

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 23வது காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை 74 நாடுகள், 3,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்புடன் நடைபெறுகிறது. விக்டோரியா விலகியதால் 10 விளையாட்டுகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன; பேட்மிட்டன், ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட 9 போட்டிகள் நீக்கப்பட்டதால் இந்தியாவின் பதக்க வாய்ப்பு குறையலாம் என்ற கவலை எழுந்துள்ளது. 74 நாடுகளைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
பிரிட்டிஷ் பேரரசின் ஆளுகையில் இருந்த நாடுகள் ‘காமன்வெல்த் நாடுகள்’ என அழைக்கப்பட்டதால் அந்த நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் ‘காமன்வெல்த் போட்டிகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வழக்கமாக 20க்கும் மேற்பட்ட போட்டிகள் இடம்பெறும். ஆனால் ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடக்க இருந்த போட்டிகள் போதிய நிதி இல்லாததால் 2023 ஆம் ஆண்டு போட்டிகளை நடத்த இயலாது என விக்டோரியா விலகியது.
அதனால் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி நடத்தும் வாய்ப்பை பெற்றது. மீதம் 3 ஆண்டுகள் மட்டுமே இருந்ததால் தடகளம், நீச்சல், ட்ராக் சைக்கிளிங், பளுதூக்குதல், கூடைப்பந்து (3×3) லான் பவுல்ஸ், நெட்பால், ஜிம்னாஸ்டிக், ஜூடோ, குத்துச்சண்டை என 10 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட உள்ளன. ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' போட்டிகள் இடம்பெற உள்ளன. மொத்தம் 215 பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.
நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் நிலையில் வீரர் வீராங்கனைகள் தங்குவதற்கு என விளையாட்டு கிராமம் உருவாக்கப்படவில்லை. இங்குள்ள ஹோட்டல்களில் வீரர்கள் தங்க வைக்கப்பட உள்ளனர்.
பேட்மிட்டன், ஹாக்கி, கிரிக்கெட், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், ட்ரையத்லான், மல்யுத்தம், பீச் வாலிபால் என 9 போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவிற்கு அதிக பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு நழுவியுள்ளது.
3 'வி' லோகோ
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதன் முதலாக ஒருங்கிணைந்த லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. வெற்றியை குறிக்கும் வகையில் ஆங்கில' வி' வடிவ மூன்று எழுத்துக்கள் சமத்துவம் மனிதநேயம், ஆற்றலைக் குறிக்கும் வகையில் இணைந்து உள்ளன.
ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, கரீபியன், ஐரோப்பா, ஓசியானா என காமன்வெல்த் நாடுகள் இடம்பெற்ற பகுதிகளை ஆறு பிரிவுகள் பிரதிபலிப்பதாக லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது .வரும் போட்டிகளில் இது பொதுவான லோகோவாக பயன்படுத்தப்படும்.
காமன்வெல்த் விளையாட்டுக்கு என வழக்கமாக போட்டி நடத்தும் நாடுகள் தனித்தனியாக லோகோ தேர்வு செய்யும் முறை இதற்கு முன்பு வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கொடி கெளரவம்
காமன்வெல்த் விளையாட்டு துவக்க விழா நிகழ்ச்சிகள் ஜூலை 23ஆம் தேதி தி ஓ. வி. ஓ. ஹைட்ரோ மைதானத்தில் நடக்க உள்ளன. இதில் இந்திய மூவர்ணக் கொடியை ஒலிம்பிக் பளுதூக்குதலில் பதக்கம் பெற்ற மீராபாய் ஷானு, குத்துச்சண்டையில் பதக்கம் பெற்ற லவ்லினாவும் ஏந்தி வர உள்ளனர். இந்தியா சார்பில் இம்முறை 77 வீரர் 48 வீராங்கனைகள் என மொத்தம் 125 பேர் பங்கேற்கின்றனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் 19 போட்டிகள் இடம் பெற்றதில் இந்தியா சார்பில் 210 பேர் கொண்ட குழு பங்கேற்றது. இதில் 61 பதக்கங்களுடன் நான்காம் இடம் பிடித்திருந்தது.
இம்முறை இந்தியா பதக்கம் வென்ற போட்டிகள் இடம் பெறாத நிலையில் பதக்க வேட்டை பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது. ஆனாலும் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் பதக்கம் பெற வேண்டும் என பிரார்த்திப்பது ஒவ்வொரு இந்திய வீரரின் கடமையாகும்.
2030 ஆம் ஆண்டு குஜராத்தில் ஆமதாபாத் நகரில் அடுத்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2010-இல் புதுதில்லியில் காமன்வெல்த் போட்டி ஏறக்குறைய 1100 பில்லியன் அமெரிக்க டாலா்கள் செலவில் நடைபெற்றது. 71 நாடுகளில் இருந்து 6,081 போ் பங்கேற்றனா்.
ஜூலை 23-இல் ஓ.வி.ஓ. ஹைட்ரோ மைதானத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் இங்கிலாந்து மன்னா் சாா்லஸ், அரசி கமீலா, ஸ்காட்லாந்தின் பிரபலமான தடகள வீரா் கிறிஸ் ஹாய் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்கின்றனா். போட்டிகளில் பங்கேற்கும் 74 நாடுகளின் பேட்டன்கள் முதன்முறையாக கிளாஸ்கோவில் கொண்டு வரப்படுகின்றன.
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் தொடரில் இந்திய அணி எதிர்கொள்ளும் சவால்கள், பதக்க வாய்ப்புகள் மற்றும் போட்டிகளில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்த தெளிவான புரிதலைப் பெற்று, போட்டிகளைப் பற்றிய துல்லியமான தகவல்களுடன் நீங்கள் தயாராக முடியும்.