 2 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தினார். இந்த 2 அசிஸ்ட்டுகளைச் செய்ததன் மூலமாக பீலேவின் 56 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பீலே 6 அசிஸ்ட்டுகளை செய்து முதலிடத்தில் இருந்தார். கடைசி போட்டியில் ஒலிஸே 2 அசிஸ்டுகளை அடித்து மொத்தமாக இந்த உலகக் கோப்பையில் மட்டுமே 7 அசிஸ்ட்டுகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com