'நோ பால்' பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

No Ball
No Ball

இன்று ‘கிரிக்கெட்’ விளையாட்டு  என்பது நம் அனைவர் வாழ்விலும் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கிறது. கிரிக்கெட்டில் ‘நோ பால்’ பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் உள்ளன.

நோ பாலைப் பொறுத்தவரையில் பவுலிங் (bowling) பண்ணுகிறவர்கள் மட்டுமில்லாமல், விக்கெட் கீப்பர்க்கும், பீல்டர்ஸ்க்கும்கூட சில கட்டுப்பாடுகள் உள்ளன என்பது தெரியுமா?

  • எந்தப் பந்து வீசினாலும், அது ஸ்ட்ரைகர் (striker) உடைய பேட்டில் பட்டாலும் சரி, படவில்லை என்றாலும் சரி, ஸ்டம்பில்(stump) அடித்தாலும் சரி, அடிக்கவில்லை என்றாலும் சரி, எக்காரணத்தைக் கொண்டும், விக்கெட் கீப்பர், ஸ்டம்ப் லைனை (stump line) தாண்டி வரவேகூடாது. ஒருவேளை, அந்தப் பந்து ஸ்டெம்ப் லைனை தாண்டி வருவதற்கு முன்னால், அந்த விக்கெட் கீப்பர் ஸ்டெம்புடைய லைனை தாண்டி முன்னால் வருவது தெரிந்தால் நோ பால் என்று சொல்லிவிடுவார்கள்.

  • ஸ்ட்ரைக்கரோட கிரீஸ்க்கு பின்னால் leg side பகுதி என்று ஒன்று இருக்கும். அந்த ஒரு குறிப்பிட்ட ஏரியாவில். பவுலிங் (Bowling) போடும்பொழுது இரண்டு ஃபில்டர்ஸ்க்கு (fielders) மேல் அங்கு இருந்தால் நோ பால் சொல்லிவிடுவார்கள்.

  • அடுத்து பவுலிங் (bowling) போட்டதற்குப் பிறகு, பேட்ஸ்மேன் பந்தைத் தொடுவதற்கு முன்னால் ஃபில்டர்ஸ் (fielder) யாராவது குறுக்கே வந்து தடுத்தார்கள் எனில் நோ பால் கொடுத்துவிடுவார்கள்.

  • எந்த ஃபில்டர்ஸ் (fielder) ஆவது பிட்சில் (pitch) கால் வைத்தாலோ, அல்லது அவர்களுடைய காலோ, கையோ எந்தப் பகுதியாவது பிச்சுக்கு மேலே இருந்தாலோ அதுகூட நோ பால் என்று சொல்லிவிடுவார்கள்.

அடுத்து இந்த ஓடிஐ, டி20 மேட்ச்ல் பவர் பிளே (power play) நடக்கும்.

ஓடிஐ மேட்சில் மொத்தம் மூன்று பவர் பிளே (power play) உள்ளது.

  1. முதல் பத்து ஓவர்கள், பவர் பிளே ஒன் (Power play one). அந்தப் பத்து ஓவர்களில் வட்டத்திற்கு வெளியே இரண்டு பிளேயர்கள் நிற்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

  2. அடுத்த முப்பது ஓவர்களில் பவர் பிளே டூ ( Power play two). அந்த முப்பது ஓவர்களில் வட்டத்திற்கு வெளியே நான்கு பிளேயர்கள் நிற்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

  3. கடைசி பத்து ஓவர்களில். பவர்  பிளே திரி(Power play three). அந்தப் பத்து ஓவர்களில் வட்டத்திற்கு வெளியே ஐந்து பிளேயர்கள் நிற்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இதையும் படியுங்கள்:
இந்திய மண்ணில் சச்சின் சாதணையை முறியடித்த டேவிட் வார்னர்...எப்படி தெரியுமா?
No Ball

டி20 மேட்ச்ல், முதல் ஆறு ஓவர்ஸ், பவர் பிளே ஒன் (power play one). அந்த ஆறு ஓவர்களில் வட்டத்திற்கு வெளியே இரண்டு பிளேயர்கள் நிற்பதற்கு மட்டுமே அனுமதி.

அடுத்து, 7 முதல் 20 ஓவர்கள் வரை, பவர் பிளே டூ ( power play two)ற. அந்தப் பதினான்கு ஓவரில் வட்டத்திற்கு வெளியே ஐந்து ஃபிளேயர்கள் நிற்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த ஃபீல்டிங் (fielding) கட்டுப்பாடுகளை, ஒழுங்காகக் கடைப்பிடிக்கவில்லை எனில், அம்பயர் நோ பால் கொடுத்துவிடுவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com