இந்திய பாகிஸ்தான் போட்டிக்கு இப்போதே இரு நாட்டு முன்னாள் வீரர்களுக்கும் இடையே கருத்து போர் நடைபெறுகிறது.
உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு தொடர், சாம்பியன்ஸ் தொடர். 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் முதல்முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பல நூறு கோடிகளையும் செலவிட்டுள்ளது. 50 ஓவர்க் கொண்ட இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி குரூப் ஏ வில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் இடம் பெற்றிருக்கிறது. குரூப் பி யில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்திருக்கின்றன. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடத்தப்படும்.
இந்த தொடரில் பெரிய எதிர்பார்ப்பை தாங்கி நிற்கும் ஒரு போட்டி என்றால், அது இந்தியா பாகிஸ்தான் போட்டிதான். இவர்கள் இருவரும் மோதும் முதல் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டது.
இப்படியான நிலையில், இரு நாட்டு முன்னாள் வீரர்களும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், “இந்தியா பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளுக்கு வேண்டுமென்றே இப்போது டெம்ப்ட் ஏற்றுகிறார்கள். ஏனென்றால் இதில் ஒன்றுமே இல்லை. பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர்களை பாருங்கள். மேலும் சில விஷயங்களைப் பார்த்தால் இந்தியாவுக்கு சரிசமமாக அவர்கள் சண்டை போடுவார்கள் என்ற நம்பிக்கையே எனக்கு வரவில்லை. எனவே இந்தியா பாகிஸ்தான் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக ஒருதலைப்பட்சமாக இருக்கும் என நினைக்கின்றேன்.” என்று பேசியிருக்கிறார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப், சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய அணியின் பேலன்ஸ் நன்றாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு தான் சாம்பியன் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நினைக்கின்றேன்.” என்று பேசினார்.
இனி யார் யாரெல்லாம் என்னவெல்லாம் பேசப் போகிறார்காளோ… இந்திய பாகிஸ்தான் போட்டி முடியும் வரை சரவெடிதான்.