சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி விளையாடுவதற்கு முன்னரே அணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. அனைத்து அணிகளின் போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்திய அணி பயிற்சிக்காக முன்பே துபாய் சென்றுவிட்டது. இந்த சமயத்தில்தான், கம்பீருக்கும் இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
அதாவது கவுதம் கம்பீர் தன்னை ஓரங்கட்டுவதாகவும், பிளேயிங் லெவனில் தனக்கு இடம் அளிக்காமல் இருப்பதாகவும், ஒரு நாள் போட்டிகளில் தனக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் இருக்க வேறு காரணம் இருக்கிறது, வெளியே இருக்கும் ஒரு விஷயத்தை வைத்து தன்னை அணியில் தேர்வு செய்யாமல் இருப்பதாகவும் அந்த விக்கெட் கீப்பர் கருதுகிறாராம்.
ஆனால், இப்படி கருதும் வீரர் யார் என்று தகவல் வெளியாகவில்லை. ஏனெனில், இந்திய அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். ஒருவர் கே.எல். ராகுல், மற்றொருவர் ரிஷப் பண்ட். இவர்களில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கே.எல். ராகுலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அவரே மூன்று போட்டிகளிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டார்.
ஆனால், ரிஷப் பண்டுக்கு ஒரு நாள் அணியில் வாய்ப்பு அளிக்கவில்லை. ஒரு மாற்றுவீரராகவே செயல்பட்டார்.
அதேபோல், சமீபத்தில் கவுதம் கம்பீரிடம் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு சாம்பியன்ஸ் ட்ராபியில் அளிக்கப்படுமா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் “இப்போதைக்கு இந்திய ஒருநாள் அணியில் கே.எல். ராகுல் தான் முதன்மை விக்கெட் கீப்பர். ரிஷப் பண்டுக்கு இப்போதைக்கு அணியில் இடம் கிடைக்காது." என்றார்.
அப்படியென்றால், ரிஷப் பண்ட் அவ்வாறு கருதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், கவுதம் கம்பீர் மற்றும் ரிஷப் பண்ட் இடையே கருத்து வேறுபாடு நிலவியிருக்கலாம்.