2025 ஆம் ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

Ireland Vs ind
Ireland Vs ind
Published on

ஐசிசி சாம்பியன்ஷிப் மகளிர் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில்  நடைபெற்றது. இந்த போட்டிகளில் பங்கேற்க அயர்லாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே மே.இந்திய தீவுகள் அணியை டி20 மற்றும் ஒருநாள் தொடரில் வென்று இந்திய அணி உற்சாகமாக உள்ளது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் ஓய்வில் உள்ளதால் தற்காலிகமாக ஸ்மிருதி கேப்டன் பொறுப்பை ஏற்றார். போட்டியின் முதல் ஆட்டம் ஜன.10, நேற்று முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்று பேட்டிங்கில் களமிறங்கியது அயர்லாந்து அணி. அயர்லாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக சாரா ஃபோர்ப்ஸ் மற்றும் கேப்டன் கேபி லூசிஸ் களமிறங்கினர். நிதானமாக விளையாடத் தொடங்கிய அயர்லாந்து அணி முதல் விக்கெட்டை 4 வது ஓவரில் இழந்தது. சாரா 9 ரன்களில் தீப்தி சர்மா பந்துவீச்சில் சாதுவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் கேபி நின்று நிதானமாக அடித்து ஆடினார்.

யூனா ரேமண்ட் , ஒர்லா ஆகியோர் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். லாரா டக் அவுட்டாகி வெளியேறினார். மறு புறம் கேபி தனி ஆளாக ரன் குவித்தார். லியா பால் , கேபி யுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார் . லியா பால் 59 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். கேபி 15 பவுண்டரிகள் அடுத்து 92 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்கள் சிறிது ஸ்கோரை உயர்த்தினர் .50 ஓவர் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை எடுத்திருந்தது. இந்தியா சார்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை வவீழ்த்தினார்.

இதையும் படியுங்கள்:
இனி படங்களில் நடிக்க மாட்டேன் - நடிகர் அஜித் குமார்!
Ireland Vs ind

தனது துரத்தலை தொடங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர் .ஸ்மிருதி 6 பவுண்டரி மற்றும் சிக்சரை விளாசி விரைவாக 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் . பிரதிகா நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவரிடம் 4 வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தேஜல் மிகச்சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். பிரதிகாவும் அரை சதம் அடித்து 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தேஜலும் ரிச்சா கோஷும் அணியை வெற்றிக்கு நகர்த்தினார்கள். 34.3 ஓவரில் இந்திய அணி 241/4 ரன்கள் எடுத்து சிறப்பாக வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியின் சார்பாக ஐமி மாகுவேர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஓர்லா சிறப்பாக பீல்டிங் செய்து 3 கேட்ச்களை பிடித்தார்.

இதையும் படியுங்கள்:
பொங்கல் பண்டிகையை ஒட்டி விமான கட்டணங்கள் உயர்வு!
Ireland Vs ind

3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றி பெற்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரதிகா ராவல் ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com