

1968 ஆகஸ்ட் 31 அன்று கிளாமோர்கன் – நோட்டிங்கம்ஷயர் முதல் தர ஆட்டத்தில், வேகப்பந்து வீச்சாளர் மால்கம் நாஷின் ஒரு ஓவரில் சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் தொடர்ந்து ஆறு சிக்ஸர்கள் அடித்து கிரிக்கெட் வரலாற்றை மாற்றினார். ஸ்பின் முயற்சியாக தொடங்கிய அந்த ஓவர், டி20 காலத்தின் அதிரடி பாணிக்கு முன்னோடி எனக் கருதப்படும் மறக்க முடியாத தருணமாக மாறியது.
அந்த 6 பந்துக்கள் ஓவர்.
மால்கம் நாஷ் என்ற 23வயது பவுலரால் வீசப்பட்ட அந்த ஓவரின் 6 பந்துக்களும் காரி சோபர்ஸ் அவர்களால் துவம்சம் செய்யப்பட்டு 6 சிக்ஸர்களை வரிசையாக பெற்று தந்து கிரிக்கெட் வரலாற்றில் நிரந்தர இடம் பெற்ற நாள் 31 ஆகஸ்ட் 1968.
மால்கம் நாஷ் இடது கை வேகப்பந்து வீச்சாளர். இடது கை பேட்ஸ்மன். இவர் கிளாமோர்கன் அணிக்காக முதல் தர கிரிக்கெட் ஆடியவர்.
அன்றைய குறிப்பிட்ட தினத்தில் இவர் நோட்டிங்கம்ஷயர் அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுக்கள் எடுத்த நிலையில் எதிரணி கேப்டன் காரி சோபர்ஸ் ஆடிய ஆட்டம் புரட்டிப் போட்டு விட்டது.
பொதுவாக வேகப்பந்து வீசும் மால்கம் நாஷ் அன்று சோபர்ஸ் ;அவர்களுக்கு அந்த குறிப்பிட்ட 6 பந்துக்கள் ஓவர் வீசும் தருணத்தில் ஸ்பின் பவுலிங் (புகழ் பெற்ற ஸ்பின் பவுலர் டிரேக் அன்டர் வுட் பாணியில்) செய்ய முடிவு செய்தார்.
மூன்று பந்துக்கள் சிக்ஸர்ஸ் ஆக சென்ற பொழுது நாஷ் அணியின் கேப்டன் டோனி லெவிஸ் இவரிடம் வந்து உங்களுக்கு வேகப்பந்துக்கள் வீசுவதுதான் சரிப்படும். எனவே மீதி மூன்று பந்துக்களை வேகப்பந்து முறையில் வீசவும் என்று அறிவுரை வழங்கினார். அதற்கு மால்கம் நாஷ் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தொடர்ந்து பந்துக்களை மெதுவாக ஸ்பின் முறையில் வீசினார்.
வேகப்பந்து வீச்சாளர் மால்கம் நாஷை காரி சோபர்ஸ் துவம்சம் செய்த தருணம்:
நோட்டிங்கம்ஷயர் அணிக்கு அதிக ரன்கள் வேகமாக பெற முடிவு செய்த அந்த அணி கேப்டன் காரி சோபர்ஸ் , மால்கம் நாஷின் இந்த குறிப்பிட்ட ஓவரில் அதிரடி ஆட்டத்தை தேர்ந்து எடுத்தார்.
முதல் பந்து
மிட் விக்கெட் திக்கில் சென்று மைதானத்தைத் தாண்டி விழுந்தது.
இரண்டாவது பந்து
இதுவும் மிட் விக்கெட் திக்கில் அடிக்கப்பட்டு பார்வையாளர்கள் மத்தியில் விழுந்தது.
மூன்றாவது பந்து
நாஷ் ஆப் சைடில் பந்தை எரிய சோபர்ஸ் லாங் ஆன் பகுதிக்கு எளிதாக செலுத்தினார்.
நான்காவது பந்து
நாஷ் நேராக வீசிய பந்து சோபர்ஸ் பேக்வர்ட் ஸ்கோயர் லெக் பகுதிக்கு செலுத்த அந்த பந்து பவுண்டரி கோட்டிற்கு அப்பால் கான்கிரீட் டெர்ரேஸ்சில் விழுந்தது.
அப்பொழுதுதான் அடுத்த இரண்டு பந்துக்களிலும் சிக்ஸர்கள் எடுக்க முடிவு செய்தேன் என்று சோபர்ஸ் கூறினார்.
ஐந்தாவது பந்து
சோபர்ஸ் சிக்ஸ் அடிக்க எண்ணினார். முயலவும் செய்தார். நாஷ் நேராக போட்ட பந்தை சோபர்ஸ் பவுலரின் தலைக்கு மேல் தூக்கி அடித்தார். சிக்ஸ் செல்லும் என்று எதிர்பார்த்த பொழுது ரோஜர் டேவிஸ் என்ற பீல்டரால் கேட்ச் பிடிக்கப்பட்டது. சோபர்ஸ் பெவிலியனுக்கு திரும்ப தயார் ஆனார். ஆனால் கேட்ச் பிடித்த வேகத்தில் பவுண்டரி எல்லை கோட்டிற்கு அப்பால் பீல்டர் விழுந்தக் காரணத்தால் சோபர்ஸ் அவுட் ஆகவில்லை. அவருக்கு 6 ரன்கள் கிடைத்தது.
ஆறாவது பந்து
ரெடியாக நின்று கொண்டிருந்த சோபர்ஸ் அந்த ஓவரின் கடைசி பந்தை மிட் விக்கெட் திக்கில் அடிக்க அந்த பந்து மைதானத்தின் வெளியே கிங் எட்வர்ட் சாலையில் எங்கோ விழுந்து காணாமல் போனது. அதை கண்டு எடுத்த பள்ளி சிறுவனால் திரும்ப பெறப்பட்டது.
இந்த ஆறு பந்துக்கள் சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட அந்த ஓவர் சரித்திரத்தில் இடம் பெற்றது.
பிபிசியில் ரேடியோ காமென்ட்ரி நேரடியாக இந்த நிகழ்விற்கு ஒளிபரப்பபட்டது.
அந்த மேட்ச்சில் சோபர்ஸ் ஸ்கோர்
76* நாட் அவுட் மற்றும் 72 ரன்கள்
நாஷ் எடுத்த விக்கெட்டுக்கள்
4 மற்றும் 1
சோபர்ஸ் அணி 166 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
காரி சோபர்ஸ், மால்கம் நாஷ் இருவரும் வருடம் தோறும் நடைபெற்ற கோல்ப் ஆட்டங்களில் வழக்கமாக சேர்ந்து விளையாடி வந்தனர்.
அந்த ஆறு சிக்ஸர்கள் நிகழ்வை பற்றி பல்வேறு இடங்களில் பேசி நாஷ் சம்பாதித்து வருவதாக மால்கம் நாஷ் இருக்கும் பொழதே கூறி மகிழ்ந்தார் காரி சோபர்ஸ்.
அதே மைதானத்தில் ஒரு முதல் தர ஆட்டத்தில் மற்றோரு முனையில் இருந்து மால்கம் நாஷிற்கு பந்து வீசும் சந்தர்ப்பம் கிட்டியது. அதே ஆக்ஸ்ட் மாதம். தேதி 29 வருடம் 1977. பேட்ஸ்மன் பிரேங்க் ஹய்ஸ். இந்த ஓவரில் மறுபடியும் சிக்ஸர்கள் மழை. .இந்த முறை இரண்டாவது பந்தில் பிரேங்க் ஹய்ஸ் பவுண்டரி எடுத்தார். மற்ற 5 பந்துக்களில் சிக்ஸர்கள். இந்த ஓவரில் மொத்த ரன்கள் 34.
நாஷ் முதல் தர ஆட்டங்களில் இரண்டு சதங்கள் எடுத்துள்ளார். மொத்தம் ரன்கள் 7129.
இவர் எடுத்த விக்கெட்டுக்கள் 993.
இந்த வரலாற்றுப் பதிவை வாசிப்பதன் மூலம், நவீன டி20 கிரிக்கெட்டின் அதிரடி ஆட்டத்திற்கு வித்திட்ட 1968-ஆம் ஆண்டின் அந்த புகழ்பெற்ற ஓவரைப் பற்றிய துல்லியமான வியூகங்களையும், அழுத்தமான சூழலிலும் கேப்டனாக சோபர்ஸ் எடுத்த சாதுரியமான முடிவுகளையும் துல்லியமாக அறிந்துகொண்டு, உங்கள் கிரிக்கெட் வரலாற்று அறிவை மேம்படுத்திக்கொள்ள முடியும்.