உணவே மருந்தாக இஞ்சி!

Ginger
Ginger
Published on

மூச்சிரைப்பு மற்றும் சளியை நீக்கும் இஞ்சி:

  • இஞ்சிச்சாறு,

  • வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சப் பழச்சாறு (ஏதேனும் ஒன்று)

  • 30 மில்லி சாறு எடுத்து, அதனுடன் 15 மில்லி தேன் கலந்து குலுக்கி, அந்தக் கலவையிலிருந்து 15 மில்லி சாறு எடுத்து குடித்து வர சளியால் வரும் வாந்தி, குமட்டல் போன்றவை குணமாகும்.

  • இஞ்சிச்சாறு,

  • மாதுளம் பழச்சாறு,

  • இவ்விரண்டு சாறுகளையும் 30 மிலி அளவு எடுத்து அதனுடன் 15 மில்லியளவு தேன் கலந்து அந்த கலைவையிலிருந்து 15 மிலி எடுத்து 3 வேளை குடிக்க இருமல், இரைப்பு தீரும்.

  • சளி அடைப்பு நீங்க, ஆஸ்துமா பிரச்னை தீர இஞ்சி அரு மருந்தாக செயல்படுகிறது.

  • 10 கிராம் இஞ்சி,

  • 3 வெள்ளருக்கம் பூ,

  • 6 மிளகு இலைகள்

Ginger
Ginger
  • மிளகு இலைகளை சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போடவும்.

  • அதனுடன் மேற்சொன்ன அளவுகளில் இஞ்சி, வெள்ளருக்கம் பூ போட்டு, அதை 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டிகொள்ளவும்.

  • அதை காலை , மாலை 2 வேளை குடித்து வந்தால், ஆஸ்துமா, நுரையீரல், சளி அடைப்பு நீங்கும்.

  • இஞ்சியை நன்றாகத் தட்டி, அதை 4 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதன் பிறகு அந்த நீரை இறக்கி தூய்மையான வெள்ளைத்துணி கொண்டு வடிகட்டி அந்த நீரில் போதுமான அளவு பனங்கற்கண்டு சேர்த்து கலந்து, அந்த நீரை அளவோடு குடித்து வந்தால், மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜீரணம் பிரச்னை குணமாகும்.

  • நன்றாக முற்றிய இஞ்சியை தேடி எடுங்கள். அதை முழுவதுமாக தோல் நீக்கி, நன்றாக அரைத்து சாறு எடுக்கவும்.

  • அந்த சாற்றினை தெளிய வைத்து அதனுடன் சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து எடுத்துக்கொள்ளவும்.

  • அடுப்பை சிம்மில் வைத்து அந்த கலவையை பதமாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு பாத்திரம் அல்லது கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளவும்.

  • அதை எடுத்து தலைக்கு பூசி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை நீங்கும். நீர்பீனிசம் போய்விடும்.

  • தலைவலி வரவே வராது. கழுத்து நரம்புப் பிசிவு போய்விடும். தலைப்பாரம், அடுக்குத் தும்மல் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com