லார்ட்ஸ் மைதானத்தில் புதிய சரித்திரம்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அசாத்திய சாதனை!

Indian Womens Cricket - பெண்கள் கிரிக்கெட்
Indian Womens Cricket - பெண்கள் கிரிக்கெட்AI Image
Updated on

ந்திய கிரிக்கெட் அணி என்றால் ஆண்கள் கிரிக்கெட் அணிதான் ஆதிக்கம் பெற்று பங்கேற்ற போட்டிகளில் அதிக வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் அயர்லாந்து இங்கிலாந்து என டி20 தொடர்களில் தொடர் தோல்வியை ஆண்கள் அணி சந்தித்து வரும் நிலையில், இந்தியர் களுக்கு ஆறுதலாக இந்திய பெண்கள் அணி இங்கிலாந்து நாட்டில் உள்ள 'லார்ட்ஸ்' மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

ஹர்மன் பிரீத் தலைமையிலான இந்திய பெண்கள் அணி இங்கிலாந்து சென்று ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் பெண்கள் டெஸ்ட் போட்டி இது என வரலாறு படைத்தது. 142 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் பெண்கள் அணி லார்ட்ஸ் மைதானத்தில் பங்கேற்பது இதுதான் முதல் முறை.

இங்கு விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 285 ரன்களும், இங்கிலாந்து அணி 170 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 341/7 ரன்கள் குவித்து 'டிக்ளேர் 'செய்தது. இங்கிலாந்து வெற்றி பெற இந்திய அணி 457 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது.

இதனை அடுத்து இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 130/6 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று ஜூலை 13 நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 186 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்தியா 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை படைத்தது.

Indian Womens Cricket - பெண்கள் கிரிக்கெட்
Indian Womens Cricket - பெண்கள் கிரிக்கெட்

இந்தியா சார்பில் ஸ்னே ராணா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தியா 1-0 என லார்ட்ஸ் டெஸ்டில் முதல் வெற்றியை பெற்றது. இரண்டு இன்னிங்ஸிகளிலும் இந்தியாவின் கிராந்தி கவுட் (5+2) 7 விக்கெட் கைப்பற்றியதால் ஆட்ட நாயகி விருது பெற்றார்.

இவ்வெற்றி குறித்து இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கூறுகையில், "கடவுள் ஒரு சிறந்த எழுத்தாளர். மிகச் சிறப்பான வெற்றி சரித்திரத்தை எழுதியுள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவதும் வெற்றி பெறுவதும் 'ஸ்பெஷலான' தருணம்தான்.

போட்டி நடத்த திட்டமிட்டவர்களுக்கு நன்றியை தெரிவித்ததோடு, 10 டெஸ்டில் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்" என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அணியின் ஒட்டுமொத்த செயல்பாடும் சிறப்பாக இருந்ததாக அணியினருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றி இந்திய பெண்கள் அணியின் இரண்டாவது சிறந்த டெஸ்ட் வெற்றியானது. இதற்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு மும்பையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் இந்திய பெண்கள் அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
நாடு திரும்பியதும் எடுக்கப்படவுள்ள பிசிசிஐ-யின் நடவடிக்கை; அச்சத்தில் இந்திய அணி
Indian Womens Cricket - பெண்கள் கிரிக்கெட்

ஆண்கள் அணிக்கு இணையாக இந்திய பெண்கள் அணி வீறு நடை போட்டு வெற்றி பெற்று வருவது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு உலகில் இந்திய பெண்கள் அணி மென்மேலும் வெற்றிகள் பெற்று சகாப்தம் படைக்க கேப்டன் ஹர்மன் பிரித் போல ஒவ்வொரு இந்தியரும் கடவுளிடம் பிரார்த்திக்கலாம்.

இந்தப் பதிவின் மூலம், உலக கிரிக்கெட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வீராங்கனைகள் நிகழ்த்திய அசாத்திய சாதனையின் ஒவ்வொரு தருணத்தையும் நீங்கள் காட்சிப்பூர்வமாக உணர்வீர்கள்.

இதையும் படியுங்கள்:
மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு பின்னடைவா? பிஎஃப்எஸ்ஏ வெளியிட்ட டாப் 10 கால்பந்து வீரர்கள் பட்டியல்!
Indian Womens Cricket - பெண்கள் கிரிக்கெட்

ஆண்கள் கிரிக்கெட்டுக்கு நிகராகப் பெண்கள் கிரிக்கெட்டும் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை எவ்வாறு உயர்த்தியுள்ளது என்பதை அறிந்துகொள்வதோடு, விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் பெண் பிள்ளைகளுக்கு இது ஒரு மாபெரும் உத்வேகத்தைத்தரும்.

logo
Kalki Online
kalkionline.com