கம்பீர் - ஸ்ரீசாந்த் மோதல்: 'ஃபிக்ஸர்' என வசைபாடிய கம்பீர்? ஸ்ரீசாந்த் ஓபன் டாக்!

லெஜண்ட்ஸ் லீக் போட்டியில் கம்பீர் - ஸ்ரீசாந்த் இடையே நடந்த அதிர்ச்சி மோதலின் பின்னணி!
Sreechanth open Gambhir words
Sree chanth and Gowtham GambhirImage credit: ESPN Cricinfo
Updated on

இந்திய கிரிக்கெட் வீரர்களில் கவுதம் கம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் பற்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். இவர்கள் நல்ல விளையாட்டு வீரர்கள் என்றாலும் எப்போதும் சர்ச்சையை தங்களது பையில் கட்டிக்கொண்டு அலைபவர்கள். அதிலும் முக்கியமாக ஸ்ரீ சாந்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் இன்று வரையிலும் சுற்றி வருகின்றன.

2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற அணியிலும் , 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியிலும் இருவரும் இடம் பெற்றிருந்தனர். சக வீரர்களாக இருந்த இவர்கள் தற்போது கடந்த கால நட்பினை மறந்து பொதுவெளியில் அவதூறு கூறி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் ஒரு வட இந்திய ஊடகத்திற்கு பேட்டி அளித்த ஸ்ரீசாந்த் , "கௌதம் கம்பீர் தன்னை அவதூறாக பேசியதைப் பற்றி குறிப்பிட்டு இருந்தார். இது தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2023 டிசம்பரில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (LLC)போட்டியின் நடைபெற்றது. அந்த போட்டியின் போதே இருவருக்கும் கடுமையான வார்த்தை மோதல் வெடித்தது.

அந்த போட்டியில் கம்பீர் பேட்டிங் புடிக்கும் போது , நான் வீசிய பந்தை ஏறி வந்து அடித்தார். அவர் ஒரு நல்ல பேட்ஸ்மேன் என்பதால் அடுத்த பந்தை கடுமையான பவுன்சராக வீசினேன். அந்த பவுன்சர் வீசிய பிறகு, கம்பீர் தன்னை நோக்கி கோபமாக ஒரு சில மோசமான வார்த்தைகளால் திட்டியதாக" கூறியுள்ளார்.

நான் அமைதியாக "கௌதி (காம்பீர்) பாய், நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?" என்று கேட்டேன். ஆனால், கம்பீர் மோசமான கெட்ட வார்த்தைகளால் என்னை வசைப் பாடினார். என்னை 'ஃபிக்ஸர்' என்றும் 'தேசத்துரோகி' என்றும் நோகும்படி திட்டியிருந்தார். என்று ஶ்ரீசாந்த் நேர்காணலில் கூறியிருந்தார்.

மோதலின் போது கம்பீர் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு பின்னால் சில உண்மை சம்பவங்களும் நடந்துள்ளது. 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது ஸ்ரீசாந்த் மீது ஸ்பாட் ஃபிக்சிங்(ஆட்டத்தின் முடிவை முன்பே தீர்மானிப்பது) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளின் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆயுட்கால தடை விதித்தது.

Cricket players controversy
Sree chanth and Gowtham Gambhir image credit:Khel

இதை எதிர்த்து நீண்ட காலம் சட்ட போராட்டத்தினை ஸ்ரீசாந்த் நடத்தினார். அதன் பின்னர் இந்த தடை 7 ஆண்டு காலமாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் ஸ்ரீசாந்த் 2020-ல் மீண்டும் கிரிக்கெட் விளையாட தகுதி பெற்றார். 2020 ஆம் ஆண்டிற்கு பின்னர் இரண்டு வீரர்களின் வாழ்க்கையும் வேறு வேறு திசையில் சென்று விட்டது.

கௌதம் கம்பீர் விளையாட்டிலும் அரசியல் களத்திலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்து விட்டார்.இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் தற்போது இருக்கிறார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026 டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை வந்து சாதனை செய்துள்ளது.

ஸ்ரீசாந்த் தற்போது ஓய்வு பெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் லீக் போன்ற போட்டிகளில் விளையாடி வருகிறார். சில நேரங்களில் கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். முன்பு ஒருமுறை ஶ்ரீ சாந்த் இந்திய அணியின் பவுலர் ஹர்பஜன் சிங்கிடம் மைதானத்தில் அறை வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
Chess Boxing: உலகிலேயே மிகவும் விசித்திரமான விளையாட்டு..!
Sreechanth open Gambhir words
logo
Kalki Online
kalkionline.com