இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில், இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்கு இவர்கள்தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நேற்று டி20 போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 133 என்ற இலக்கை அடைந்து 43 பந்துகள் மீதமிருந்த நிலையில், வெற்றிபெற்றது.
இந்திய அணி வெற்றிபெற அபிஷேக் ஷர்மாவும் குறிப்பிட்ட பங்கை ஆற்றினார். 34 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இதில் எட்டு இமாலய சிக்சர்களும் ஐந்து பவுண்டரிகளும் அடங்கும்.
அபிஷேக் ஷர்மாவுக்கே ஆட்ட நாயகன் விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் வீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதால் ஆட்டநாயகன் விருதை வாங்கினார்.
இப்படியான நிலையில், அபிஷேக் ஷர்மா தனது சிறப்பான ஆட்டத்திற்கு இவர்கள்தான் காரணம் என்று பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசியதைப் பார்ப்போம். “ எனது சிறப்பான ஆட்டத்திற்கு பயிற்சியாளர் கம்பீரும், கேப்டன் சூர்யகுமார் யாதவும் கொடுத்த சுதந்திரம் தான் காரணம்.
ஆடுகளம் கொஞ்சம் கணிக்க முடியாத படி இருந்தது. ஆனால் எங்களுடைய பவுலர்கள் அபாரமாக செயல்பட்டார்கள். நான் பில்டிங் செய்யும் போது 160 முதல் 170 ரன்கள் துரத்த வேண்டி இருக்கும் என நினைத்தோம்.
நானும் சஞ்சு சாம்சனும் சிறந்த பார்டனராக இருக்கறோம். ஐபிஎல் – ல் விளையாடுவது போலதான் விளையாட நினைத்தேன்.
ஆனால் சர்வதேச கிரிக்கெட் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. இங்கு நமது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். நமக்கு வரும் ஷாட் பாலை சிறப்பாக ஆட வேண்டும். ஒரு ஷாட்டை எப்படி ஆட வேண்டும் என்பதற்கான ஆரம்பப் புள்ளி குறித்து நான் பயிற்சியில் ஈடுபட்டேன். எனக்கு ஷார்ட் பால் அதிகம் வீசப்படும்.
இங்கிலாந்து பவுலர்கள் எப்படி சோதிப்பார்கள் என்பதை அறிந்து அதற்கேற்றவாரு பயிற்சி செய்தேன்.” என்று பேசினார்.