"தேங்க்யூ மை டியர் பொண்டாட்டி!" - உலகக்கோப்பையை வென்ற கையோடு சஞ்சு சாம்சனின் வைரல் பதிவு..!!

Sanju samson
Sanju samson
Published on

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தனது மனைவி சாருலதா ரமேஷ்க்கு (Charulatha Remesh-)க்கு சமூக வலைதளத்தில் உணர்ச்சி பூர்வமாக நன்றி தெரிவித்தது வைரலாகி அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.தனது காதல் மனைவி குறித்து உணர்ச்சி பொங்கும் நன்றிப் பதிவை Instagram-ல் பகிர்ந்துள்ளார். அவர் தனது Instagram account-ல் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்துடன் அந்த நன்றிப் பதிவை வெளியிட்டார்.

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் திறமையான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சஞ்சூ சாம்சன் (Sanju Samson) சிறிய வயதிலேயே கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்து இந்திய அணிவரை வந்தவர்.

கேரளாவின் ஒரு இளம் வீரராக தனது கிரிக்கெட் வாழ்வைத் துவங்கிய சஞ்சூ சாம்சன், IPL மூலம் புகழ் பெற்று இந்திய அணி வரை சென்றவர். திறமை இருந்தும் இடையிடையே வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், தனது ஆட்டத்தால் ரசிகர்களிடையே பெரிய ஆதரவை பெற்றவராக திகழ்ந்தார்.

தற்போதைய 2026 T20 உலகக்கோப்பை போட்டிகளில் தன் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பை தனது நிதானமான நீடித்த ஆட்டத்தால் நிரூபித்தவர். குறிப்பாக இந்த உலகக்கோப்பைத் தொடரில் வெறும் 5 போட்டிகளில் விளையாடிய சஞ்சு, 321 ரன்களை குவித்து மலைக்க வைத்துள்ளார். இதன் மூலம் 2014-ல் விராட் கோலி படைத்த 319 ரன்கள் என்ற சாதனையை முறியடித்து, ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற மகுடத்தைச் சூடிக்கொண்டார்.இந்த சிறந்த ஆட்டத்திற்காகவே அவருக்கு Player of the Tournament விருது வழங்கப்பட்டது “

.

இந்நிலையில் 2026 T20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு, தனது வாழ்க்கையில் மற்றும் கிரிக்கெட் பயணத்தில் மனைவி அளித்த ஆதரவுக்காக அவர் நன்றி கூறினார். அதற்கான முக்கிய காரணங்கள் சிலவற்றை குறிப்பிட்டுள்ளார்.

தனது நல்ல நேரம் – கெட்ட நேரம் எல்லாவற்றிலும் மனைவி அருகில் இருந்ததாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட்டில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகள், விமர்சனங்கள் ஆகியவற்றிலும் அவர் மனதளவில் ஆதரவாக இருந்ததாகவும் “நான் கிரிக்கெட்டை எவ்வளவு நேசிக்கிறேனோ, அதே அளவுக்கு நீயும் அந்த கனவை பகிர்ந்தாய்” என்றும் பகிர்ந்துள்ளார்.

எனது சிறந்த பக்கம், மோசமான பக்கம் எல்லாம் பார்த்தும் என்னுடன் உறுதியாக இருந்தாய் என்று உணர்ச்சி பூர்வமாக குறிப்பிட்டு பதிவின் இறுதியில் "தேங்க்யூ மை டியர் பொண்டாட்டி" (“Thank you so very much my dear pondatti”) என்று தமிழில் அன்பாக குறிப்பிட்டது ரசிகர்களிடையே வைரலானது.

சஞ்சூ சாம்சனின் மனைவி – சாருலதா ரமேஷ் .இருவரும் Mar Ivanios College, Thiruvananthapuram கல்லூரியில் படித்த காலத்தில் நண்பர்களாக அறிமுகமானார்கள். பின்னர் அந்த நட்பு காதலாக மாறி சுமார் 5 வருடங்கள் தொடர்பில் இருந்தனர்.அதன் பிறகு 22 டிசம்பர் 2018 அன்று குடும்பத்தின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டார். சாருலதா தனது காதல் கணவரான சஞ்சூ சாம்சனை Sஅவரது ஆரம்ப கால கிரிக்கெட் பயணத்திலிருந்தே ஊக்குவித்து ஆதரவாக(support ) இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி தோல்வி எதிலும் சமநிலையுடன் பயணிக்கும் காதல் இறுதியில் ஜெயிக்க வைத்து சாதனை புரியும் என்பதற்கு இந்த காதல் ஜோடி ஓரு உதாரணம் என நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
அமேசானில் தவெக காம்போ கிட்! கொடி முதல் தங்க முலாம் பூசப்பட்ட பேட்ஜ் வரை - தொண்டர்கள் உற்சாகம்..!!
Sanju samson

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com