சதுரங்கம் போன்ற மன உத்தி! பேஸ்பால் விளையாட்டை எளிதாகப் புரிந்துகொள்வது எப்படி?

மைதானத்தில் நடக்கும் தந்திரமான ஆட்டம்; பேஸ்பாலின் ஹோம் ரன் மற்றும் ஸ்டிரைக் மண்டல ரகசியங்கள்.
பேஸ்பால் விளையாட்டு - Baseball guide Tamil
பேஸ்பால் விளையாட்டு - Baseball guide Tamil
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on: 

பேஸ்பால் (Baseball) உலகின் மிகவும் புகழ்பெற்ற குழு விளையாட்டுக்களில் ஒன்றாகும். குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், கியூபா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இது ஒரு தேசிய விளையாட்டாகப் போற்றப்படுகிறது. மட்டையால் பந்தை அடித்து, குறிப்பிட்ட மைதானத்தை வலம் வந்து புள்ளிகளைப் பெறும் இந்த விளையாட்டு, அசாத்தியமான துல்லியம், உத்தி மற்றும் கூட்டு முயற்சி ஆகியவற்றைக் கொண்டது.

1.ஆடுகளத்தின் அமைப்பு: பேஸ்பால் ஆடுகளம் பார்ப்பதற்கு ஒரு வைரம் (Diamond) போன்ற வடிவத்தில் இருக்கும்.

நான்கு தளங்கள் (Bases): ஆடுகளத்தில் ‘ஹோம் பிளேட்’ (Home Plate), ஃபர்ஸ்ட் பேஸ் (First Base), செகண்ட் பேஸ் (Second Base) மற்றும் தேர்ட் பேஸ் (Third Base) என நான்கு தளங்கள் முறையே முக்கோண வடிவ அமைப்பில் இருக்கும்.

பிட்சர்ஸ் மவுண்ட் (Pitcher’s Mound): ஆடுகளத்தின் மையப்பகுதியில் பந்து வீசுபவர் (Pitcher) நிற்கும் சற்று மேடான பகுதி அமைந்துள்ளது.

2. அணிகளின் அமைப்பு மற்றும் அடிப்படை முறை: ஒவ்வொரு அணியிலும் தலா 9 ஆட்டக்காரர்கள் இடம் பெறுவார்கள். போட்டி தொடங்கும்போது ஒரு அணி பேட்டிங் (Batting) செய்யும், மற்றொரு அணி ஃபீல்டிங் மற்றும் பவுலிங் செய்யும். ஃபீல்டிங் அணியைச் சேர்ந்த ‘பிட்சர்’ (Pitcher) பந்தை பேட்ஸ்மேனை நோக்கி வீசுவார். பேட்ஸ்மேன் தனது மட்டையால் (Bat) பந்தை அடித்துவிட்டு, மைதானத்திலுள்ள தளங்களை நோக்கி ஓடவேண்டும்.

3. ஆட்டத்தின் முக்கிய விதிமுறைகள்:

ஸ்டிரைக் மற்றும் பால் (Strike & Ball) :

ஸ்டிரைக் (Strike): பேட்ஸ்மேன் பந்தை அடிக்கத் தவறினாலோ அல்லது சரியான வீச்சு மண்டலத்திற்குள் (Strike Zone) வரும் பந்தை அடிக்காமல் விட்டாலோ அது ஒரு ‘ஸ்டிரைக்’ எனப்படும். ஒரு பேட்ஸ்மேன் 3 ஸ்டிரைக்குகள் பெற்றால் அவர் அவுட் (Strikeout) ஆவார்.

பால் (Ball): பிட்சர் ‘ஸ்டிரைக் ஜோன்’ பகுதிக்கு வெளியே தவறாக பந்து வீசினால் அது ‘பால்’ எனப்படும். ஒரு பேட்ஸ்மேனுக்கு 4 பால்கள் வீசப்பட்டால், அவர் தண்டனை இன்றி நேரடியாக ‘ஃபர்ஸ்ட் பேஸ்’ பகுதிக்கு நடந்து செல்ல அனுமதிக்கப்படுவார் (Walk).

இதையும் படியுங்கள்:
விளையாட்டு மைதானத்தில் நடுவரின் விசில் சத்தம் தெளிவாக்கக் கேட்பதன் ரகசியம்!
பேஸ்பால் விளையாட்டு - Baseball guide Tamil

ஹோம் ரன் (Home Run): பேட்ஸ்மேன் வீசப்பட்ட பந்தை மைதானத்தின் எல்லைக் கோட்டிற்கு வெளியே (Fence) அடித்துவிட்டால் அது ஹோம் ரன் எனப்படும். இது பேஸ்பாலின் மிகவூக்கமளிக்கும் மற்றும் சிலிர்ப்பான தருணமாகும். இதன் மூலம் பேட்ஸ்மேன் எந்தத் தடங்கலுமின்றி அனைத்து தளங்களையும் கடந்து எளிதாக ரன்களைக் குவிக்க முடியும்.

அவுட் செய்யும் முறைகள் (Outs): ஃப்ளை அவுட் (Fly Out): பேட்ஸ்மேன் அடித்த பந்து தரையில் படுவதற்குள் ஃபீல்டர் கேட்ச் பிடித்தால்.

டேக் அவுட் (Tag Out): ஓடும் வீரர் பேஸை அடைவதற்குள் பந்தைக் கொண்டு அவரைத் தொட்டால்.

போர்ஸ் அவுட் (Force Out): வீரர் ஓடிவர வேண்டிய பேஸுக்கு பந்து முந்தைய நிலையிலேயே சென்று சேர்ந்தால்.

ஸ்டிரைக் அவுட் (Strikeout): மூன்று முறை ஸ்டிரைக்குகளைப் பெறுவது.

பேஸ்பால் விளையாட்டு - Baseball guide Tamil
பேஸ்பால் விளையாட்டு - Baseball guide Tamil

4. இன்னிங்ஸ்கள் மற்றும் வெற்றியாளர் நிர்ணயம்

ஒரு அணியின் பேட்டிங் வரிசையில் 3 ஆட்டக்காரர்கள் அவுட் ஆனதும் அந்த அணியின் அரை-இன்னிங்ஸ் நிறைவடைகிறது. அதன்பிறகு அணிகள் தங்கள் பாத்திரங்களை மாற்றிக்கொள்ளும்.

ஒரு முழு ஆட்டத்தில் மொத்தம் 9 இன்னிங்ஸ்கள் இடம்பெறும். அனைத்து இன்னிங்ஸ்களின் முடிவில் எந்த அணி அதிக ஓட்டங்களை (Runs) எடுத்துள்ளதோ, அந்த அணியே வெற்றியாளராக அறிவிக்கப்படும்.

பேஸ்பால் என்பது வெறும் உடற்பயிற்சியோ அல்லது பலத்தை மட்டும் சார்ந்த விளையாட்டோ அல்ல. இது ‘சதுரங்கம் போன்ற மன உத்திகளும் (Chess match on grass), துல்லியமான திட்டமிடலும்’ நிறைந்த ஒரு விளையாட்டாகும்.

இதையும் படியுங்கள்:
வெளியே இருக்கும் சலசலப்புக்கு பயப்பட மாட்டேன்! சுனில் கவாஸ்கர், அஸ்வினுக்கு கம்பீரின் அதிரடி பதிலடி!
பேஸ்பால் விளையாட்டு - Baseball guide Tamil
logo
Kalki Online
kalkionline.com