உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எர்லிங் ஹாலண்ட் படைத்த அசுர சாதனை!

559 குழந்தைகளுக்கு ஹாலண்ட் பெயர்; அர்ஜெண்டினா அணியின் மாமிச உணவு வியூகம் - ஒரு சுவாரசிய பார்வை.
உலகக் கோப்பை கால்பந்து - FIFA World Cup 2026
உலகக் கோப்பை கால்பந்து - FIFA World Cup 2026
Updated on

பிபா உலக கோப்பை கால்பந்தாட்ட 23 ஆவது  சீஸனில் அநேகரின் மனதை கவர்ந்த வீரராக நார்வேயின் எர்லிங் ஹாலண்ட்  திகழ்கிறார். காரணம்?

அதிக கோல் அடித்த வீரர்களின் வரிசையில் பிரான்ஸின் எம்பாப்வே (8 கோல்கள்); அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி (8 கோல்கள்) ஆகிய இருவருக்குப் பின் மூன்றாவது இடத்தில் ஹாலண்ட்  (7 கோல்கள்) இருக்கிறார்.

விபரங்கள்:

ஈராக்கிற்கு எதிராக 2; செனகல்லுக்கு எதிராக 2; ஐவரி கோஸ்ட்டிற்கு எதிராக 1; பிரேசிலுக்கு எதிராக 2 என மொத்தம் 7 கோல்களை அநாயசமாக போட்டிருக்கிறார். 5 முறைகள்  சாம்பியன் பட்டம் பெற்ற பிரேசிலை, நாக் அவுட் போட்டியில் வீழ்த்தி வீட்டிற்கு அனுப்ப காரணமாக ஹாலண்ட் இருந்தார்.

தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டில்,  நட்சத்திர கால்பந்து வீரர்களின் பெயர்களை  குழந்தைகளுக்கு சூட்டுவது வழக்கமாக உள்ளது.   தற்சமயம் எர்லிங் ஹாலண்டின் புகழ் பெருவில் பரவ, சுமார் 559 குழந்தைகளுக்கு எர்லிங் ஹாலண்ட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் நெய்மரின் பெயர் 33,800 பேருக்கும்,  மெஸ்ஸியின் பெயர் 3,402 பேருக்கும், ரொனால்டோ பெயர் 1,185 பேருக்கும், யமால் பெயர் 1,240 பேருக்கும் சூட்டப்பட்டுள்ளது.   இங்கிலாந்திற்கு எதிரான காலிறுதி போட்டியில் நார்வே ஜெயிக்காவிட்டாலும்,  நார்வே வீரர் எர்லிங் ஹாலண்டின் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது.

உலக சாதனையில் ஸ்பெயின்:  

37 போட்டிகளில் தோல்வி இல்லாமல் ஜெயித்துக்கொண்டு வரும் ஸ்பெயின், பிபா உலக கோப்பை அரை இறுதியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஒரு உலக சாதனையை படைத்துள்ளது. பிரான்ஸ் அணி  கேப்டன் எம்பாப்பேக்கு  நல்ல நெருக்கடியை அளித்தது ஸ்பெயின்.  தற்காப்பு ஆட்டத்தில் தங்களுக்கே உரிய தனித்திறமையை வெளிப்படுத்தியது. ஸ்பெயின் கோல்கீப்பர் உனய் சைமன், பிரான்ஸ் வீரர்களை கோல் போடவிடாமல் தடுத்தார்.

உலகக் கோப்பை கால்பந்து - FIFA World Cup 2026
உலகக் கோப்பை கால்பந்து - FIFA World Cup 2026

ஸ்பெயின் அணியில் விளையாடிய மைகேல் ஒயர்ஸபால் கடைசியாக விளையாடிய 20 போட்டிகளில் 18 கோல் அடித்துள்ளார்.  டேவிட் வில்லா(59) ; ரவூல் (44) ; டாரஸ் (38) ; அல்வரோ (37) ஆகியோர்களைத் தொடர்ந்து அதிக கோல் அடித்த ஆறாவது ஸ்பெயின் வீரர் என்கிற பெருமையை ஒயர்ஸபால்  பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்:
இந்தியா vs இங்கிலாந்து 2வது ஒருநாள் போட்டி: ஜோ ரூட் அதிரடியால் இந்தியா தோல்வி..!!
உலகக் கோப்பை கால்பந்து - FIFA World Cup 2026

வெற்றியின்  ரகசியம்:  

அரையிறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா இங்கிலாந்துடன் விளையாடுகையில்,  84 ஆவது நிமிடம் வரை 1-0 வில் இருந்த இங்கிலாந்து  ஜெயித்துவிடலாம் என்று போட்ட கணக்கு அடுத்த 7 நிமிடங்களில் மாறியது. அர்ஜெண்டினா தவிடு பொடியாக்கி வென்றது.  இங்கிலாந்தின் 60 ஆண்டு கால காத்திருப்பு பயனற்று போனது. அர்ஜெண்டினா அணி அபாரமாக விளையாடி வருவதற்கு நல்ல சிறப்பான உணவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. 

உலக கோப்பையைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டிய சக்தி பெற, கன்சாஸ் சிட்டியில் இருக்கும் முகாமிற்கு, 500 கிலோ மாட்டிறைச்சியை கப்பலில் கொண்டுவந்து, தினசரி சுடச்சுட பார்ஃபிக்யூ உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு  வீரர்களுக்கு அளிக்கப்படுகிறது. இது ஆற்றலையும,  வெற்றியையும் அளிக்கிறதென நம்புகின்றனர்.

ஞாயிறு  நள்ளிரவில் ஆரம்பமாகும் பரபரப்பான அர்ஜெண்டினா-ஸ்பெயின் மோதப்போகும்  ஃபைனலில்  உலகக் கோப்பை யாருக்கென்று தெரிந்துவிடும். காத்திருப்போம்.

இந்த கட்டுரையின் வாயிலாக உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியின் தற்போதைய கள நிலவரங்களையும், முன்னணி வீரர்களின் வியூகங்களையும் துல்லியமாக அறிந்துகொண்டு, ஞாயிறு நள்ளிரவு நடக்கவிருக்கும் மெகா பைனலை முழுமையான ஆட்ட விபரங்களுடன் ரசித்து மகிழலாம்.

இதையும் படியுங்கள்:
இனி ஆட்டம் வேற லெவல்! ஒருநாள், டி20 உலகக்கோப்பை தொடர்களில் ஐசிசி கொண்டு வந்த அதிரடி மாற்றங்கள்!
உலகக் கோப்பை கால்பந்து - FIFA World Cup 2026
logo
Kalki Online
kalkionline.com