

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 4 போட்டிகளில் ஒன்றில் கூட வெல்லவில்லை என்பது இந்திய ரசிகர்களை மிகவும் கவலைக் குள்ளாகியுள்ளது. பல கிரிக்கெட் போட்டிகளில் தொடரை இந்திய அணி இழந்தாலும் , குறைந்தது ஒன்று இரண்டு போட்டிகளில் வெற்றியும் பெற்றிருக்கும். அதனால், ரசிகர்கள் ஓரளவுக்கு தங்களது மனதை தேற்றி கொள்வார்கள்.
வங்கதேசம் போன்ற கத்துக்குட்டி அணி மாதிரி இந்திய அணி தொடர் தோல்விகளை பெறுவது, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது. சமீபத்திய காலம் வரை இந்திய அணி கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் பலமுறை நிலையாக இருந்த ஒரு அணியாகும். இன்னும் சொல்லப்போனால் டி20 சாம்பியன் அணியாகவும் இந்திய அணி இருக்கிறது.
இங்கிலாந்து மண்ணில் தொடர் தோல்விக்கான காரணங்களை பிசிசிஐ ஆராய்ந்து வருகிறது. இந்திய அணி அங்குள்ள மைதானங்களில் 150 ரன்கள் எடுக்கவே தடுமாறி வரும் வேளையில், இங்கிலாந்து அணியோ எளிதாக 200 ரன்களை கடந்துள்ளது. அதுபோல இந்திய அணியின் ஸ்கோர்களை விரட்டும் போது, இறுதி ஓவர் வரை அந்த அணி நேரத்தினை கடத்தாமல் முன்கூட்டியே அதிரடியாக விளையாடி முடித்து விடுகிறது.
இந்திய அணி தடுமாற்றத்திற்கு பல காரணங்களில் பேட்ஸ்மேன்கள் சொதப்புவதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் வைபவ் சூரியவன்ஷி ஆகியோர் விரைவிலேயே அவுட் ஆகுவதும், அணிக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அபிஷேக் ஷர்மா பொதுவாக இரு தொடர்களிலும் நன்றாக விளையாடக்கூடிய வீரராக இருந்தாலும், வைபவ் சூர்யவன்ஷியுடன் இணைந்ததிலிருந்து மிக குறைவான ரன்களையே எடுக்கிறார்.
அவர் வைபவ் ஒரு சிக்ஸர் அடித்த உடனேயே தானும் அது போன்ற அடிக்க ஆசைப்பட்டு உடனடியாக அவுட்டாகி விடுகிறார். கடந்த இரண்டு மேட்ச்சிலும் வைபவ் களமிறங்கி சிக்சர்களை அடித்த உடன், அபிஷேக் உடனடியாக தானும் சிக்ஸர் அடித்து தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும், என்ற எண்ணம் அவருக்குள் ஏற்படுகிறது. அதன் காரணமாகவே கடந்த இரண்டு போட்டிகளிலும் அவரது ரன்கள் மிக குறைவாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டக்காரர்களுக்கும் தனித்தன்மையான ஆட்டம் உண்டு, அதை பின்பற்றினாலே போதுமானது. அடுத்தவரைப் பார்த்து தானும் அது போல் ஆக வேண்டும் என்ற எண்ணமே அவரது சமீபத்திய சரிவுக்கு காரணமாகிறது.
வைபவ் எல்லா பந்துகளையும் சிக்ஸருக்கு அடிக்க நினைப்பதுதான் அவரது பலவீனமாக இருக்கிறது. நிதானமான ஆட்டம் அவருக்கு வருவது இல்லை , அது அவரது இயல்பாக இருக்கிறது. ஆனால் அதே நேரம் கிடைக்கும் வாய்ப்புகள் பயன்படுத்திக் கொண்டு குறைந்தபட்சம் 50 ரன்கள் ஆவது எடுத்துக்காட்ட வேண்டியது அவசியம். மிக முக்கியமாக அயர்லாந்து தொடரில் வைபவை காக்க வைத்ததும் , இங்கிலாந்து தொடரில் ஆரம்பத்தில் கூடஅதே போல் செய்ததும் அவரது மனதை பலவீனப்படுத்தியுள்ளது.
மேலும் அணி தொடர் சரிவில் இருக்கும் பொழுது , அதை மீட்கும் பொறுப்பை சர்வதேச அனுபவமற்ற சிறுவன் தலையில் சுமத்துவது அவரை மேலும் அழுத்தத்திற்கு ஆளக்கியுள்ளது. இந்த அழுத்தமே அவரை 2 சிக்ஸர்களுக்கு மேல் கொண்டு செல்லாமல் இருக்கிறது. இங்கிலாந்து பவுலர்கள் வைபவிற்கு ஆசையை தூண்டி விட்டு அவுட் ஆக்கி விடுகின்றனர்.
மற்ற பேட்ஸ்மென்கள் எல்லாம் 10 ரன்களை கடக்கவே கடுமையான சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்திய அணி பந்துவீச்சாளர்களை பற்றி சொல்லவே தேவையில்லை , அவர்கள் இந்த தொடரில் எந்த ஒரு சாதனையும் செய்யவில்லை. அணியின் தொடர் தோல்விக்கு அனுபவம் வாய்ந்த 2 சீனியர் பேட்ஸ்மேன்களும் , அனுபவம் வாய்ந்த 2 பந்துவீச்சாளர்களும் இல்லாதது குறிப்பிட தகுந்த விஷயம். அடுத்து வரும் டி 20 போட்டி இங்கிலாந்து அணிக்கு முக்கியத்துவம் இல்லாததால், அவர்கள் அலட்சியமாக விளையாடுவார்கள்.அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் அதனால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.