

இந்திய மகளிர் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2009-ல் ஹர்மன்பிரீத் கவுர் அறிமுகமானார். 2016 முதல் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்தி வந்தார். மித்தாலி ராஜ் ஓய்வுக்கு பிறகு, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் மூன்று மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் செயல்பட்டார்.இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது தலைமையில், இந்தியா 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம், மகளிர் ஆசியக் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹர்மன்பிரீத் கவுர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று நான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் எனது கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இது எளிதான முடிவு அல்ல. இதில் பல வருட நினைவுகள், உணர்வுகள், தியாகங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதிற்கும் ஆன தருணங்கள் உள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கு அனைத்தையும் அர்ப்பணித்துள்ளேன். என் ரத்தம், வியர்வை, மற்றும் பல நேரஙக்ளில் சொந்த பகுதியையும் அணிக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என நம்பினேன். எனது தனிப்பட்ட செயல்பாடு, வளர்ச்சி, மற்றும் விருப்பஙக்ள் ஆகியவற்றை ஒதுக்கி வைக்க வேண்டிய தேவை இருந்தது” என கூறியுள்ளார்.
இதயம் முழுவதும் எண்ணற்ற உணர்ச்சியுடன் அமைதியோடு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். நமது அணி சிறந்த இடத்தில் உள்ளது என்று நம்புகிறேன். எனது கேப்டன் பொறுப்பு தான் இதன் மூலம் முடிவுக்கு வருகிறது. கிரிக்கெட் மீது நான் கொண்டுள்ள பிரியத்தின் பயணம் தொடரும்” என்று சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
37 வயதான அவர், இந்திய அணிக்காக 8 டெஸ்ட், 164 ஒருநாள் மற்றும் 205 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 9,191 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த சில மாதங்களாக அணியில் கேப்டன் மாற்றம் குறித்த பேச்சு எழுந்த நிலையில், பிசிசிஐ ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அவர் அறிவித்துள்ளார்.கடந்த 2016 முதல் கேப்டன் பொறுப்பில் இருந்து வரும் ஹர்மன்பிரீத் கவுர், 150 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்த முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். இவரது தலைமையில் இந்தியா 92 டி20 போட்டிகளை வென்றுள்ளது.
இந்தியா 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம், மகளிர் ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. மேலும், 200 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை என்ற பெருமையையும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பொற்காலத்தை உருவாக்கிய கேப்டனாக திகழ்ந்தார். ஹர்மன்பிரீத் கவுர் திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட காலம் சாதாரண அணியாக இருந்த இந்திய அணியை மேம்படுத்தி உலகக்கோப்பை இறுதி வரை கொண்டு சென்றவர் மிதாலி ராஜ். அவர் ஏற்றிய நெருப்பை அணைய விடாமல் ஹர்மன் பார்த்துக் கொண்டார். மிதாலியின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் விதமான கடின உழைப்புடன் செயல்பட்டு ஒருநாள் உலகக் கோப்பையை கடந்த ஆண்டு வென்று காட்டினார். அவரது கடின உழைப்பு , அர்ப்பணிப்பு உணர்வு , தலைமைப் பண்பு ஆகியவை இந்திய அணியை செம்மையாக்கி உள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.