

உலகப்புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் ஆட அதுவும் டெஸ்ட் கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாகும். லார்ட்ஸ் மைதானம்தான் உலகின் முதல் கிரிக்கெட் மைதானம் ஆகும். ஆனால், லார்ட்ஸ் மைதானம் முதன்முதலில் உருவானது தற்போது இருக்கும் இடத்தில் அல்ல.
தாமஸ் லார்ட் என்பவரால் கடந்த 1787ம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டனில் உள்ள தென்கிழக்கில் உள்ள ரீஜண்ட் பார்க்கில் உள்ள செயின்ட் மெர்ல்போனில்தான் முதன்முதலில் லார்ட்ஸ் மைதானம் உருவானது. பின்னர், 1811ம் ஆண்டு இந்த மைதானம் மாற்றப்பட்டது. செயின்ட் ஜான்ஸ் உட் எஸ்டேட்டிற்கு மாற்றப்பட்டது. அங்கு 1814ம் ஆண்டு வரை மைதானம் செயல்பட்டு வந்தது.
அதன் பின்னர், 1814ம் ஆண்டுக்கு பிறகுதான் தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் லண்டனின் செயின்ட் ஜான்ஸ் வுட் பகுதியில் அமைந்துள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் இதனை உருவாக்கியவர் நினைவாகவே இந்த மைதானத்திற்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.
இந்த மைதானமே உலகின் பழமையான செயல்பாட்டில் உள்ள கிரிக்கெட் மைதானமாகும்.எனவே இது, 'கிரிக்கெட்டின் தாயகம்' என்று அழைக்கப்படுகிறது. மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்பின் (MCC) தலைமையகமான இந்த மைதானம், 31,100 பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்டது.
இது உலகின் மிகச்சிறந்த மற்றும் பழமையான சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும்.2005 ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமையகம் லார்ட்ஸில்தான் செயல்பட்டு வந்தது. அதன் பின்னர், துபாய்க்கு மாற்றப்பட்டது.
இதன் டெரகோட்டா நிற பெவிலியன் 1890-இல் கட்டப்பட்டது.லார்ட்ஸ் மைதானத்தின் ஆடுகளம் வடக்கிலிருந்து தெற்காக சுமார் 2.5 மீட்டர் வரை சாய்வாக இருக்கும், இது பந்து வீச்சாளர்களுக்கு ஒரு தனித்துவமான சவாலை அளிக்கிறது. வயது வந்த பார்வையாளர்கள் மைதானத்திற்குள் தங்களுக்குரிய மதுவை கொண்டு வர அனுமதிக்கப்படும் உலகின் ஒரே சர்வதேச கிரிக்கெட் மைதானம் இதுவாகும்.
142 ஆண்டு காலமாக லார்ட்ஸ் மைதானத்தில் ஆண்கள் டெஸ்ட் போட்டி மட்டுமே நடைபெற்று வருகிறது. ஆண்கள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் 1884 ஜூலை 21 முதல் 23 வரை நடைபெற்றது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதன் பின் 1934-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை இங்கு ஆடிய டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
ஆண்கள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய லார்ட்ஸ் மைதானத்தில் முதல் முறையாக பெண்களுக்கான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி 2026 ஜூலை 11 அன்று தொடங்கியது. அன்று நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சரித்திர வெற்றி படைத்தது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி.
கிரிக்கெட்டின் பழமையான அருங்காட்சியகம், லார்ட்ஸ் மைதானத்தில்தான் உள்ளது. ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு காரணமாக இருந்த பெண்கள் கொடுத்த அஸ்தியை அந்நாளில் எம்.சி.சி.யிடம் ஒப்படைத்தார்கள். அது தற்போது லார்ட்ஸ் மைதானத்தின் அருங்காட்சியகத்தில் தான் உள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில் 1975, 1979, 1983, 1999, 2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. 1993 மற்றும் 2017 ஆம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளும் இங்கு நடைபெற்றுள்ளது. இந்திய அணி, 1983 ஆம் ஆண்டு முதல்முறையாக உலகக்கோப்பையை வென்றதும் இந்த மைதானத்தில்தான்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக செஞ்சுரி போடப்பட்டது இந்த மைதானத்தில் தான்.இங்கிலாந்து வீரர் 'டென்னிஸ் ஆபிஸ்.' இந்தியாவிற்கு எதிராக 1975 ல் 137 ரன்கள் எடுத்தார். லார்ட்ஸில், இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் திலீப் வெங்சர்க்கார், தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்தார். இதுவரை அந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.
பழமையும், பாரம்பரியமும் கொண்ட லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளை மணியோசை எழுப்பி போட்டியை தொடங்கி வைக்கும் நடைமுறை உள்ளது. இது 2007 ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. இந்த மணியோசை அடித்து 2014 ம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டியை தொடங்கி வைத்த பெருமை இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்க்கு கிடைத்தது.
லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடிக்கும் அல்லது 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரர்களின் பெயர்கள் மைதானத்தின் பாரம்பரிய ஹானர்ஸ் போர்டில் பொறிக்கப்படும். அதன் படி முதல் பெண்கள் டெஸ்டில் பந்துவீச்சில், அறிமுக வீராங்கனை கிராந்தி கௌட் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியும், யாஸ்திகா பாட்டியா லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்தும் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள ஹானர்ஸ் போர்டில் தனது பெயர்களை பதிவு செய்தார்கள்.இந்த ஹானர்ஸ் போர்டில் இடம் பிடித்த முதல் பெண்கள் பெயர்கள் இவர்களுடையதுதான்.
2012-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக்கில் வில்வித்தைப் போட்டிகள் லார்ட்ஸ் மைதானத்தில்தான் நடத்தப்பட்டன. அதேபோல, 2-வது உலகப் போரின்போது, நிதி திரட்டுவதற்காக இங்கு பேஸ்பால் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையின் மூலம் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் 142 ஆண்டுகால பாரம்பரிய ரகசியங்களையும், அங்கு நமது இந்திய மகளிர் அணி நிகழ்த்திய வரலாற்றுச் சாதனையின் அத்தனை சுவாரசியங்களையும் முழுமையாகத் தெரிந்துகொண்டு, ஒரு கிரிக்கெட் ரசிகராக மைதானத்தின் ஒவ்வொரு வியக்கத்தக்க அம்சத்தையும் உங்கள் நண்பர்களோடு பெருமையுடன் விவாதிக்கும் அசாத்திய அறிவைப் பெறுவீர்கள்.