பேட்மிண்டன் விளையாட்டின் வரலாறு மற்றும் விளையாட்டு விதி முறைகள்!

badminton
Badminton
Published on

பேட்மிண்டன் என்பது இரண்டு அல்லது நான்கு வீரர்கள் இடையே விளையாடப்படும் ஒரு வேகமான விளையாட்டு. இதில் வீரர்கள் ஒரு சிறிய இறகு பந்து அல்லது பிளாஸ்டிக் 'ஷட்டில்காக்' எனப்படும் பந்தை ராக்கெட் கொண்டு மாறி மாறி அடிக்கின்றனர்.

1. வரலாறு: பேட்மிண்டன் எனும் விளையாட்டு இந்தியாவில் 'பூனே' என்னும் இடத்தில் தோன்றியது. அங்கு இது 'பூனே' என அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் அதை இங்கிலாந்துக்கு கொண்டு சென்றனர் மற்றும் 1873ல் 'Badminton House' என்ற இடத்தில் இதை விளையாடினர். அதனால் இதற்குப் 'Badminton' என்ற பெயர் வந்தது.

2. கட்டமைப்பு: பேட்மிண்டன் ஒரு குறுகிய, நீளமான மைதானத்தில் விளையாடப்படுகிறது. மையத்தில் ஒரு வலை (net) அமைக்கப்படுகிறது. ஒற்றையர் (singles) மற்றும் இரட்டையர் (doubles) போட்டிகள் உள்ளன.

3. சாதனங்கள்:

  • ராக்கெட்: சிறிய மற்றும் இலகுவானது.

  • ஷட்டில்காக்: இறகுகள் அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை.

  • வலைப் பின்னல் (Net)

  • காலணிகள் (Non-marking shoes) ஆகியன.

4. நன்மைகள்: இது ஒரு உடற்பயிற்சி. சுறுசுறுப்பையும் கவனத்தையும் மேம்படுத்தும். இதய சீராக இயங்கவும், நரம்பியல் வளர்ச்சிக்கும் உதவிகரமானது.

பேட்மிண்டன் விளையாட்டு விதிகள்;

பேட்மிண்டன் விளையாட்டு சர்வதேச பேட்மிண்டன் பேரவையின் (BWF) விதிமுறைகளின்படி நடைபெறுகிறது. இதன் முக்கிய விதிகள்:

1. மைதானம் மற்றும் அமைப்பு: மையத்தில் ஒரு வலை (Net) இருக்கும். ஒற்றையர் (Singles) மற்றும் இரட்டையர் (Doubles) போட்டிகளுக்கான மைதான அளவுகள் சிறிய வித்தியாசம் உடையவை. Singles மைதானம் சற்று குறுகியது; Doubles மைதானம் அகலமானது.

2. புள்ளி அமைப்பு: ஒவ்வொரு போட்டியும் 3 செட்களாக நடைபெறும். ஒவ்வொரு செட்டும் 21 புள்ளிகள் வரை இருக்கும். ஒரு அணியோ அல்லது வீரரோ 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். (உதா: 21-19). 20-20 என சமமாயின், ஒருவர் 2 புள்ளி முன்னிலை பெறும் வரை தொடரும், ஆனால் அதிகபட்சம் 30 புள்ளி வரை மட்டுமே செல்லும்.

3. சர்வ் (Serve) விதிகள்: சர்வ் செய்யும் போது ஷட்டில் காலுக்கு கீழே இருக்க வேண்டும். ராக்கெட் சர்வின் போது கீழ்நிலையிலிருந்து மேலே செல்ல வேண்டும். தவறான சர்வ் செய்தால் புள்ளி எதிரணிக்கு செல்லும். ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் சர்வ் செய்யும் பகுதி மாறுபடும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் தங்க மகன் 'நீரஜ் சோப்ரா'வுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி!
badminton

4. புள்ளி பெறும் விதம்: ஷட்டில் தரையில் விழுந்தால், அந்த புள்ளி எதிரணிக்கு. வலைக்கு மேலாக சரியாக அடித்தால் மட்டுமே புள்ளி பெற முடியும். வலைக்கு சாய்ந்தாலோ, வெளியே போனாலோ புள்ளி எதிரணிக்கு. ஒவ்வொரு புள்ளிக்கும் சர்வ் உரிமை மாறும்.

5. தவறுகள்: ஷட்டில் வலையைத் தொடுதல். ஒரே வீரர் இருமுறை அடித்தல். ஷட்டில் கோட்டுக்கு வெளியே விழுதல். சர்வ் செய்தபோது கால்கள் நகர்த்தல். நேர்மறை அல்லாத அடிகள் (Illegal strokes).

6. இடமாற்றம்: ஒவ்வொரு செட்டின் முடிவிலும் வீரர்கள் பக்கங்களை மாற்றிக் கொள்கிறார்கள். மூன்றாவது செட் நடைபெறின், ஒருவர் 11 புள்ளி அடைந்தவுடன் இடம் மாற்றம் செய்ய வேண்டும்.

7. நேரம் மற்றும் இடைவேளை: ஒவ்வொரு செட்டிலும் 11 புள்ளி அடைந்தவுடன் 60 விநாடிகள் இடைவேளை. செட்டுகளுக்கு இடையில் 2 நிமிட இடைவெளி அனுமதிக்கப்படுகிறது.

இந்தியாவில் வளர்ச்சி: இந்தியா பேட்மிண்டனில் முக்கிய சக்தியாக மாறியுள்ளது. ஷட்டில் விளையாட்டு இந்தியாவிலிருந்து துவங்கி, இங்கிலாந்து வழியாக உலகம் முழுவதும் பரவி ஒரு பன்னாட்டு நிலைக்கு வளர்ந்துள்ளது. இது இன்று ஒலிம்பிக் உள்ளிட்ட பல முக்கிய போட்டிகளில் இடம் பெற்ற முக்கிய விளையாட்டாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டு வீரர்! யார் இந்த சேனுரான் முத்துசாமி?
badminton

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com