உலகை ஆளும் கால்பந்து: எளிய விதிகளும் பலரும் அறியாத சுவாரசிய வரலாறும்!

Football Rules - கால்பந்து வரலாறு
Football Rules - கால்பந்து வரலாறு
Updated on

லகில் பல விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. அவற்றில் சில ஒரு சில பகுதிகளில் மட்டுமே பிரபலமாக இருக்கும். ஆனால் கால்பந்து மட்டுமே உலகெங்கும் பிரபலமாக இருக்கிறது. அதேவேளை அதிக பார்வையாளர்களைக் கொண்ட விளையாட்டாகவும் உள்ளது. ஏன் இந்த மவுசு? இதனை விளையாட ஒரு பந்து மட்டுமே போதுமானது.

எளிமையான விளையாட எளிய விதிமுறைகள். பந்து கோல் போஸ்ட்டுக்குள் விழுந்தால் கோல், அதிக கோல்கள் அடித்தால் வெற்றி. கோல் கிக், கார்னர் கிக், பாக்சுக்கு வெளியே ஃபவுல் ஆனால் ஃப்ரீ கிக், பாக்சுக்குள் ஃபவுல் ஆனால் பெனால்டி, கடுமையான ஃபவுல் செய்தால் மஞ்சள் அட்டை, அதைவிடக் கடுமையான ஃபவுல் என்றால் சிவப்பு அட்டை. அவ்வளவுதான். இதுவே, கால்பந்து உலகம் முழுவதும் பிரபலமாக காரணம்.

ஆனால், அந்த கோல் என்பதை கடினமானதாக மாற்றும் ஒரு விதி இருக்கிறது. பார்ப்பவர்களை குழப்பும், விளையாட்டு வீரர்களை அச்சுறுத்தும் ஒரு விதி - அது தான் ஆஃப் சைட்.

1883-ஆம் ஆண்டில் கால்பந்து சங்கம் (FA) முதன்முறையாக கால்பந்து விதிகளை முறைப் படுத்தியபோது முதன் முதலில் அறிமுகமானது தான் ஆஃப்சைடு முறை. கால்பந்தில் ஆஃப் சைட் (Offside) விதி, தாக்குதல் ஆட்டக்காரர்கள் கோல்கீப்பருக்கு அருகில் பதுங்கி நின்று எளிதாக கோல் அடிப்பதைத் தடுக்கிறது. பந்தை உங்கள் அணியைச் சேர்ந்தவர் உதைக்கும் நொடியில் (pass), நீங்கள் எதிரணியின் கோல் லைனுக்கு மிக அருகில், குறைந்தபட்சம் இரண்டு எதிரணி வீரர்களை விட (கோல்கீப்பர் உட்பட) முன்னால் நின்றால், நீங்கள் ஆஃப் சைட்.

மற்ற விளையாட்டுகளைப் போல் அதிக உபகரணங்கள் தேவையில்லை. ஒரு பந்து இருந்தால் போதும், எளிய திறந்தவெளியில் யார் வேண்டுமானாலும் விளையாடலாம். இதனால்தான் இது உலகளவில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்படுகிறது. விளையாட பிரம்மாண்டமான உடலமைப்பு தேவையில்லை. வேகம், சுறுசுறுப்பு, பந்தைக் கையாளும் திறன் ஆகியவை மட்டுமே முக்கியம்.

Football Rules - கால்பந்து வரலாறு
Football Rules - கால்பந்து வரலாறுAI Image

மேலும், ஒவ்வொரு தனி வீரருக்கும் தங்களின் திறமையை வெளிப்படுத்த சமமான வாய்ப்பு இத்தளத்தில் கிடைக்கிறது. போட்டியின் கடைசி நொடி வரை என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத விறுவிறுப்பு நிறைந்த விளையாட்டு இது.

இது வீரர்களுக்கு துடிப்பான முடிவெடுக்கும் திறனையும், வாழ்வியல் பாடங்களையும் கற்றுக்கொடுக்கிறது. ஆரம்பத்தில் டென்மார்க் நாட்டில் மண்டை ஓடுகளை உதைத்து விளையாடி வந்தனர். அது நாளடைவில் தோல் பைகளை உதைத்து விளையாடும் விளையாட்டாக மாறி இறுதியில் கால்பந்து விளையாட்டாக மாறியது. சர்வதேச விதிப்படி கால்பந்தாட்ட மைதானம் செவ்வக வடிவில் மைதான நீளம் 72 மீ, அகலம் 63 மீ இருக்க வேண்டும். கால்பந்து சுற்றளவு 70 செ.மீ.பந்தின் எடை 16 அவுன்ஸ் இருக்க வேண்டும்.ஒரு கால்பந்தாட்ட மைதானத்திற்குள் 51,000 பேர் நிற்க முடியும்.

கிபி 217 ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ' டர்ஃபி ' மைதானத்தில்தான் முதல் முறையாக கால்பந்து விளையாடப்பட்டது. ஆனால், இங்கிலாந்து நாட்டை ஆண்ட எட்டாம் ஹென்றியும் , முதலாம் எலிசபெத் ராணியும் கால் பந்து விளையாட்டை ஒரு முரட்டுத் தனமான விளையாட்டு என்று தடை விதித்திருந்தார்கள் ஒரு கால கட்டத்தில். கால்பந்து விளையாட்டிற்கென முறையான விதிமுறைகளை உருவாக்கியது 1846 ம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக விளையாட்டு மன்றம்தான்.

கால்பந்து விளையாட்டு வீரர்களை நடுவர்கள் விசில் ஊதி கட்டுப்படுத்துவார்கள். இது 1833 ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டில் அறிமுகமானது. கால்பந்து போட்டிகளில் 1880 ம் ஆண்டுதான் முதல் முறையாக ரெப்ரியை அறிமுகப்படுத்தினார்கள்.

1891 ம் ஆண்டுதான் ரெப்ரிகளுக்கு வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றும் முழு அதிகாரம் கொடுக்கப்பட்டது. 'லைன்மேன்கள்' என்று அழைக்கப்ட்டவர்கள்' உதவி ரெப்ரிகள்' என அழைக்கப்பட்டனர்.

கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் ரெப்ரிகள் மைதானம் முழுவதும் வீரர்களுக்கு இணையாக ஓடி வர வேண்டும் . உலகக்கோப்பை போட்டிக்காக தேர்வு செய்யப்படும் கால்பந்து நடுவர்கள் உடற்தகுதி சோதனையில் 12 நிமிடங்களில் 2 ஆயிரத்து 700 மீட்டர் தூரத்தை கடந்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப் படுவார்கள்.

இதையும் படியுங்கள்:
சரிந்து போன இந்திய அணி ! தொடர் தோல்விக்கு யார் பொறுப்பேற்பது? கேப்டனா? பயிற்சியாளரா?
Football Rules - கால்பந்து வரலாறு

கால்பந்தாட்டத்தில்' பெனால்டி கிக் ' 1891 ம் ஆண்டு அறிமுகமானது. கால்பந்தாட்டத்திற்கு 'சாக்கர்' என்று ஒரு பெயர் உண்டு. அந்தப் பெயரை வைத்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சார்லஸ் டபிள்யு பிரெளன். 1939 ம் ஆண்டு முதல் கால்பந்தாட்டத்தில் 'எண்கள்' எழுதப்பட்ட பனியனை கால்பந்து வீரர்கள் அணிகிறார்கள். ஒலிம்பிக் போட்டிகளில் கால்பந்து இடம்பெற்றது 1900 ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில்தான்.

ஒவ்வொரு நாடும் ஒரு கால்பந்து சங்கத்தை ஏற்படுத்தின, தனித்தனியாக பிரிந்து கிடந்த இந்த அமைப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பாரீஸ் நகரில் 1904 ம் ஆண்டு சர்வதேச கால்பந்து சம்மேளமான ஃபிபா (FIFA) உருவாகியது. துவக்கத்தில் இதில் பிரான்ஸ், பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து என 7 நாடுகள் மட்டுமே உறுப்பினர்கள். தற்போது சர்வதேச கால்பந்து சங்கத்தில் 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். அகில இந்திய கால்பந்து சங்கம் 1937 ம் ஆண்டு துவங்கப்பட்டது.

இந்த ஃபிபாதான் தற்போது 4 வருடங்களுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துகிறது. உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூல்ஸ் ரைமட் மற்றும் ஹென்றி டிலானே என்ற பிரெஞ்சுக்காரர்களின் மூளையில் 1930 ம் ஆண்டு உதித்தது.

இதையும் படியுங்கள்:
மெஸ்ஸிக்காக எகிப்து அணியை ஏமாற்றிய நடுவர்.. உலகக் கோப்பையில் நடந்த பகீர் சம்பவம்!
Football Rules - கால்பந்து வரலாறு

1970 ம் ஆண்டு வரை கால்பந்து போட்டிகளில் பயன்படுத்திய பந்துகள் பல வண்ணங்களில் இருந்தது.1970 ம் ஆண்டு மெக்சிகோ உலகக் கோப்பை கால்பந்து போட்டியில்தான் முதல் முறையாக கருப்பு - வெள்ளை நிறத்தில் உள்ள கால்பந்து பயன்படுத்தப்பட்டது.

இந்தத் தொகுப்பை வாசிப்பதன் மூலம், உலகப் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டின் பின்னணியில் இருக்கும் எளிய விதிகள் முதல் அதன் வியப்பூட்டும் பரிணாம வளர்ச்சி வரையிலான அத்தனை வரலாற்று உண்மைகளையும் நீங்கள் துல்லியமாக அறிந்து கொள்ளலாம். விளையாட்டு விவாதங்களில் ஒரு நிபுணரைப் போல உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆழமான புரிதல் உங்களுக்குக் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com