கிரிக்கெட்டில், விக்கெட் கீப்பர் என்பவர், ஸ்டம்புகளுக்குப் பின்னால் நின்று பேட்ஸ்மேனைக் கவனித்து ஒரு விக்கெட்டை எடுக்கத் தயாராக இருப்பார். பேட்ஸ்மேனைக் கடந்து செல்லும் பந்துகளை நிறுத்துவதே கீப்பரின் முக்கிய பணியாகும்.
இயன் ஹீலியின் ஓய்வுக்குப் பிறகு ஆடம் கில்கிறிஸ்ட்டை அணிக்கு உயர்த்தியபோது ஆஸ்திரேலிய அணி வெற்றியைக் கண்டதால், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் வடிவம் 1990களில் பிரபலமானது.
ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி, டெஸ்ட் போட்டி என மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களை அதிக முறை ஆட்டமிழக்க செய்து, கிரிக்கெட் உலகை அரசாட்சி செய்த முக்கியமான விக்கெட் கீப்பர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்...
மின்னல்வேக விக்கெட் கீப்பராக வர்ணிக்கப்படும் MS தோனி 2004-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் கலக்கியுள்ளார். இவர் ஒரு வெற்றிகரமான கேப்டன் மற்றும் மூன்று ஐசிசி போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் ஆவார். அதுமட்டுமின்றி உலகின் சிறந்த ஃபினிஷர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
538 போட்டிகளில் பங்கேற்றவர் 829 பேரை அவுட் செய்திருக்கிறார். 634 கேட்சுகளும், 195 ஸ்டம்பிங்குகளும் இதில் அடங்கும். அதிக ஸ்டம்பிங் செய்த ஒரே விக்கெட் கீப்பர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகவும் விளங்குகிறார். உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் பட்டியலில் எம்எஸ் தோனி மூன்றாவது இடத்தில் உள்ளார். 0.08 வினாடிகளில் வேகமாக ஸ்டம்பிங் செய்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சங்கக்கரா (139 ஸ்டெம்பிங்) இருக்கிறார்.
குமார் சங்கக்கார இலங்கையின் துணிச்சலான இடது கை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்தார். இவர் 2000 முதல் 2015-ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை அரசாட்சி செய்திருக்கிறார். 15 வருட கால வாழ்க்கையில், அவர் 63 சதங்களை அடித்துள்ளார். 594 போட்டிகளில் விளையாடி இருப்பவர் 678 பேரை ஆட்டமிழக்க வைத்துள்ளார். அதில் 539 கேட்சுகளும், 139 ஸ்டம்பிங்குகளும் உண்டு.
ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷமான விக்கெட் கீப்பராக வலம் வந்த இவர் 396 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் 905 வீரர்களை அவுட் செய்து வெளியேற்றி இருக்கிறார். அதில் 813 கேட்சுகளும், 92 ஸ்டெம்பிங்குகளும் அடங்கும். இவர் விளையாடிய காலகட்டம் 1996 முதல் 2008 வரை. இயன் ஹீலியின் ஓய்வுக்குப் பிறகு ஆடம் கில்கிறிஸ்ட்டை விக்கெட் கீப்பராக உயர்த்தியபோது ஆஸ்திரேலிய அணி பல வெற்றிகளை கண்டது. தனது அசுர சாதனையால் இன்றுவரை கிரிக்கெட் விளையாட்டில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக கருதப்படுகிறார்.
ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பராக 1988-ம் ஆண்டு முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் விளையாடியவர் இவர். 287 போட்டிகளில் 628 பேரை ஆட்டம் இழக்க செய்திருக்கிறார். இதில் 560 கேட்சுகளும், 68 ஸ்டம்பிங்குகளும் அடங்கும். இது மிகவும் ஈர்க்கக்கூடிய சாதனையாகும். ஆடம் கில்கிறிஸ்ட் இவரை மிஞ்சும் முன் நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த சாதனை இது.
தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பராக விளங்கிய இவர் கிரிக்கெட் வீரர்களை அதிக முறை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 1997-ம் ஆண்டு கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தவர் 2012-ம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்.
467 போட்டிகளில் விளையாடி, 998 பேரை ‘அவுட்’ செய்திருக்கிறார். அதில் 952 கேட்சுகளும், 46 ஸ்டம்பிங்குகளும் அடங்கும். அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதிகபட்சமாக ஒரே போட்டியில் 6 பேரை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க செய்தது குறிப்பிடத்தக்கது.