ஃபிஃபா உலகக் கோப்பையை உலுக்கிய அரசியல் சதி: முசோலினி முதல் டிரம்ப் வரை அம்பலமாகும் ரகசியங்கள்!

FIFA controversies - உலகக் கோப்பை அரசியல்
FIFA controversies - உலகக் கோப்பை அரசியல்
Updated on

1930 முதல் தற்போதைய 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வரை அதில் விளையாட்டு வீரர்கள் மட்டும் விளையாடவில்லை, அரசியலும் தன் பங்கிற்கு விளையாடி வருகிறது. அவற்றில் சில இந்த பதிவில்.

2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்காக அதிக கோல்களை அடித்த முன்கள வீரர் ஃபோலரின் பலோகனுக்கு, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவுக்கு எதிரான வெற்றியின்போது 'ரெட் கார்டு' வழங்கப்பட்டது;

வழக்கமாக இது அவரை அடுத்த போட்டியில் விளையாட முடியாதபடி செய்திருக்கும். ஆனால், டிரம்ப் ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்த பிறகு, ஃபிஃபா அந்தத் தடையை 12 மாதங்களுக்கு ஒத்திவைத்தது, இந்த திடீர் நிலைமாற்றம் சர்வதேச விளையாட்டு உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஃபிஃபாவின் முன்னெப்போதும் இல்லாத முடிவின் காரணமாக, பெல்ஜியத்திற்கு எதிரான 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்று மேட்ச்சில் பலோகன் விளையாட அனுமதிக்கப்பட்டார்; ஆனால், அந்த ஆட்டத்தில் அமெரிக்கா 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

பாசிச இத்தாலியால் நடத்தப்பட்டு வெல்லப்பட்ட 1934 ஃபிஃபா உலகக் கோப்பையானது, இத்தாலிய சர்வாதிகாரி, பெனிட்டோ முசோலினியால் தனது ஆட்சியின் வலிமையை வெளிக்காட்ட நடத்தப்பட்டது. இந்த உலகக் கோப்பை போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் முசோலினி எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் மைதானத்திற்கு வருகை தந்து களநடுவர்களிடம் ஏதாவது சொல்லிவிட்டு செல்வார். காரணமில்லாமல் நடுவர்களின் அறைகளை மாற்றுவாராம். அதனால் இது ஃபிபா நடத்திய உலகக் கோப்பை அல்ல. முசோலினி நடத்திய உலகக் கோப்பை என்றே கருதப்பட்டது.

16 அணிகள் பங்கேற்ற இந்தத்தொடர் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இத்தாலியின் அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டியில் செக்கோஸ்லோவாக்கியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற ஆட்டம் ஆகிய இரண்டையும் நடுவராக இருந்து நடத்திய ஸ்வீடன் நடுவர் இவான் எக்லிண்ட் உட்பட, போட்டி அதிகாரிகளை முசோலினி தனிப்பட்ட முறையில் மிரட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இறுதியில், ரோமில் கூடுதல் நேரத்திற்குப் பிறகு இத்தாலி கோப்பையைக் கைப்பற்றியது. உலகக் கோப்பை போட்டியை நடத்திய ஜூல்ஸ் ரைமட் போன்றவர்களால் கூட ஒன்றும் செய்ய முடியாமல் போனது.

1938-ஆம் ஆண்டில் பிரான்சில் நடைபெற்ற உலகக் கோப்பையை "சர்வாதிகாரிகளின் இரட்டைத் தாக்குதல்" கொண்ட போட்டி என்று அழைத்தனர் , காரணம் 1938 ஃபிஃபா உலகக் கோப்பையை பாசிசத் தலைவர்களான பெனிட்டோ முசோலினியும் அடால்ஃப் ஹிட்லரும் போட்டியை தங்களது பிரச்சாரத்திற்காகப் பயன் படுத்திக்கொண்டனர்.

FIFA controversies - உலகக் கோப்பை அரசியல்
FIFA controversies - உலகக் கோப்பை அரசியல்AI Image

ஹிட்லரால் புதிதாக இணைக்கப்பட்ட ஆஸ்திரிய அணி வீரர்களை இறுதிப்போட்டியில் ஜெர்மன் அணியில் சேரக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இருப்பினும் சுவிட்சர்லாந்து அணியிடம் 4-2 என்ற கணக்கில் ஜெர்மன் தோற்றது. மேலும், ஹங்கேரி அணிக்கு எதிராக இத்தாலி விளையாடியபோது இத்தாலியத் தலைவர் முசோலினி தனது வீரர்களுக்கு "வெற்றி பெறு அல்லது செத்து மடி" என்ற இறுதி எச்சரிக்கையை விடுத்ததைத் தொடர்ந்து, இத்தாலி 4 கோல்கள் அடித்து வெற்றி பெற்று. கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.

அர்ஜெண்டினாவில் இருந்த ஜெனரல் ஜார்ஜ் ரபேல் விடேலா தலைமையிலான ராணுவ ஆட்சி, ஆயிரக்கணக்கான குடிமக்களைக் கொன்று குவித்து, கொடூரமான குற்றங்களைச் செய்த போதிலும், சர்வ தேச கால்பந்து சம்மேளனம் அதைக் கண்டுகொள்ளாமல் அர்ஜெண்டினாவிற்கு1978ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை வழங்கியது.

இதனால் 16 அணிகள் மட்டுமே கலந்து கொண்டன. சித்திரவதைக்குப் பெயர் பெற்ற ரகசிய தடுப்பு முகாம் கைதிகள் கூடத் தேசிய அணியை உற்சாகப்படுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். நெதர்லாந்தின் முதன்மை நட்சத்திர வீரர் ஜோஹன் க்ராய்ப், துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு அத்தொடரிலிருந்து விலக்கப்பட்டார். பெரு நாட்டையும் இறுதியில் நெதர்லாந்து நாட்டையும் தில்லுமுல்லு செய்தே கோப்பையை வென்றது அர்ஜென்டினா என்ற பேச்சு வழக்கில் உள்ளது. இதனால் அது கால்பந்து வரலாற்றின் மிக மோசமான உலகக்கோப்பைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நாடு திரும்பியதும் எடுக்கப்படவுள்ள பிசிசிஐ-யின் நடவடிக்கை; அச்சத்தில் இந்திய அணி
FIFA controversies - உலகக் கோப்பை அரசியல்

1982-ல் ஸ்பெயினில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பையின்போது, எஸ்டாடியோ ஜோஸ் சோரில்லா மைதானத்தில் பிரான்ஸ் மற்றும் குவைத் அணிகளுக்கு இடையேயான குழுநிலைப் போட்டியின்போது ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது.

ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில், அலெய்ன் ஜிரெஸ் அவர்களின் நான்காவது கோல் அடித்தபோது, பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. பார்வையாளர் அரங்கிலிருந்து ஒரு மர்மமான விசில் சத்தம் கேட்டதாகவும், நடுவர் ஆட்டத்தை நிறுத்திவிட்டார் என்று நினைத்ததாகவும் கூறி, குவைத் வீரர்கள் திடீரெனத் தற்காப்பை நிறுத்தினர்.

குவைத் ஒலிம்பிக் குழுவின் தலைவரும், குவைத் அமீரின் சகோதரருமான ஷேக் ஃபஹத் அல்-அஹ்மத் அல்-சபா, எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக பார்வையாளர் மாடத்திலிருந்து ஆடுகளத்திற்குள் நுழைந்தபோது, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பம் முன்னெப்போதும் இல்லாத நிலையை எட்டியது. அவர் தனது வீரர்களை ஆடுகளத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்:
சீனியர் வீரர்களின் அனுபவம் கைகொடுக்க, பர்மிங்காமில் இந்திய அணி எழுச்சியுடன் வெற்றி!
FIFA controversies - உலகக் கோப்பை அரசியல்

கடுமையான அரசியல் அழுத்தம் மற்றும் அணியைத் திரும்பப் பெறுவதாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக, சோவியத் நடுவர் மைரோஸ்லாவ் ஸ்டுபார் ஆச்சரியப்படும் விதமாகத் தனது முடிவை மாற்றி, அந்தக் கோலைச் செல்லாததாக்கினார். இருப்பினும், ஒரு நிமிடம் கழித்து பிரான்ஸ் அணி முற்றிலும் செல்லுபடியாகும் ஒரு கோலை அடித்து, இறுதியில் 4-1 என்ற கணக்கில் போட்டியை வென்றது.

சர்வதேச கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உள்ள அதிகார பலம், அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் தில்லுமுல்லுகளைப் புரிந்து கொள்வதன் மூலம், வெறும் பொழுதுபோக்காகத் தெரியும் ஒரு விளையாட்டு எவ்வாறு உலகளாவிய அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப் படுகிறது என்ற அரிய வரலாற்று ஞானத்தை வாசகர்கள் தெளிவாகப் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com