‘இம்பேக்ட்’ வீரர் விதிமுறை - தோனியின் கருத்தில் மாற்றம்?

இம்பேக்ட் வீரர் விதி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தோனி கருத்து தெரிவித்துள்ளார்.
Dhoni
Dhoni
Published on

அனைவரும் எதிர்பார்த்த 18-வது ஐபிஎல் திருவிழா கடந்த 22-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த போட்டி மே மாதம் 25-ம்தேதி வரை நடைபெற உள்ளது. மே 25-ந்தேதி வரை இனி கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

ஒவ்வொரு அணி நிர்வாகமும் தேவையில்லாத வீரர்களை கழற்றி விட்டும், வியூகத்துக்கு ஏற்ப புதிய வீரர்களை ஏலத்தில் கண்டெடுத்தும் பட்டை தீட்டியுள்ளன. பயிற்சியாளர், கேப்டன்கள் மாற்றமும் கணிசமாக நடந்துள்ளது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த முறை 5 அணிகளின் கேப்டன்கள் மாறியுள்ளனர். எல்லா அணிகளுமே பார்க்க வலுவாக தோன்றுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை இப்போதே கணிப்பது இயலாத காரியம்.

மற்ற கிரிக்கெட் போட்டிகளை விட ஐபிஎல் சீசனுக்கு ரசிகர்கள் அதிகம் என்றே சொல்ல வேண்டும். அதுவும் தோனி விளையாடும் போட்டியை காண வரும் ரசிகர்கள் தான் அதிகம். தோனி விளையாடினாலும், விளையாடா விட்டாலும், ரன் எடுத்தாலும், ரன் எடுக்காவிட்டாலும் அவரை மட்டும் பார்த்தால் போதும் என்று வரும் ரசிகர்கள் கூட்டம் தான் அதிகம். அதுவும் சேப்பாக்கத்தில் நடைபெறும் சிஎஸ்கே போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வருவார்கள்.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் 2008 - 2024: CSK என்றால் தோனி... தோனி என்றால் CSK! தோனி சாதனைகள்!
Dhoni

கடந்த 23-ம்தேதி சேப்பாக்கத்தில் நடத்த 3-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இம்பேக்ட் வீரர் விதி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தோனி கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்த போட்டியில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இம்பேக்ட் வீரர் விதி கொண்டுவரப்பட்ட போது, இது தேவையற்றது என்றே நினைத்தேன். பரபரப்பு....விறுவிறுப்பு....அதிக ரன்...என ஐ.பி.எல். நன்றாகத் தான் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கு மேல் இதை மேம்படுத்த அவசியமில்லை என்று கூறினேன்.

இதையும் படியுங்கள்:
952 கேட்சுகளுக்கும், 46 ஸ்டம்பிங்குகளுக்கும் சொந்தக்காரர்... யார் இவர்? MS தோனி ?
Dhoni

ஆனால் இப்போது ஒரு வகையில் இந்த விதிமுறை உதவுகிறது. என்றாலும் நான் ‘இம்பேக்ட்’ வீரர் கிடையாது. ஏனெனில் நான் விக்கெட் கீப்பர் என்பதால், தொடர்ந்து ஆட்டத்தில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டி உள்ளது.

இம்பேக்ட் விதியால் அதிக ரன் குவிக்கப்படுவதாக பலரும் கூறுகின்றனர். ஆனால் ஆடுகளத்தின் தன்மை மற்றும் வீரர்களின் மனநிலை நன்றாக இருப்பதால் தான் அதிக ரன் எடுக்கப்படுவதாக நம்புகிறேன். கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் கிடைப்பதால் மட்டும் இவ்வளவு ரன்கள் வரவில்லை. அதனால் ஏற்படும் சவுகரியமான மனநிலை, வீரர்களை அதிரடியாக விளையாட அனுமதிக்கிறது. அதனால் ஸ்கோரும் வருகிறது’ என்றார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் ‘இம்பேக்ட்’ வீரர் விதிமுறை கடந்த 2023-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன்படி ஆட்டத்தின் இடையே ஒரு வீரரை எடுத்து விட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை சேர்க்க முடியும். அந்த வீரர் பேட்டிங்கும் செய்யலாம். பந்தும் வீசலாம். கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இறங்குவதன் தாக்கத்தை கடந்த சீசனில் பார்க்க முடிந்தது. கடந்த ஐ.பி.எல். தொடரில் அணிகள் 41 முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்தன.

இதையும் படியுங்கள்:
இளம் வீரருக்கு தோனி சொன்ன அறிவுரை… !
Dhoni

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com