

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட தெரியாதவர்கள் மிகவும் குறைவு அதனால் தான் ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்தியா உலக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ஐசிசி நடத்திய சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் அதிக கோப்பைகள் வென்ற நாடுகளின் வரிசையில் இந்தியா பெற்ற இடத்தை இப்பதிவில் காண்போம்.
1.ஆஸ்திரேலியா 10 ஐசிசி கோப்பைகள்
ஐசிசி வரலாற்றில் ஆஸ்திரேலியா அணி 10 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக முதல் இடத்தில் உள்ளது. அதில் ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பையை 1987, 1999, 2003, 2007, 2015, 2023 என 6 முறை பெற்றுள்ளது.2021ம் ஆண்டு ஒரு முறை ஐசிசி டி 20 உலக கோப்பையை கைப்பற்றியது.2006, 2009 என இரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபியை வென்றது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை 2023 ஆம் ஆண்டு வென்று சாதனை படைத்தது.
2.இந்தியா 8 ஐசிசி கோப்பைகள்
சர்வதேச கிரிக்கெட்டில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா குறைந்த ஓவர் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதன்படி ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பையை 1983, 2011 என இருமுறையும், 2002மா ஆண்டு ஐசிசி சாம்பியன் ட்ராபியை இலங்கையுடன் பகிர்ந்தும், 2013, 2025ம் ஆண்டில் தனித்தும் வெற்றி பெற்றது.2007, 2024, 2026 என 3 முறை ஐசிசி டி 20 உலக கோப்பையை கைப்பற்றியது.
3.வெஸ்ட் இண்டீஸ் 5 ஐசிசி கோப்பைகள்
ஒரு காலத்தில் அசைக்க முடியாத அணியாக இருந்த வெஸ்ட் இண்டீஸ்1975,1979 என 2 முறை ஐசிசி உலகக் கோப்பையையும்,2012, 2016 என இரு முறை டி20 உலக கோப்பையையும்,2004 ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் கைப்பற்றியது.
4. பாகிஸ்தான் 3 ஐசிசி கோப்பைகள்
நம் அண்டை நாடான பாகிஸ்தான் ஐசிசி உலக கோப்பையை 1992-ல் ஒருமுறையும் 2009 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையையும் 2017 ஆம் ஆண்டு ஐசிசி நடத்திய சாம்பியன்ஸ் ட்ராஃபியையும் வென்றது.
5. இலங்கை 3 ஐசிசி கோப்பைகள்
ஐசிசி உலக கோப்பையை இலங்கை 1996 ஆம் ஆண்டு ஒருமுறை, ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபியை இந்தியாவுடன் 2002 ஆம் ஆண்டு பகிர்ந்தும், 2014 ஆம் ஆண்டு ஐசிசி டி 20 கோப்பையையும் வென்றது.
ஐசிசி நடத்திய சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா விரைவில் முதல் இடத்தை பெரும் என்பது அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.